31 அக்., 2009

அசோக் சவான் பிறந்த நாள் சிறப்பு கட்டுரை,



பட்டத்து மகாரானியுடன்

மும்பை பிரதேசகாங்கிரஸ் தலைவர் கிருபா சங்கர் சிங் பிறந்தநாள் பரிசாக அசோக்சவானுக்கு ரூ ஒரு லட்சத்து பதினோராயிரத்து நூற்று பதினின்று வழங்குகிறார்.



மராட்டிய மாநில அரசின் முதல் மந்திரியாக இரண்டு முறை இருந்தவரும், நிதி அமைச்சராக, உள்த்துறை அமைச்சராக பதவி வகித்தவருமான திரு சங்கர் ராவ் சவானின் இரண்டாவது புதல்வர் அசோக் சவான். 1958-ம் ஆண்டு  அக்டொபர் 28 ல் மத்திய மராட்டியத்தில் உள்ள நன்னேட்டில் பிறந்தார்.
காங்கிரசின் பரம்பரை குடும்ப அரசியலில் சங்கர் ராவ் சவானும் விதிவிலகல்ல தனது இரண்டு புதல்வர்களையுமே அரசியலில் நுழைய செய்தவர் மூத்த புதல்வர் அரசியில் பாடம் சரிவரவில்லை என்று அயல் நாடு சென்று விட அசோக் சவான் உறுதியாக அரசியலில் ஆர்வம் காட்டினார். ஆரம்ப காலங்களில் அசோக்சவானுக்கு படித்து விட்டு உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் .  இதன் காரணமாக பூனா பல்கலை கழகத்தில் Msc முடித்து விட்டு லண்டனில் MBA பட்டம் பெற்றார். தனது குடும்பத்தில் யாராவது அரசியலில் வரவேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற அரசியலில் இறங்கினார். தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப கட்டமே டில்லியில் இருந்து துவங்கியது. இந்திய அரசியலில் வெகுசிலர்தான் தமிழகத்தை தவிர ஆரம்பத்திலேயே டில்லி செல்லும் பாக்கியம் பெற்றவர்கள் அதில் அசோக் சவானும்  ஒருவர் 88/89 தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக நன்னேட் தொகுதியில் இருந்து தேந்தெடுக்கபட்டார். சவானின் டில்லி அரசியலின் போது இவரது தந்தை மத்திய அரசில் மந்திரியாக இருந்தார். தனது டில்லி வாழ்க்கையை முடித்து கொண்டு மராட்டிய மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் மராட்டிய   எம் எல் சி ஆனார். அதன் பிறகு அசோக்சவானின் அரசியல் வாழ்க்கை ரெயில் நிற்கவே இல்லை, காங்கிரஸின் தீவிர உறுப்பினராக இருந்த அசோக் சவான் சரத்பவார் சோனியா காந்தியின் தலைமைய ஏற்க மறுத்து தனிக்கட்சி ஆரம்பிக்கும் போது அதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பல தலைவர்கள் இனைந்தனர். மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் காணாமல் போகும் நிலை ஏற்பட்டது. சரத்பவார் அசோக்சவானின் அரசியல் குருவாகவும் கருதபட்டவர். இருந்த போதும் பாரம்பரிய காங்கிரஸ் வாதியான அசோக்சவான் காங்கிரஸிலேயே இருந்தார். அசோக்சவான், விலாஸ்ராவ் தேஷ்முக் போன்றோர் காங்கிரஸை விட்டு பிரியாததால் காங்கிரஸ் மராட்டியத்தில் உயிர் பெற்றது. இதற்கு நன்றிகடனாக 1999-ம் மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் வென்ற அசோக்சவானுக்கு மந்திரி பதவி காத்து இருந்தது. நகர்புர வளர்ச்சி துறை, போக்குவரத்து, சக்தி மற்றும் வருவாய்த்துறை போன்ற பல முக்கியதுறைகள் அசோக்சவானுக்கு வழங்க பட்டது. விலாஸ் ராவ் தேஷ்முக் முதல் மந்திரியானார். இடையில் ஏற்பட்ட உட்கட்சி பூசலில் காரணமாக விலாஸ்ராவ் தேஷ்முக் முதல் அமைச்சர் பதவில் இருந்து விலகி சுஷில் குமார் ஷிண்டே அந்த முதல் மந்திரியாக பதவி யேற்றார்.  2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற சுஷ்ல் குமார் ஷிண்டே மத்திய காபினெட் அமைச்சராகி டில்லி செல்ல மீண்டும் விலாஸ்ராவ் தேஷ்முக் முதல் மந்திரியாக பதவியெற்றார்.



மராட்டிய மாநில அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. கோங்கான புலி என வர்ணிக்கபட்ட தீவிர சிவசேனிக்கான நாராயன் ரானே திடிரென சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர கோங்கான பகுதியில் காங்கிரஸ் வளர வேண்டும் என்றால் இவர் காங்கிரஸுக்கு தேவை என்ற நிலையில் நாராயண் ரானே கட்சியில் முக்கியத்துவம் கிடைத்தது. அசோக் சவான் கவனிக்கபடாத நபராகி போனார். பொருமை காத்து காங்கிரஸின் சாதாரன தொண்டன் போலவே வலம் வந்தார். 2004-ம் ஆண்டு புதிய மந்திரி சபையிலும் மந்திரி பதவி காத்து இருந்தது, தொழில்துறை போக்குவரத்து போன்ற துறையில் திறமை காட்டினார். 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி தீவிரவாத தாக்குதல் அசோக்சவானின் வாழ்க்கையில் முதல் மந்திரி பதவிக்கு வழிவகுத்தது. மந்திரியாக இருந்து தொண்டராக வாழ்க்கையை முடித்துவிடுவார் என்று பலரால் எதிர்பார்க்க பட்ட அசோக் சவான் தீவிரவாத தாக்குதலால் விலாஸ் ராவ் தேஷ் முக் பதவி விலக அந்த இடத்திற்கு வர நாராயண் ரானே போட்டி இட்டார்.










ஆனால் விலாஸ் ராவ் தேஷ்முக் சிவசேனாவில் இருந்து பதவிக்காக வந்த ஒருவருக்கு முதல் மந்திரி பதவியை கொடுப்பதை விட காங்கிரஸுக்காக பாரம்பரியாமாக உழைத்த அசோக் சவானுக்கு கொடுப்பது என முடிவு செய்தார். டில்லியில் தனது தரப்பு வாதத்தை வைத்து அதில் வெற்றியும் கண்டார். இதனால் கோபமுற்ற நாராயன் ரானே காங்கிரஸில் இருந்து விலகி புதிய கட்சி ஆரம்பிப்பதாக மிரட்டி பார்த்தார். ஆனால் சில சிக்கல்களில் காரணமாக அவர் காங்கிரஸிலேயே மீண்டும் வந்து அசோக்சவானின் தலைமையினாலான மந்திரி சபையில் வருவாய்த்துறை மந்திரியாக பொறுப்பேற்றார்.


 அசோக் சவானின் பதவிகாலம் வெறும் 6 மாதம் என்பது அனைவருக்கும் தெரியும் அதனால் 6 மாததிற்கு பிறகு நடக்கும் தேர்தலில் கோங்கனின் 22 எம் எல் ஏக்களின் மூலமாக நாம் முதல் மந்திரி பதவிக்கு வரலாம் என கோங்கான புலி(நாராயன் ரானே) தனது பாய்ச்சலுக்காக பதுங்கியது. அமைதியான அதே நேரத்தில் புத்திசாலித்தனமான அசோக்சவான் இந்த குறுகிய காலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவேண்டும், வரும் தேர்தலில் நாராயன் ரானே விடம் முதல் மந்திரி பதவி சென்றுவிடக்கூடாது, மக்களின் ஆதரவை பெறவேண்டும், முக்கியமாக கோங்கான பகுதியில் நாராயன் ரானே வின் வளர்ச்சியை கட்டு படுத்தவேண்டும் என பல சிக்கல்களுக்கு இடையில் தேர்தலை சந்திதார்.

குறுகிய காலத்தில் காங்கிரஸை மாராட்டிய மக்களிடம் கொண்டு சென்றார். விளைவு 47 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் மாநிலத்தின் முதல் கட்சியாக உறுவெடுத்தது. அதே நேரத்தில் நாராயன் ரானே வின் ஆதரவாளர்களில் பாதி பேர் தேர்தலில் தோல்வியுற்றுனர். நாராயன் ரானேவின்  பல் பிடுங்கபட்டது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தனக்கு முதல் மந்திரி பதவி காத்து இருக்கிறது என்று கனவில் இருந்த நாராயன் ரானே வின்  ஆதரவாளர்களில் 22 நபர்களில் வெறும் 7 பேர்தான் வெற்றி பெற்றனர். அசோக் சவானின் அரசியல் ராஜதந்திர திறமை இந்த இடத்தில் வெளிப்பட்டது.

நாராயன் ரானே தனது தோல்வியை ஒத்துகொண்டு முதல் மந்திரி போட்டியில் இருந்து விலகி விட்டார். விலாஸ் ராவ் தேஷ்முக் டில்லியில் காபினெட் பதவி பெற்றுவிட்டதால் அசோக்சவான் எந்த போட்டியும் இன்றி முதல் மந்திரி பதவிக்கு தேர்தெடுக்கபட்டார். மராட்டிய அரசியலில் தானும் ஒரு ராஜ தந்திரி என்று நிருபித்த அசோக் சவான் நெற்று தனது பிறந்த நாளை முதல் மந்திரி இல்லமான வர்ஷாவில் கொண்டாடினார். தனது பிறந்தநாள் அன்று முதல் மந்திரி பதவியேறலாம் என்ற கனவு கூட்டனி கட்சியின் இழுபறி காரணமாக தற்போது நாட்கள் தள்ளிசென்று கொண்டு இருக்கிறது



வெளிச்சத்திற்கு வரும் எக்விரா கோவில் தரிசனம்.




கட்சியை விட்டு விலகி வேறு கட்சியுடன் இணைய மாட்டேன் ,  சத்தியம் வாங்கி கொண்ட ராஜ் தாக்கரே





லோனாவாலா(மராட்டியம்) அக்டோபர்.30

மும்பைக்கு அருகில் உள்ள லோனா வாலா எக்வீரா கோவிலுக்கு  நவ நிர்மான் கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவுடன் புதிதாக மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட எம் எல் ஏக்கள் 13 பேருடன் சென்றது அனைவருக்கும்

தெரிந்தே.

 சிவசேனாவின் 20 வருடம் அரசியல் போராட்டத்திற்கு பிறகு தான் எம் எல் ஏக்கள் மந்திராலயாவில் நுழைந்தனர். சிவசேனாவில் இருந்து 2007-ம் ஆண்டு பிரிந்த ராஜ் தாக்கரே நவநிர்மான் சேனா என்ற புதிய கட்சியை உருவாக்கினார். கட்சி உருவான முதல் மூன்று வருடங்களில் முதல் முறையாக தேர்தலை சந்தித்த நவநிர்மான் கட்சி 13 எம் எல் ஏக்களை பெற்றது. இந்த வெற்றி நான்கு பெரிய கட்சிகளாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சிவசேனா மற்றும் பாரதிய சனதாவிற்கு பெரிய அதிர்ச்சியை தந்தது. முக்கியமாக சிவசேனா இந்த முறை வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது.   நவ நிர்மான் சேனா மராட்டியர்களின் ஓட்டுக்களை பிரித்ததுதான் காரணமாக கூறப்படுகிறது. தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை காங்கிரஸை விட குறைவான எம் எல் ஏ கிடைத்து


உள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸை மதிக்கும் போக்கில் மாற்றம் தெரிந்து வருகிறது. இந்த நிலையில் சரத்பவார் நவநிர்மான் சேனாவின் 13 பேரையும் தனது கட்சிக்கு இழுக்கும் வேலையை உள்ளுக்குள் செய்துவருவதாக தகவல் கிடைத்தது. நவ நிர்மான் கட்சி வேட்பாளர்கள்  அனைவரும் சிவ சேனா தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான், இவர்களை சரத்பவார் எளிதில் பிரித்து விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக எம் எல் ஏக்களை அழைத்து சென்று எக்வீரா தேவியின் சன்னதியில் சத்தியம் வாங்கிகொண்டார்.

   கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலை போன்று சத்தியம் மீறுபவர்களுக்கு பல இன்னல்களை தரும் கோவில் என்று மராட்டியத்தில் பெயர் பெற்ற கோவில் என்வீரா தேவி கோவில். இது குறித்து சிவசேனா முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரை கேட்டபோது சிவசேனாவின் பால் தாக்கரே இதே போல் செய்தார் என்றும், அதன் பிறகு தொடர்வெற்றிகள் கிடைத்ததும், கோவிலை மறந்து விட்டார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் உள்ள சஞ்சய் நிருபம், மந்திரி நாராயன் ரானே போன்றோரும்  தேசிய வாத கட்சியில் உள்ள சஜன் புஜ்பால் ராஜ் ஹன் சிங் போன்றோரும் சிவசேனாவில் இருந்து வெளியே வந்தவர்கள்.

          இதில் நாராயன் ரானே வினால் கோங்கன் பகுதியில் சிவசேனா பலத்த தோல்விகளை சந்தித்து வருகிறது. அதே வேளையில் சஜன்புஜ்பாலினால் வடக்கு மராட்டியத்தில் தோல்விகளை சந்தித்து வருகிறது. நவநிர்மான் கட்சி எம் எல் ஏக்களும் இது போன்று வேறு கட்சிக்கு தாவிவிடக்கூடாது என்று சாமர்த்தியமாக இந்த கோவிலுக்கு சென்று எம் எல் ஏக்களிடம் சத்தியம் வாங்கிகொண்டார்.


  இது மட்டும் அல்லாமல் கட்சிக்கு தூரோகம் இழைக்கமாட்டேன், வரும் வருமானத்தில் 50 % கட்சிக்கு தரவேண்டும் என்று சில சத்தியங்களை எக்ஸ்ராவாக வாங்கிகொண்டார் இது பற்றி சந்தேகம் கொள்ளும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக நவ நிர்மான் கட்சி எம் எல் ஏக்கள் அனைவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேவரவில்லை, பாரம்பரிய வழக்கபடி கோவிலில் சத்தியம்  எடுத்துகொண்ட பிறகு மூன்று நாட்கள் வெளியாட்கள் யாருடன் பேசக்கூடாது என்பது ஆண்டாண்டும் காலமாக இருந்து வருகிறது. அனைத்து கட்சி எம் எல் ஏக்களும் நன்றி அறிவித்தல், புதிய அரசு அமைக்க ஆதரவு தெரிவித்தல், கட்சி கூட்டங்கள் என தொகுதிகளில் சுற்றி கொண்டு இருக்கும் போது நவ நிர்மான் கட்சி எம் எல் ஏக்கள் மட்டும் வீட்டின் விட்டதை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கின்றனர். இந்த செய்தி குறித்து நவநிர்மான் கட்சியின் செய்தி தொடர்பாளை சஞ்சய் பார்க்கரிடம்  மும்பை நிருபர் பேசிய போது இது வெறும் வதந்தி எங்கள் கட்சி இவ்வளவு குறிகிய காலத்தில் அசுர வெற்றிஅடைந்திருப்பதால் பொறாமை கொண்டு இப்படி புரளியை கிளப்பி விடுகின்றனர் என்றார்.

இந்திய தேர்தல் ஆனையம் நேற்று நவநிர்மான் கட்சியை மாநில கட்சியாக அங்கிகரித்துள்ளதும் இங்கே குறிப்பிடதக்கது.

30 அக்., 2009

தமிழர் போட்ட வோட்டிற்கு கிடைக்கும் பரிசு



           ஆசியாவிலேயே அதிக குடிசைபகுதிகள் நிறைந்த இடம் என்ற பெருமை பெற்ற தாராவி திருநெல்வேலி நகரத்தின் மக்கள் தொகை தமிழர்களை தன்னுள் கொண்டது அனைவரும் தமிழர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கி.பி 600 நூற்றாண்டுகால வரலாற்றை கொண்ட மும்பை தமிழர்கள் வாழ்க்கையில் தாராவியில் தமிழர்களின் குடியேற்றம் 1870- ஆரம்பித்து அப்போது வெறும் 5000 குடும்பங்களாக இருந்த தமிழர்கள் இன்று தாராவியில் மட்டும் சுமார் 12 லட்சம் என்று தெரியவந்துள்ளது. இது வாக்காளர் அட்டை எண்ணிக்கை ஆகும் வாக்குரிமை பெறாத வாக்காளர் அட்டை கிடைக்காத தமிழர்கள் என இந்த எண்ணிக்கை அதிகம் இருக்கலாம்.
               தாராவியில் குடிசைகளை ஒழித்து விட்டு நவீன தாராவி திட்டம் கொண்டு வர 1994-ல் ஆட்சியில் வந்த சிவசேனா-பாரதிய சனதா கூட்டனி அரசு அச்சாரமிட்டது. அடுத்து தொடர்ந்து 10 வருடங்கள் மராட்டியத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு தாராவி தமிழர்களை நவீன தாராவி என்று கலர் காட்டி ஏமாற்றி வந்தது. சமீபத்தில் தேர்தலின் போது கூட நவீன தாராவிக்கு பணம் ஒதுக்கியாதுவிட்டது. இன்னும் 5 வருடத்திற்குள் தாராவி உலக தரம் வாய்ந்த ஒரு புதிய நகரமாக உறுவாகிவிடும் என்று கதைவிட்டது. ஒருவிதத்தில் இது உண்மைதான் ஆனால் அந்த நகரத்தில் ஆண்டாண்டுகாலமாக தங்கிஇருந்த தமிழன் இருக்க மாட்டான். காங்கிரஸ் அரசு ஆட்சி கட்டிலில் அமரும் முன்பே தாராவி தமிழர்களை விரட்டும் திட்டம் ஆரம்பமாகிவிட்டது.
          மும்பை மந்திராலயாவில் தாராவி செகடார்(நவீன தாராவி) திட்டம் குறித்து பேசிய மாநில அரசின் திட்டத்துறை செயளாலர் ஜானி ஜோசப் நிருபர்களிடம் பேசிய போதுநவீன தாராவி திட்டத்தில் ஆரம்ப கட்டமாக செகட்டார் 4 உள்ள பகுதிகளை ஆய்வு செய்து அந்த பகுதியில் உள்ள 3000 பேருக்கு மட்டும் தான் வீடுகள் என்று முடிவு செய்யபட்டு உள்ளது. மற்ற 7000 குடும்பங்களுக்கு வீடு வழங்கபடாது என்றும் அவைகள் அனைத்தும் சட்டவிரோத மான குடிசைகள் மற்றும் 2000 பிறகு கட்டபட்டவை என்று தெரிய வந்தது என்று குறிப்பிட்டார்.
           செக்டார் 4 சுமார் 2 லட்சத்திற்கு மேல் தமிழர்கள், மராட்டியர்கள், வட இந்தியர்கள் என்று வசிக்கின்றனர். இந்த நிலையில் 3000 குடும்பங்கள் என்று சொல்லி வெறும் மராட்டியர்களுக்கு மட்டும் வீடுகளை தந்து விட்டு காலம் காலமாக அந்த பகுதியில் இருந்துவரும் தமிழர்களை விரட்டும் திட்டம் வெற்றிகரமாக துவக்கிவிட்டனர்.


           தாராவி தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸின் வர்ஷா காயக்வாடின் வெற்றிக்கு தமிழர்கள் தான் முழுக்காரணம் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது. தமிழர்கள் குறைவாக உள்ள பகுதியில் எல்லாம் சிவசேனாவை விட குறைந்த ஓட்டு பெற்று தோல்வி அடைந்து விடும் நிலையில் இருந்த வர்ஷா இறுதியில் தமிழர்கள் மட்டுமே வசிக்கு ம் 90 பிட் சுபாஸ் நகர், கிராஸ் ரோடு போன்ற பகுதிகளின் ஓட்டு எண்ணபடும் போது வர்ஷா முதலிடம் வந்து வெற்றிபெற்றது இங்கே குறிப்பிடதக்கது.  
****   இந்த ஆபத்து கண்டிப்பாக வரும் என்று நான் தாராவி புத்தகத்தில் ஒரு பரிபோகும் வீடுகள் என்று ஒரு தலைப்பே கொடுத்து இருந்தேன். வழக்கம் போல் நமது தமிழர்கள் ”தாராவி புத்தகத்தில் நல்ல கதை விட்டு இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு இப்போது தங்களின் கால்களிலேயே போட்டு கொண்டனர்.
 முந்தைய பதிப்பை பார்க்க

 தனது காலில் தானே போட்டு கொண்ட சூடு(தாரவி தமிழர்கள்...

டில்லியில் தொடரும் சண்டையால் அசோக் சவான் முதல் மந்திரி பதவியேற்பதில் தாமதம்





மராட்டிய மாநில தேர்தலில் பெரும்பாண்மை பெற்று ஆட்சியில் அமர விருக்கும் காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் தற்போது மந்திரி எண்ணிக்கையில் உனக்கு அதிகம் எனக்கு குறைவு என்று சண்டையிட துவங்கியுள்ளது. 1999-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனித்தனியே போட்டியிற்று வெற்றிபெற்ற காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் கட்சி இரண்டும் மதவாத கட்சி ஆட்சியில் வரக்கூடாது என்ற காரணத்திற்காக ஆட்சி அமைப்பதற்கு பரஸ்பர ஆதரவு அளித்தது. அப்போழுது உள்ள சூழ்நிலையை வைத்து இரண்டு கட்சியினருக்கும் முக்கியமான மந்திரி பதவிகள் பகிர்ந்து கொள்ள பட்டன. 2004-ம் ஆண்டு தேர்தலில் கூட்டனி அமைத்து இரண்டு கட்சியும் போட்டி இட்டது, இந்த தேர்தலில் காங்கிரசை விட தேசிய வாத காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்தது. 1999-ன் ஒப்பந்தங்களில் சிறிது மாற்றங்களை செய்து தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு நிறைய மந்திரி பதவிகளை சரத்பவார் பெற்றுக்கொண்டார்.

              இதே கூட்டனி மீண்டும் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பானமை இடங்களை பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த வருடம் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரசை விட குறைந்த இடங்கள் கிடைத்ததும்
, தேசிய வாத காங்கிரசின் முக்கிய அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் மண்ணை கவ்வினார்கள். இதனால் காங்கிரஸ்கட்சி தனது உண்மையான புத்தியை காட்ட துவங்கி இருக்கிறது. தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் எம் எல் ஏ கூட்டத்தில் சஜன் புஜ்பால் துணைமுதல் மந்திரியாக தேர்தெடுக்கப்பட்டது தெரிந்ததே. இந்த கூட்டத்தில் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பாய் பட்டேல் 1999 மற்றும் 2004 வருடத்திய பார்முலாமே மந்திரி எண்ணிக்கையில் பின் பற்ற படும் என்றார்.

       இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியில் சலசலப்பைஉண்டு செய்து விட்டது. நம்மை விட குறைவான எண்ணிக்கையில் இருக்கும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் மந்திரி பதவி கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் டில்லியில் இது குறித்து தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத பவார் மற்றும் அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரும் விமான போக்குவரத்து துறை அமைச்சருமான பிரபுல்பாய் படேல்
, போன்றோர் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் இந்த பேச்சு வார்த்தை தற்போது மேலும் தீவிரமாகி இருக்கிறது. இதனால் தனது பிறந்த நாளான நேற்று பதவி ஏற்க வேண்டிய மராட்டிய மாநில முதல் மந்திரி அசோக் சவான் நேற்று தனது வீட்டிலேயே பிறந்த நாளை கொண்டாடினார்.


அசோக் சவான் இன்று மீண்டும் டில்லி செல்வார் என்று எதிர்பார்க்க படுகிறது. இதனிடையே தேசிய வாத காங்கிரஸ் ஒருவருடம் தொடர்பு கொண்ட நமது நிருபரிடம் கூறியதாவதுஎக்காரணத்தை கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு உள்துறையை தரமுடியாது, காங்கிரசின் இந்த முரன்பாடு தேவையில்லாதது, எங்கள் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்களை விட குறைவாக இருந்தாலும் மராட்டிய மாநிலத்தில் அதிக சதவிதம் ஓட்டுக்கள் எங்களுக்குதான் கிடைத்து இருக்கிறது. மேலும் சிவசேனா வலுவான பகுதியாக கருதப்படும் தானே பகுதியில் எங்கள் கட்சியினர் அமோக வெற்றி பெற்று இருக்கின்றனர். மந்திரிகள் பற்றிய எண்ணிக்கையில் நாங்கள் விட்டுகொடுக்கும்
பேச்சிற்கு இடமில்லை என்று கூறினார். தற்போது உள்ள அரசியல் சூழலில் தனது பெயரை வெளியிட வேண்டாம் என்றும் நமது மும்பை நிருபரிடம் அந்த தலைவர் கேட்டு கொண்டார்.

மும்பை தாராவியில் ஐந்து வயது தமிழ் சிறுவனிடம் தகாத உறவில் ஈடுபட்ட மராட்டிய வாலிபர் கைது





மும்பை,அக்டொபர்.29
  முபையில் உள்ள தாராவியில் காரைக்குடியை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அந்த குடும்பத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் வீட்டிற்கு வந்து வாந்தி எடுத்து உள்ளான்.  அவனது தாயார் சிறுவனிடம் விசாரித்த போது அந்த பகுதியை சேர்ந்த 21 வயது பாட்டிலியா என்ற மராட்டிய பையன் அவனை ஓரின சேர்க்கைக்கு உட்படுத்தியதாக குறிப்பிட்டு அழுது இருக்கிறான். சிறுவன் கூறிய தகவலை தனது கனவனுக்கு தாராவியில் வசிக்கும் தனது சகோதரனிடமும் சிறுவனுக்கு நடந்தகொடுமை பற்றி கூறி இருக்கிறார். இதனை அடுத்து தாராவியில் உள்ள சாகு நகர் காவல் நிலையத்தில் மராட்டிய வாலிபன் மீது புகார் கொடுக்க பட்டது.
செவ்வாய் கிழமை காலை 11 மணிஅளவில் கொடுக்கபட்ட புகாரை சரியாக விசாரிக்காமல் அந்த மராட்டிய வாலிபனை பிடித்து வந்து சிறிது நேரம் மிரட்டி விட்டு சிறுவனின் தந்தையிடமும், மாமாவிடமும் போலீசார் சமாதானம் பேச முயன்றனர். சிறுவனுக்கு நடந்த கொடுமைக்கு காரனமானவனை தண்டிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் போலீசார் சிறுவனின் வீட்டாரை மிரட்டியும் பார்த்தனர்,


இதனிடையேமீடியாக்கள் சிறுவனுக்கு நடந்த கொடுமை பற்றி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தகவல் அறிய முற்பட்டதும்,செய்தி மீடியாவிற்கு சென்று விட்டது என்ற காரணத்தால் இரவு 11 மணிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபட்டது. இரவு முழுவதும் சிறுவனையும் அவனது தந்தையையும் குற்றவாளிகள் போல் காவல் நிலையத்திலேயே அடைத்து வைத்து விட்டு நேற்று மதியம் சிறுவனை போலீஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இரவு முழுவதும் புகார் கொடுத்த சிறுவனையும் அவனது தந்தையையும் ஏன் காவல் நிலையத்தில் வைத்திருந்தீர்கள் என்று கேட்டதற்கு தாராவி சாகு நகர் போலீசாரிடம் இருந்து மழுப்பலான பதிலே கிடைத்தது. இதனிடையே சிறுவனை ஓரினசேர்க்கைக்கு உட்படுத்திய மராட்டிய வாலிபன் அந்த பகுதியில் பெண்கள் குளிக்கும் போது மறைந்திருந்து பார்ப்பாதாக பல முறை இது குறித்து அவனை கண்டித்தாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
குற்றவாளியின் தந்தையும் அந்த பகுதியில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.  இதே போன்று மும்பை கப்பரேடில் உள்ள கடற்கரை பகுதியில் விளையாடி கொண்டு இருந்த 6 வயது சிறுவன் அந்த பகுதியில் வசிக்கும் இரண்டு பேர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக வந்த புகாரை அடுத்து மரைன் டிரைவ் போலீசார் அந்த இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மும்பை டோங்கிரியில் உள்ள சிறுவர்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.



மராட்டிய மாநில முதல் மந்திரி அசோக் சவான் ராஜினமா




மும்பை,அக்டோபர்: 26
மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது, கூட்டனியின் ஒப்பந்தபடி முதல் மந்திரி பதவி காங்கிரஸ் எடுத்து கொண்டது, சனிக்கிழமை சட்ட சபை உறுப்பினர்களின் ஆலோசனைகளின் படி சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் அசோக் சவான் மீண்டும் முதல் மந்திரியாக தேர்தெடுக்கபட்டார். முதல் மந்திரியாக கட்சியினால் தேர்தெடுக்கபட்ட அசோக்சவான் இன்று முறைப்படி தனது சென்ற சட்டசபைக்கான முதல் மந்திரி பதவியை ராஜினமா செய்தார். மும்பை மலப்பார் ஹில்லில் உள்ள ராஜ் பவனுக்கு இன்று காலை சென்ற முதல் மந்திரி அசோக் சவான் மராட்டிய மாநில கவர்னர் சமீரை சந்தித்தார். இந்த சந்திப்பின்

போது தனது கடந்த சட்டமன்றத்தின் முதல் மந்திரி பதவியை சாம்பிரதாயப்படி ராஜினமா செய்து அதன் கடிதத்தை கவர்னர் எஸ் சி சமீரிடன் சமர்ப்பித்தார். ராஜினமா கடிதத்தை ஏற்றுகொண்ட கவர்னர் அடுத்த முதல் மந்திரி பதவி ஏற்கும் வரை தற்காலிக முதல் மந்திரியாக அசோக் சவானை நியமித்து இதற்கான ஆணையை கவர்னர் மாளிகை வெளியிட்டது.


கவர்னருடனான சந்திப்பு முடிந்து வெளிவந்த அசோக் சவான் நிருபர்களிடன் பேசிய போது இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முதல் மந்திரி பதவிக்கான கடித்தை கவர்னரிடம் வழங்குவோம் என்றும் கூட்டனி கட்சியான தேசிய வாத காங்கிரஸுடன் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று கூறினார். இருப்பினும் டில்லியில் அவர் தெரிவித்த உள்துறை காங்கிரசுக்கு கிடைத்தால் நல்லது என்ற கருத்தை பற்றி கேட்டபோது அவர் சரியான பதில் சொல்லாமல் கூட்டனி கட்சியுடன் கலந்து ஆலோசித்து மந்திரி பதவிபகிர்வு பற்றி முடிவு செய்வோம் என்றார். முதல் மந்திரி

அசோக்சவானுடன் மும்பை பிரதேச தலைவர் கிருபா சங்கர் சிங், மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.

சிவசேனாவிற்கு தோல்வி இல்லை மராட்டியர்களுக்குதான் தோல்வி-உத்தவ் தாக்கரே



மும்பை-அக்டோபர்:25
மும்பையில் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு முதல் முதலாக சிவசேனா கட்சி பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. இந்த சந்திப்பின் போது பேசிய சிவசேனையின் உத்தவ் தாக்கரே இந்த முறை நடந்த தேர்தலின் தோல்வி கட்சியின் தோல்வி இல்லை மராட்டியர்களின் தோல்வி என்றார் சிவசேனா கட்சி 40 வருடங்களுக்கு முன்பு மராட்டியர்களுகாக ஆரம்பிக்க பட்டது. இந்த கட்சி ஒவ்வொரு நகர்வும் மராட்டியர்களின் நலனை வைத்து தான் இருந்தது. கட்சி ஆட்சியிலிருந்த போது மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்புகளில் சிறப்பாக பணிபுரிந்ததது. எங்களின் இந்த பணியை காங்கிரஸ் தான் செய்தாக கூறிக்கொண்டு 10 வருடங்களை கடத்தி விட்டது. இந்த பத்து வருடங்களில் காங்கிரஸ் மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. இம்முறை கட்சியின் தோல்விக்கு நாங்கள் யாரையும் குறைகூற விரும்பவில்லை. இந்த தோல்வியை ஏற்றுகொள்கிறோம் அதே நேரத்தில் கட்சியின் அனைத்து மட்டத்திலும் சிறப்பான மாற்றங்கள் கொண்டு வரப்படும், எங்களுக்கு பாரதிய சனதா கட்சிக்கும் எந்த பூசல்களும் கிடையாது

நாங்கள் இருவரும் இனைந்து நல்ல எதிர்கட்சியாக சட்ட மன்றத்தில் பணியாற்றுவோம். எங்களை தேர்தெடுத்த வாக்காளர்களுக்கும் வெற்றிக்கான உழைத்த அனைத்து தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று
கூறினார். அதே நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பால் தாக்கரே கூறிய கருத்து சரிதான் என்றும் மராட்டிய மக்கள் இந்த தேர்தலில் தவறிழைத்து விட்டனர் இவ்வாறு சிவசேனாவின் செயற்தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் முதல் மந்திரி மனோகர் ஜோஷி மற்றும் இதர தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த உடன் நமது நிருபர் உத்தவ் தாக்கரேவிடம் “ அசோக் சவானின்  கரிஷ்மா(அற்புதம்) ஏதாவது தான் மக்களை கவர்ந்து விட்டதா என கேட்டபோது அப்படி ஒன்றும் கரிஷ்மா அல்லது கரீனா இருப்பதாக தெரியவில்லை, ஓட்டுக்கள் சிதரியதால் காங்கிரஸ் பயனடைந்து இருக்கிறது, மும்பையில் மட்டும் தான் சிவசேனா லேசாக பின்னடைவு அடைந்திருக்கிறது, ஆனால் மராட்டியத்தில் உள்பகுதியில் ஆதரவு அதிகரிக்க துவங்கியுள்ளது. நாங்கள் புதிய அரசுடன் இனைந்து மக்களின் சேவைக்கான பாடுபடுவோம் என்று உத்தவ் தாக்கரே பதில் அளித்தார்.
இந்த கூட்டத்தில் மும்பை கோரேகாவ் தொகுதியில் வென்ற சிவசேனா வேட்பாளர் சுபாஷ் தேசாய் சட்டமன்ற சிவசேனா கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார்.

ட்ரன்ட் பை பொலிட்டிகள்

துணை முதல் மந்திரியாக தேர்தெடுக்கபட்ட உடன் முதல் மந்திரி அசோக் சவானை சந்திக்கும் சஜன் புஜ்பால்

 கனவு மெய்பட வேண்டும்
எனக்கு தெரிந்த மீடியா காரன் ஒருத்தன் இருக்கிறான் அவனிடம் போட்டு கொடுத்தா விலாஸ் ராவ் தேஷ் முக் மாதிரி உங்கள் பதவியும் அல்பஆயுஸ்ல போய்டும் , ஆனா அவன் கைராசி காரன் லோகல் பதவி புட்டுகிச்சுன்னா மத்திய கேபினெட் சீட் கிடைக்கும் வேனும்னா சொல்லுங்க அவன் கிட்ட போட்டு கொடுக்கிறேன்.
சொல்பவர் முன்னால் துணை முதல் மந்திரி ஆர் ஆர் பாட்டில்,
அ சா:- அதெல்லாம் வேண்டாங்க எதோ எங்க அப்பா பத்தி  அவரோட வாழ்க்கை வரலாறு புக்கு போடரேன்னு சொல்லி பயமுறுத்தரான் அதை மட்டும் கண்ரோல் பன்னுக போதும்


நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், இனி பிஸினெஸ் மேனுக்கு கவலையில்லை, உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை, இனி கட்சி காரர்கள் யாரும் கண்ணீர் கடலிலே விழமாட்டார்,


மும்பையில் பரபரபின்றி முடிந்த சத் பூசை

உபி கார கணவர் சும்மா கிடடி இந்த வருடம் ராஜ் தாக்கரே சட்டசபைக்குள் போக போறார் நம்ம நிலை என்ன ஆகும் என்று தெரியவில்லை, அதனால் சாமிகிட்ட வேண்டுகிறேன் எங்களை காப்பாற்ற வேண்டுகிறேன் {;@

மும்பை அக்டோபர் ,25
வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் விழாக்களில் சத் பூசை எனப்படும் சூரிய பகவானை வழிபடும் விழாவும் ஒன்று இது 2005 வரை கிழக்கு உத்திர பிரதேசம் மற்றும் பிகாரை விட்டு வெளியே தெரியாத ஒரு திருவிழாவாகும். சத் என்றால் கூரை வீட்டின் கூறை போல் உலகின் கூறையான விண்ணையும் அதன் அரசன் என்று கருதப்படும் சூரியனையும் வணங்கும் விழா தமிழர்களின் பொங்களை போன்றே ஆனால் அதற்குறிய முக்கியத்தும் இந்த விழாவில் இல்லை. சத் பூசை அன்று குடும்பம் குடும்பமாக ஆறு கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று மாலை சூரியன் மறையும் போதும் பூசை ஆரம்பிப்பார்கள். தேங்காய் பழம், மற்றும் கரும்பு வகைகள் வைத்து விளக்கேற்றி மறு நாள் காலை சூரியன் எழும் வரை பூசை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்புவார்கள். கடந்த சில வருடங்களாக மும்பை மற்றும் கிழக்கு மராட்டியத்தில் வட இந்தியர்கள் சிவசேனாவினரால் தாக்கபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சிவசேனாவில் இருந்து விலகி  ராஜ் தாக்கரே புதிதாக நவநிர்மான் சேனாவை துவங்கினார். இந்த கட்சியினர் வட இந்தியர்களை கடுமையாக தாக்கிவந்தனர். இதனால் மும்பை பூனா நாசிக் மற்றும் கிழக்கு மராட்டியத்தில் வாழும் பல வட இந்தியர்கள் குறிப்பாக பீகார் மாநிலத்தவர் குடும்பம் குடும்பம் குடும்பமாக தங்களின் மாநிலம் செல்ல ஆரம்பித்து விட்டனர்.
மராட்டிய மாநிலத்தில் உள்ளவட இந்தியர்கள் பீதியுடன் வாழும் நிலை ஏற்பட்டது. இதனால் வட இந்திய அரசியல் தலைவர்களும் மும்பையில் உள்ள வட இந்திய பிரபலங்களும் சேர்ந்து வட இந்தியர்களுக்கு இடையே ஏற்பட்ட அமைதியை ஏற்படுத்துவதற்காக சத் பூசையை மும்பையில் நடத்துவது என்று முடிவு செய்தனர். இதன் படி கடந்த மூன்று வருடங்களாக மும்பை ஜுகு கடற்கரையில் சத் பூசை பரபரப்பாக நடைபெற்று வந்தது. கடந்த வருடம் நவநிர்மான் சேனா இந்த பூசைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதனால் பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து

முடிந்தது. இந்த வருடம் சத் பூசை நேற்று மும்பை ஜுகு கடற்கரையில் துவங்கியது. தேர்தல் வெற்றியில் நவநிர்மான் கட்சியினர் திளைத்து இருப்பதால் இந்த முறை சத்பூசை பற்றி அறிக்கை எதுவும் விடவில்லை இருப்பினும் பலத்த பாதுகாப்புடன் எவ்வித அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் நடைபெற்றது. சத் பூசையை மும்பையில் நடத்த முழுகாரணமாக இருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் நிருபம் மராட்டிய மாநில  புதிய முதல் மந்திரியை தேர்ந்தெடுக்க டில்லி சென்று இருப்பதால் அவர் கலந்து கொள்ளவில்லை, ஞாயிறன்று நடந்த விழாவில் பல போஜ் பூரி நடிகர்கள் கலந்து கொண்டனர்.

அஜித் பவாரிடம் சில கேள்விகள்

  இன்று மராட்டிய அரசில் புதிய புயலை கிளப்பி இருக்கும் அஜித் பவாரிடம் (சீண்டி பார்க்க) சில கேள்விகள்






அஜித் பவார்(சரத்பவாரின் அண்ணன் மகன்):- தேசிய வாத காங்கிரஸின் முக்கிய தலைவர்களுள் ஒருவர்:- 3 மணி அல்லது 4 அளவில் சரத்வாருடன் கலந்து ஆலோசித்து துணைமுதல் மந்திரி யார் என்று நிர்னயிக்கபடும்.

சரவணா;- அஜித் தாதா(வழமையாக அழைக்கும் பெயர்) இம்முறை நீங்கள் ஏன் துணைமுதல் மந்திரி வேண்டும் என்று சரத்பவாரிடம் கூறவில்லை?

அஜித் பவார்:-அனைத்து அதிகாரமும் சரத்பவாரிடம் தான் கொடுத்து இருக்கிறோம்.

சரவணா;- உங்களது சீனியாரிட்டி க்கு உங்களுக்கு பதவி வழங்கலாம் ஆனால் இன்னும் உறுதியான பதில் வரவில்லை ஏன்?

அஜித் பவார்:- மேலிடம் என சொல்கிறதோ அதை ஏறுகொள்வே, என்னைவிட அதிக சீனியர்கள் இருக்கிறார்கள்,

சரவணா;- உங்களுக்கு அதிக எம் எல் ஏக்களின் ஆதரவு உண்டு இருந்தும் உங்கள் பெயர் இருப்பது போல் தெரியவில்லையே உங்களை கட்சி ஓரம் கட்ட முயற்சிக்கிறதா?

அஜித் பவார்:-அப்படி ஒன்றும் இல்லை, முக்கியமாக ஆர் ஆர் பாட்டில் , திரிபாடி, மகதேவ் போன்ற பல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள், நான் அவர்களுக்கு பிறகு தான்

27 அக்., 2009

எதிர்கட்சியாக இருக்க ஏன் மறுக்கிறார்கள்.


எதிர்கட்சி தலைவர் பதவி என்பது மலர் மஞ்சம் அதில் மனம் போன போக்கில் அமரலாம், தவறுகளை துணிச்சலுடன் யாராக இருந்தாலும் விரல் நீட்டி சுட்டி காட்டலாம், ஆனால் முதலமைச்சர் பதவி என்பது முட்களும், தாங்குநாற்காலிகளை சுற்றிய நாகங்களும் தலைக்கு மேலே வேலைகள் இன்னும் இருக்கின்றன என்ற கத்தியும் எப்போது உழன்று கொண்டே இருக்கும் பதவி முதல்வர் பேரறிஞர் அண்ணாத்துறை தமிழ் நாடு (நல்ல மனுசங்கள நம்மாளுக சீக்கிரமே மறந்து விடுவார்கள் அதுதான்)
சனநாயகத்தில் எதிர்கட்சியாக இருப்பது உண்மையாக மக்களுக்கு உழைக்க ஒரு நல்ல வாய்ப்பு. அரசு தவறிழைக்கும் போதும் மக்கள் துண்பத்தில் இருக்கும் போது அரசை கண்டித்தும் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றவும் நல்ல வாய்ப்பு அதே நேரத்தில் தாங்களை மக்கள் ஏன் தேர்தெடுக்கவில்லை என்ற காரணத்தை அறிந்து அதற்கான நிவாரணம் தேடுவதற்கும் அருமையான வாய்ப்பு. இதுதான் சனநாயகம் ஆனால் மராட்டிய மாநிலத்தில் நடந்தது என்ன அவரவர் மனைவிமார்கள் என்னவோ கணவன்மார்கள் வில் அம்புடன் களத்தில் நின்று வெற்றி கண்டதுபோல் கொண்டாடுகிறார்கள். தோல்வி அடைந்தவர்களோ சித்திவிநாயகர், மாவுலி கோலாப்பூர் போன்ற கோவில்களுக்கு சென்று சாமியிடம் ஏன் இந்த தண்டனை என்று கேட்கிறார்கள். ஒருவர் என்னவென்றால் என் முதுகில் மக்கள் குத்திவிட்டார் என்கிறார். ஒருவர் அவர்களின் பலவீனமே எனது பலமாகிவிட்டது என்கிறார்கள். சாமிகளா உங்களுக்கு எல்லாம் ஒட்டுபோட்ட மக்கள் நினைவில்லையா தேர்தல் முடிந்த 3 நாட்களிலேயே ஓட்டு போட்ட மக்களை மறந்து விட்டீர்கள் வரும் காலங்களில் எப்படி மக்களுக்கு சேவை செய்யபோகிறீர்கள்.
தோல்வியில் இருந்து சிவசேனா இன்னும் மீளவில்லை போல நேற்று முதல் முதலாக நிருபர்களை சிவசேனாவினர் சந்தித்தார்கள், ஒரே புலம்பல் மயம் மனோகர் போன்ற மூத்த பண்பட்ட அரசியல் தலைவர்கள் இருந்த போதும் இந்த தோல்வி எங்களுக்கான தோல்வி இல்லை இது மராட்டியர்களுக்கான தோல்வி அப்பா சொன்னதில் தப்பில்லை, மராட்டியர்களுக்கா?? உழைத்தார் ஆனால் அவரின் முதுகிலேயே குத்தி விட்டனர் என்று ஸ்டேட்மெண்ட் விடுகிறார்கள்

தேசிய வாத காங்கிரஸின் பாகம் 2

தமாஸ் தொடர்
             மின்சாரம் வேண்டும் ஜித்தேந்தர் அட்லீஸ்ட் நீயூஸ் எழுதவாது மின்சாரம் கொடுங்கள்,

காங்கிரஸை தூக்கி தூக்கி தோள்வலிக்கிறது, எப்போதுதான் அதை இறக்கி வைப்போமோ தெரியவில்லை,

துணைமுதல்வாராக இருந்தேன் வலிய வந்து போட்டொ எடுத்தாங்க இப்ப வெறும் பிளாஸை போட்டு தமாஸ் பன்றாங்க,சொல்பவர் ஆர் ஆர் பாட்டில் முன்னாள் மராட்டிய மாநில துணைமுதல் மந்திரி
இனிமேல் கொடுப்பதற்கு அல்வா இல்லை இனி அடுத்த தேர்தல் வரை காத்திருக்கவேண்டும்

கைக்கு வந்தது வாய்க்கு


மும்பை,அக்டோபர்-27
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் புதிய துணை முதல் மந்திரிக்கான தேர்வு நடைபெற்றது. இரண்டு நபர்களின் பெயர்கள் இந்த முறை காற்றில் வந்தது. ஒன்று சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் மற்றோன்று கடந்த அரசில் துணைமுதல் மந்திரியாக இருந்த சஜன் புஜ்பால். சஜன் புஜ்பால் தேர்தல் முடிவுகள் தஙக்ளுக்கு சாதகமாக வரும் என்று கருத்துகணிப்புகள் தெரிவித்தவுடன் சும்மா இருக்காமல் ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டார். அதாவது ஜம்மு காஷ்மீரில் உள்ளது போல் 2 அரை வருடம் முதல் மந்திரி பதவி பங்கிட படும் என்றார்.(பிறகு இதை அவர் மறுத்துவிட்டார் அது வேறுகதை) ஆனால் காங்கிரசுக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை. அதனால் கட்சியின் தனக்கு வேண்டபட்ட திரிபாடி போன்ற தலைவர்களின் மூலமாக சஜன் புஜ்பாலுக்கு செக் வைத்தது.

சரத் பவாரும் இம்முறை எம் எல் ஏக்கள் தங்களுக்கு குறைவாக கிடைத்தாலும் பல முக்கிய தலைவர்களும் மூத்த மந்திரிகளும் பிரபலமான தொகுதிகளில் மண்ணை கவ்வியதால் அமைதியாகி விட்டார். விளைவு மெல்ல மெல்ல சரத் பவாரின் அண்னன் மகன் பெயர் அடிபட துவங்கியது. இந்நிலையில் டில்லியில் தான் முதல் மந்திரியாக சோனியாவின் மூலம் அறிவிக்கபட்டஉடன் மகிழ்ச்சியின் உற்சாகத்தில் முக்கிய மந்திரி பதவிகள் தங்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பிட்டை போட அது சரத்பவாருக்கும் மற்றும் சில தேசிய வாத கட்சியினருக்கும் ஒப்பந்ததை மீறிய பேச்சாக போய்விட்டது. காங்கிரஸை பணியவைக்க பாய்ண்ட் கிடைத்தும்.

               காங்கிரஸில் இருந்து வந்த தேசிய வாத காங்கிரஸும் அதன் தலைவர்கள் தங்களின் வாரிசுகளையே அரசியலில் முன்  நிறுத்துகிறார்கள் என்ற பழியை தான் வாங்க கூடாது என்பதாலும், ஆரம்ப காலங்களில் இருந்தே தொண்டர்களை உடன் கொண்டு சென்ற சரத்பவார் தொண்டர்கள் இம்முறை உற்சாக குறைந்து காணப்படுகின்றனர். தன்னுடைய அண்ணன் மகனுக்கு மந்திரி பதவி கொடுப்பதன் மூலம் மேலும் சரிவை விரும்பாத சரத்பவார், முடிவான நிலையில் இருந்த அஜித பவாரின் துணைமுதல் மந்திரி கனவை கனவாகவே நிலைக்க விட்டு விட்டார். அஜித் பவாருக்கு முக்கிய பொருப்பு வழங்கபடும் என்று அவரை சமாதான படுத்தியதாக அஜித்பவாரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியது.

       திங்கள் மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த பிரபுல்பாய் படேல், ஆர் ஆர் பாட்டில் மற்றும் தேசிய வாத கட்சியினரின் மூத்த தலைவர்கள் கட்சியின் சட்டமன்ற தலைவராக சஜன் புஜ்பால் நியமிக்கபட்டதாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் அஜித் பவார் மிஸ்ஸிங், சில மணிநேரங்களுக்கு பிறகு துணைமுதல் மந்திரிக்கும் சஜன் புஜ்பாலின் பெயர் அறிவிக்கபட்டது.