23 அக்., 2009

தனது காலில் தானே போட்டு கொண்ட சூடு(தாரவி தமிழர்கள்)



தமிழர்களின் பகுதி
   கடந்த தேதலில்  வென்ற பிறகு தாராவி பகுதியில் முக்கியமாக தமிழர்களின் பகுதியில் கருனைகாட்டாமல் இருந்தே வர்ஷா மேடமே( நடாளுமன்ற உறுப்பினர் ஏக்நாத் காய்வாடின் மகள்) மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார். மட்டுங்கா பகுதிகளில் உள்ள வசதிபடைத்த தமிழர்கள் வாக்கு பதிவின் போது மாடியை விட்டு கீழே இறங்குவது இல்லை இது 1960 களில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது. மீண்டும் தாராவி தமிழர்களுக்கு ஒரு இருண்ட காலம் (இது அவர்களாகவே ஏற்று கொண்டது.

தாராவியில் இந்த முறை ஒரு மாற்றம் தெரிந்தது எப்பொழுதும் காங்கிரஸிற்கு ஓட்டு போடும் வட இந்திய மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் அதிகம் சிவசேனாவிற்கு ஓட்டு போட்டு இருந்தனர். தெலுங்கர்கள் மற்றும் கோலி இனமக்கள், ஆகியோர் சிவசேனாவிற்கு ஓட்டளித்து இருந்தனர். இவர்கள் எப்போதும் சிவசேனா ஆதரவாளர்கள். அதாவது தாராவி புரணமைப்பு திட்ட திற்கு காங்கிரசை நம்பி புண்ணியம் இல்லை என்ற நிலையில் சிவசேனாவிற்கு ஓட்டளிக்க இங்கு நம் தமிழ் மக்கள் காலைவாரி விட்டனர். எப்போது சாதிய ரீதியாக அவர் அவர் சாதி பிரமுகர்கள் காட்டும் கட்சிக்கு ஒட்டளிக்கும் தமிழர்கள் இந்த விடயத்தில் தன்னை ஒன்று சேர்ந்து தங்களது கால்களில் கோடாரி போட்டு கொண்டனர்.
கடந்த முறை எம் எல் வாக இருந்த வர்ஷா காயக்வார் மேடம் இதுவரை தாராவி மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்று சொன்னால் தாராவியில் உள்ள குழந்தை கூட சொல்லி விடும், இன்னும் 90 பிட் ரோட்டில் பாதை முழுவதும் இடைஞ்சல் தேவையில்லாத கடைகள், மக்களின் அடிப்படை வசதியான தண்ணீர் குழாய் பல இடங்களில் லோக்கள் தாதாகளினால் விலைக்கு விற்கபடுதல், பல வீடுகள் அவர்களுக்கு தெரியாமலேயே விற்பனை செய்யபடுகிறது. எதிர்த்து கேட்பவர்கள் மிரட்டபடுகிறார்கள். காணாமல் போய்விடுகிறார்கள்.
தாராவி புரணமைப்பு திட்டம் கிட்டப்பில் போடபட்டு இருக்கிறது. மக்கள் நெருக்கடியான வீடுகளில் விலங்குகளை விட கேவலமான நிலையில் வாழ்கிறார்கள்.
இதற்கு காரணம் என்ன தமிழர்களில் ஒட்டு மொத்த ஓட்டு எப்படி காங்கிரஸிற்கு சென்றது. பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தென் இந்தியர் பிரிவு திரு நடேசன் கூறும்போது ‘நாங்கள் 17 வயதில் இருந்தே பா ஜ க வின் தொண்டகள். எங்களின் முழுமுயற்சியால் தான் பல முறை சிவசேனா கூட்டனி வெற்றி பெற்றது. இந்த முறை சிவசேனா பா ஜ க கூட்டனி வேட்பாளர் சம்பந்த மில்லாத பலருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து இருக்கிறார். இத்தனை வருடமாக நாங்கள் எங்கள் சொந்த பணத்தில் கட்சிக்காக பாடுபட்டு இருக்கிறோம். இந்த முறை கட்சி தலைமை பல ஆண்டுகளாக உழைத்த எங்களை முற்றிலும் புறக்கணித்து விட்ட து எங்களுக்கு பணம் பொருள் கொடுக்கவேண்டாம் இத்தனை வருடமாக உழைத்த எங்களுக்கு மரியாதையாவது தரவேண்டாமா, அதனால் தான் நாங்கள் இந்த முறை மக்களிடம் செல்ல மனமின்றி கட்சியின் விசுவாசத்தினால் எங்களில் ஓட்டை மட்டும் பா ஜ விற்கு போட்டு விட்டு ஒதுங்கி கொண்டோம் என்றார்.
  
சயன் கோலிவாடாவில் ஜெகன்நாத் செட்டி வெற்றிகனியை பறித்து இரண்டாவது முறையாக மராட்டிய மாநில சட்டசபையில் நுழைகிறார். இங்கும் தமிழர்கள் சாராயத்திற்கும் சில ரூ நோட்டிற்கும் பலியாகிவிட்டார்கள்.

மேலே சொன்ன இரண்டு தொகுதியிலும் உறுப்பினர்களை தேர்தெடுப்பது முழுக்க முழுக்க தமிழர்களின் கைகளில் என்பது இங்கே கூறிப்பிட்தக்கது.

 செம்பூர் தோகுதி இங்கும் வசதியான தமிழர்கள், ஏழைதமிழர்கள் என்ற இரண்டு பெரும் பிரிவு இருக்கிறது. ஏழைகள் சொற்ப சதவீதம் எளிதாக குவாட்டருக்கும் பிரியாணிக்கும் மயங்குபவர்கள் விளைவு இங்கும் காங்கிரஸ் கூட்டனி. இரண்டாவது இட த்தில் வந்த சந்திரகாந்த் நிகலஞ்சே வந்தும் ஒன்றும் செய்யபோவது இல்லை(இவர் பிரபல தாதா சோட்டா ராஜனின் சகோதர ர்) இரண்டும் ஒன்றுதான் அதனால் ஆளும் கூட்டனியை தேர்தெடுத்து விட்டனர்.

வடலாவில் நவ நிர்மான் கட்சி தனது கணக்கை திறந்து இருக்கிறது. இங்கு தமிழர்கள் 30 சதவீதம் இருக்கின்றனர். இவர்களின்  ஓட்டுக்கள் மொத்தமாக காங்கிரஸிடம் சென்றது. ஆனால் மராட்டிய குடும்பத்தினர் அதிகமாக வசிப்பதால் ராஜ் தாக்கரேவிற்கு வாய்ப்பளித்து தமிழர்களுக்கு பட்டை நாம ம் செலுத்தி இருக்கின்றனர். நம்ம ஆளுக பிளேட்டை மாற்றி போட்டு விடுவார்கள். ராஜ்தாக்கரே ஜிந்தாபாத்
விக்ரோலியிலும் நவநிர்மான் சேனா இங்கும் தமிழர்களின் எண்ணம் நிறைவேறாமல் போனது.
பாண்டூப் சிவசேனாவிடம் போய் இருக்கிறது. எது எப்படியோ இனியும் ஐந்து வருட த்திற்கு தாராவி தமிழர்கள் நவீன தாரவி திட்டம் ஆமை வேகம் எடுக்கும் இல்லை என்றால் தாராவி முழுவதும் தொழில் அதிபர்கள் கைகளில் செல்லும்.
   நவ நிர்மான் தனது பலத்தை நிறுபித்து இருக்கிறது, மும்பையில் மட்டும் 11 இடங்கள் தானா மற்றும் கோங்கனின் ஒரு இடம் பிடித்து உள்ளது. சிவசேனாவிற்கு பலத்த அடி கொடுத்த நவநிர்மான் சேனா இனி வட இந்தியா மக்களிடன் எப்படி நடந்து கொள்கிறது என்பதை பொறுத்தே கட்சியின் வளர்ச்சி உண்டு. தமிழர்களுக்கு பயமில்லை நவநிர்மான் தமிழ் பிரிவு ஒன்று ஆரம்பித்து ராஜ் தாக்கரேவுடன் சேர்ந்து மாலை போட்டு போஸ் கொடுத்து விட்டார்கள்.
   
கடமை தவறிய பத்திரிகைகள்
நல்ல தீர்ப்பா இல்லையா எனறு சொல்ல முடியாது, சிலரின் பலவீனம் சிலருக்கு லாபம், ஆனால் தமிழர்களை பொருத்தவரை தனது குடிசை விலை போகப்போவது கூட தெரியாமல் இருக்கிறான்.  சரி அவனுக்கு தான் சொந்த புத்தி கிடையாது தமிழ் பத்திரிக்கைகளாவது அவனுக்கு அறிவு புகட்டி இருக்கலாம்,
ஜெய ஜெய மகராஸ்டிர மாதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக