மும்ரா, அகமதாபாத், மும்பை, குல்பர்கா,செப்.08
16 ஆகஸ்ட் 2004
மும்ரா என்ற மும்பைக்கு அருகில் உள்ள சிறிய நகரம் இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது, ஆம் மும்பராவில் இருந்து மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவி ஒருவர் தனது பாகிஸ்தானிய தீவிரவாதி மற்றும் தனது நன்பருடன் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை கோலை செய்ய மும்பையில் இருந்து குஜராத் வந்தாக சொல்லி மும்பை அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து குஜராத் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
முதலில் மும்ராவில் கொலைசெய்யப்பட்ட இர்ஸாத் ஜகான் வீட்டிலும் சரி அவரது அருகில் உள்ள சொசைட்டியிலும் சரி யாருமே போலீசாரின் இந்த குற்றத்தை ஏற்றுகொள்ளவே இல்லை, ஏன் என்றால் அந்த பெண் அப்படி பட்டவள் இல்லை என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. மும்ராவில் இர்ஸாத் ஜகானின் இறுதி ஊர்வலத்தின் போது மும்ராவே சோகத்தில் மூழ்கி இருந்தது.அனைவருக்கும் ஒரே கேள்வி காலையில் கல்லூரி சென்ற மானவி மறுநாள் எப்படி பத்திரிக்கையில் கொலைசெய்தியாக வருவாள் என்றுதான்.
புரியாத புதிராக இருந்த இந்த என்கவுண்டர் முற்றிலும் போலியானது என நிறுபிக்கபட்டுள்ளது.
கதை டிவி சீரியலில் வரும் தலைசுற்றல் மெகா சீரியல் போன்றது தான்,
குஜராத்தில் பிரபல பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர் கொலை செய்யபட்டார். அந்த கொலையை பார்த்த ஒரு சாட்சி சொராப்புத்தீன் சேக்.
குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க சிகிச்சைக்காக கர்நாடகா சென்ற செராப்புத்தீன் சேக்கை சுட்டு கொன்றனர். அந்த கொலையை பார்த்த அவரது மனைவி கௌசர்பீயை கற்பழித்து எரித்து அதன் சாம்பலை தோட்டக்காட்டில் துவீவிட்டனர்.-இஸ்லாமிய சமூகத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பது தான் முறை-
அதற்கு முன்பே செராப்புத்தீன் கொலை பற்றிய ரகசியம் மும்பையில் உள்ள கொலைசெய்யபட்ட சொராபுதீனின் மனைவியின் உறவினரும் மும்பை கல்லூரி மாணவருமான பினாஸ் பிள்ளை என்ற ஜாவீத் சேக்கிற்கு தெரியவருகிறது. இதனை சொராபுத்தீனின் மனைவியான கௌசர்பீயிடம் இருந்து தெரிந்து கொண்ட குஜராத் கிரைம்பிரான்ச் கௌசர்பீயை கொலை செய்து விட்டு மும்பையில் உள்ள பினாஸ் பிள்ளை என்ற ஜாவீத்தை வேட்டையாட கிளம்பியது. மும்பைக்கு குஜராத் போலீசார் ஜாவீத்தை தேடிவந்தபோது அவருடன் இர்ஸாத் மற்றும் ஜிஷன் ஜோகர் மற்றும் அஸ்மத் அலி ரானா ஆகியோர் இருந்தனர். கொலையின் ரகசியம் அனைவருக்கு தெரிந்து இருக்கும் என்ற நினைப்பில் நான்கு பேரையும் "அகமதாபாத்திற்கு அழைத்து சென்றது. செல்லும் வழியில் நான்கு பேரையும் என்கவுண்டரில் போட்டு தள்ளிவிட்டு அதிகாலை அகமதாபாத் சென்றவுடன் ரோட்டில் கிடத்தி விட்டு, இறந்து கிடந்தவர்களின் கைகளில் துப்பாக்கியை வைத்து மேலும் சில வெடிகுண்டு போன்றவற்றை வண்டியில் வைத்து விட்டு, குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடியை கொலை செய்ய வந்தனர்". ரகசிய தகவல் கிடைத்ததும் போட்டு தள்ளிவிட்டோம் என்று கதைவிட்டனர்.
முக்கியமாக ஜிசான் ஜோகர், மற்றும் அஸ்மல் அலிரானா ஆகியோர் பாகிஸ்தானி என்று சொல்லி அதற்கான பாஸ்போர்ட் எல்லாம் காண்பித்தார்கள். -ஒரே நாள் இரவில் இதெல்லாம் எப்படி செய்தார்கள்-
இர்ஸாத் ஜகானின் பெற்றோர்களும் மற்றும் பலர் இந்த க்கு நீதிவிசாரனை வேண்டும் என்று கோரிக்கை விட முதலில் தீவிராவாதிகளுக்கு ஆதரவு தருகிறார்கள் என்று கோர்ட்டில் எதிர் தரப்பினர் முறையிட்டாலும் நீதிமன்றம் நீதிவிசாரனைக்கு உத்தரவிட்டது.
நீதி விசாரனை முடித்து நேற்று தனது அறிக்கை தாக்கல் செய்த போது, போலி என்கவுண்டர் விவகாரம் வெளிவந்து விட்டது. அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் சிலர் இன்னும் பதவியில் இருக்கும் அதிகாரிகள், சிலர் ஓய்வு பெற்று விட்டனர். சொராப்புத்தீனின் மனைவியான கௌசர்பீயை கொலைசெய்த போலீஸ் அதிகாரிகள் இப்போது சிறையில் -அந்த கொலை மிகவும் கொடுமையானது, கற்பழித்து உயிரோடு தீவைத்து எரித்திருக்கின்றனர்.
தவறு செய்த அனைவருக்கும் தண்டனை கிடைக்கும் ஆனால் சென்றவர் கள் திரும்புவார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக