3 அக்., 2009

மகாத்மா காந்தி லிமிட்டேன் எடிசன் 241


  இங்கிலாந்தை சேர்ந்த மவுண்ட் பிளக் என்ற நிறுவனம், பொது உபயோக பொருட்களான பேனா, கைக்கடிகாரம், நகைகள் மற்றும் இதர பொருட்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் உலகின் பல சேவை மையங்களுடன் இனைந்து பல நல்ல காரியங்களும் செய்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் தரம் பற்றி சொல்லி தெரிவதில்லை,

இந்த முறை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை அடுத்து  அவரது உருவம் பதித்த எழுது கோல் (பேனா) தயாரித்து உள்ளது முழுக்க முழுக்க தூய தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் ஆன இந்த  எழுதுகோலின் விலை, இந்திய ரூ மதிப்பில் 1.5 லட்சட்தை தாண்டும் நேற்று லண்டனில் நடந்த இந்த பேனா அறிமுக விழாவில் காந்தியின் பேரன் துசார் காந்தி கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லூட்ஸ் பெட்ரன்ஸ் எங்களது நிறுவனம் லாபம் ஒன்றை மட்டும் கணக்கில் கொள்ளாது  உலகம் எங்கும் வாழும் அகதிகள், மற்றும் ஆதரவற்றவர்களுக்கான‌ சேவை அமைப்புகளுடன் சேர்ந்து பல ஆக்கபூர்வமான காரியங்கள் செய்து வருகிறது.





மகாத்மா காந்தியின் நினைவாக மகாத்மா காந்தி லிமிட்டேன் எடிசன் 241 என்ற பேனாவை நாங்கள் அறிமுக படுத்துகிறோம். மை நிறப்பும் பேனாவின் நிப்பில் தண்டி யாத்திரை நிகழ்வை பதித்து இருக்கிறோம், தஙகம் மற்றும் பிளாட்டின உலோகத்தால் தயாரிக்கபட்டுள்ள இந்த பேனாவில் விலை நிர்னயிக்க படவில்லை, பரிசு பொருளாக விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இந்த பேனாவில் விற்பனையில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு காந்தியின் நினைவாக செயல்படும் சேவை நிறுவனத்திற்கு அளிப்போம் என்றார். ஒரு பேனா விற்பனையானால் அதில் இருந்து 10000 ரூ நிகழ்ச்சியின் போது காந்தி நினைவு சேவை மையத்திற்கு ரூ 72 லட்சம்
நன்கொடை வழங்கபட்டது






எளிமையை விரும்பியே பட்டன் கூட வைக்காத உடையை உடலில் சுற்றி கொண்டு வாழ்ந்த காந்தி தாத்தா உதவி என்ற பெயரில் இந்த ஆடம்பரத்தை விரும்புவாரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக