23 செப்., 2009

பரிசு பொருட்கள் முக்கானாங்கயிறு


 திருவிழா நெருங்கிவிட்டது, யாரும் கிப்ட் என்ற பெயரில் வண்ண காகிதம் சுருட்டிய பார்சலை தந்தால் மனதில் மின்னால் வெட்ட அதை வாங்கிவிடவேண்டாம்.
நம் நகரை பொருத்தவரை (மும்பை) கணபதிக்கு பிறகு திருவிழா நாட்களுக்கு பஞ்சமே இல்லை , அதே போல் மெல்ல மெல்ல வரும் பரிசு பொருட்களுக்கும் பஞ்சமில்லை, கடந்த வருடம் மும்பை மந்திராலயா(அரசு தலைமை அலுவலகம்) வில் உள்ள நுழைவு  தீபாவளி சமயங்களில் உள்ளே கொண்டு சென்ற பரிசு பொருட்கள் இந்தியாவே அதிர்ச்சியூட்டும் அளவிற்கு இருந்தன. ஆம் அரசு அலுவலகம் ஒன்றில் பரிசாக அயல் நாட்டு மதுபாணங்கள் ,தங்க நாணயங்கள்,புதிய இறக்குமதி செய்யபட்ட கார்களில் சாவிகள்,என விலை உயர்ந்த பொருட்கள்,
பத்திரிக்கைகள் குறிப்பாக தொலைக்காட்சி சகோதரர்கள்(பொறாமையில்) இந்த பார்சல்கள் பாதுகாவலர்களால் பரிசோதிக்க படும் போது தங்களது டீ.வி திறையில் ஒரு புறம், மந்திராலயாவின் முழுதோற்றத்தையும் மறுபுறம் இந்த பார்ஸல்களில் உள்ள சம்திங் சம்திங்கை மாறி மாறி காண்பித்து மந்திராலாயவில் மரியாதையை காற்றில் பறக்கவிட்டது.
விலையுயர்ந்த பரிசு பொருள் விடயம் அப்போதைய விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையினாலான காங்கிரஸ் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறிவிட்டது.
 தற்போது பொருப்பில் இருக்கும் அசோக் சவான்  தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த விடயத்தில் முக்கானாங்கயிறு போட முயற்சித்து இருக்கிறது.
எத்திக் பாலிஸி
தீபாவளி போன்ற சமயங்களில் விலையுயர்ந்த பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், நகைகள் போன்றவற்றை வாங்க வேண்டாம் என்று ரகசிய உத்தரவிட்டுள்ளாதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் தீபாவளியில் புதிய அரசு அமைந்துவிடும், இருப்பினும் புதிய அரசு தலைமை ஏற்ற உடனே தலை தீபாவளி சிக்கலான தீபாவளியாக அமைந்து விடக்கூடாது என்ற கவலையும் அரசியல் கட்சியிடம் வர துவங்கி விட்டது.
இதனிடையே விலையுயர்ந்த பரிசு பொருட்களை தரும் நிறுவனங்கள், தனிநபர்களை கண்காணிக்கும் நடவடிக்கையும் மறைமுகமாக எடுக்கபட்டு வருகிறது.

















மந்திராலயா நபர்களுக்குள் இப்போது சங்கடமான சூழல். ஆண்டாண்டு தீபாவளி என்றாலே பரிசு பொருள் வாங்கி பழகிப்போன கரங்களுக்கு இந்த வருடம் எப்படி வெறுங்கையுடன் வீட்டிற்கு செல்ல சென்றால் மனைவி மந்திராலயாவில் வேலைபார்த்து என்ன கிழித்தீர்கள் என்று கேட்பாளே என கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.
(அதனால் என்ன சாகிப் ஜி இப்பவே தங்களை சிறப்பாக கவனிப்பவர்களிடம் தங்களது வீட்டு முகவரியை கொடுத்து விடுங்கள் சிக்கல் தீர்ந்தது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக