14 செப்., 2009

மும்பை கடந்த வாரம், TPI Rank First முதலிடம் பெறுவது

மும்பை கடந்த வார திங்கள் முதல் சனிவரை பெருபாண்மையான விமான பயனிகளுக்கு சிக்கலான வாரமாகவே அமைந்து விட்டது. பெரும்பாண்மையான கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் பலவருடபயணஅனுபவம் என்பதால் ஜெட் ஏர்வேய்ஸ் தொடர்ந்து விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளில் இந்தியாவில் மட்டும் சுமார் 45 சதவீதம் பேர் 
                
                                   உலகில் உள்ள முன்னனி தனியார்விமான நிறுவனங்களில் இதுவும் ஒன்று, கிட்ட தட்ட இந்தியாவின் அனைத்து நகரங்களையும் ஜெடவிமானம் ஆகாயமார்க்கமாக இணைத்து விட்டது, உலகில் இந்தவிடயத்திலும் ஜெட் உலக சாதனை படைத்து விட்டது. ஆனால் சுமார் 15 வருட சாம்ராஜ்ஜியம் ஒரே வாரத்தில் வீதிக்கு வந்து விட்டது,

               ஆம் சில நாட்களுக்கு முன்பு வெகு நாட்களாக மேனேஸ்மெண்டின் ஈகோ பிரச்சனையால் செக் வைக்கபட்ட சில பைலட்டுகள் சப்பை காரணங்களுகாக வீட்டிற்கு அனுப்பபட்டனர், இது தான் ஜெட் சட் என்று சிட் ஆகிவிட்டது.
 எப்படி பார்த்தாலும் இரண்டு தரப்பிலும் விட்டு கொடுத்திருக்கலாம் எத்தனை பேருக்கு சிரமம், பாவம் எத்தனை பயணிகள் கண்களின் பதட்டத்துடன் அங்கும் இங்கும் அலைவதை நேரில் பார்த்து இருக்கிறேன்.இந்த சந்தடியை பயன்படுத்தி சக விமாண நிறுவனங்கள், தங்களது பணபெட்டியை நிறப்பு வேலை ஜரூராக
பார்த்து கொண்டது, இங்கு ஒன்று விளங்கியது. அதாவது இந்தியாவின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் சட்டங்கள் கட்டங்களுக்குள் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது, என்று ஏனேனில் விமான பயண சட்டப்படி சிரமமான காலங்களில் தனியார் நிறுவனங்கள் தங்களில் விலைபட்டியலை எக்காரணத்தை கொண்டும் ஏற்றக்கூடாது. இதில் சரியாக எழுத பட்டுள்ளது. போர் காலங்கள், மற்ற பேரிடர் சமயங்கள் பிற விமான நிறுவனங்கள் சிக்கலில் இருக்கும் போது, இதில் மூன்றாவதாக சொன்ன விடயம்குப்பையில் போடபட்டுள்ளது.
இது குறித்து வேறு தனியார் விமான  கிரவுண்ட் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் "தனியார் விமான சிக்கலில் இருக்கும் போது தான் குறிப்பிட்டுள்ளதே தவிர அவர்களின் தனிப்பட்டபிரச்சனையில் இருக்கும் போது எளிதாக தீர்க்க கூடிய பிரச்சனைகளில் அவர்கள் இழுத்தடிக்கும் போது இந்த சரத்து சேர்க்க படாது என்று பெரிதாக ஒரு குண்டை தூக்கி போட்டார். பிரபுல் பாய் படேல் ஜி கவனத்தில் கொள்வீரா?? என்ன செய்ய மராட்டிய மாநில தேர்தல் பிஸியில் மூழ்கிவிட்டீர்கள்.
  கடந்த வார விமான பயண கட்டணவிபரம் அட்டவனை
விமான நிலையத்தில் சென்று சேகரித்து
மும்பை சென்னை சாதாரன சமயங்களில் 3000-5000 ஜெட் ஸ்ரைக்கினால் பிற விமான நிறுவனம் வைத்த கட்டணம் 13000-19000 என்னங்க இது நியாமா என்றால் ஆமா உன்னை எவன் விமானத்தில் போக சொல்கிறான் என்று வேறு பதில் வருகிறது. ஒரு வழியாக சில பாட்டில் விஸ்கி மற்றும் கார ஐயிட்டங்களுடம் விமான நிலையம் அருகில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நெற்று முன் தினம் பிரச்சனை சுமூகமானது அந்த நான்கு விமான பைலட்டுகளும் மீண்டும் பணியில் அமர்த்த பட்டனர்.
நேற்று சுமார் 100 முதல் 170 விமானிகள்[ வருகை பதிவேட்டின் படி] வெள்ளை தொப்பியை அனிந்துவிட்டனர். எல்லாம் சரிங்க உங்கள் ஐந்து நாள் நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் நிலை தடுமாறி போன பொதுமக்களுக்கு யார் நீதி வழங்குவார்கள்,
இது  தான் ஜனநாயகமா ????????????????????????????????????????????????
 
தொடர்புடைய செய்திகள்
 

    

1 கருத்து:

  1. நல்ல செய்தியும் உங்கள் கருத்தும் நறுக்கென இருந்தது

    பதிலளிநீக்கு