30 அக்., 2009

சிவசேனாவிற்கு தோல்வி இல்லை மராட்டியர்களுக்குதான் தோல்வி-உத்தவ் தாக்கரே



மும்பை-அக்டோபர்:25
மும்பையில் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு முதல் முதலாக சிவசேனா கட்சி பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. இந்த சந்திப்பின் போது பேசிய சிவசேனையின் உத்தவ் தாக்கரே இந்த முறை நடந்த தேர்தலின் தோல்வி கட்சியின் தோல்வி இல்லை மராட்டியர்களின் தோல்வி என்றார் சிவசேனா கட்சி 40 வருடங்களுக்கு முன்பு மராட்டியர்களுகாக ஆரம்பிக்க பட்டது. இந்த கட்சி ஒவ்வொரு நகர்வும் மராட்டியர்களின் நலனை வைத்து தான் இருந்தது. கட்சி ஆட்சியிலிருந்த போது மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்புகளில் சிறப்பாக பணிபுரிந்ததது. எங்களின் இந்த பணியை காங்கிரஸ் தான் செய்தாக கூறிக்கொண்டு 10 வருடங்களை கடத்தி விட்டது. இந்த பத்து வருடங்களில் காங்கிரஸ் மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. இம்முறை கட்சியின் தோல்விக்கு நாங்கள் யாரையும் குறைகூற விரும்பவில்லை. இந்த தோல்வியை ஏற்றுகொள்கிறோம் அதே நேரத்தில் கட்சியின் அனைத்து மட்டத்திலும் சிறப்பான மாற்றங்கள் கொண்டு வரப்படும், எங்களுக்கு பாரதிய சனதா கட்சிக்கும் எந்த பூசல்களும் கிடையாது

நாங்கள் இருவரும் இனைந்து நல்ல எதிர்கட்சியாக சட்ட மன்றத்தில் பணியாற்றுவோம். எங்களை தேர்தெடுத்த வாக்காளர்களுக்கும் வெற்றிக்கான உழைத்த அனைத்து தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று
கூறினார். அதே நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பால் தாக்கரே கூறிய கருத்து சரிதான் என்றும் மராட்டிய மக்கள் இந்த தேர்தலில் தவறிழைத்து விட்டனர் இவ்வாறு சிவசேனாவின் செயற்தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் முதல் மந்திரி மனோகர் ஜோஷி மற்றும் இதர தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த உடன் நமது நிருபர் உத்தவ் தாக்கரேவிடம் “ அசோக் சவானின்  கரிஷ்மா(அற்புதம்) ஏதாவது தான் மக்களை கவர்ந்து விட்டதா என கேட்டபோது அப்படி ஒன்றும் கரிஷ்மா அல்லது கரீனா இருப்பதாக தெரியவில்லை, ஓட்டுக்கள் சிதரியதால் காங்கிரஸ் பயனடைந்து இருக்கிறது, மும்பையில் மட்டும் தான் சிவசேனா லேசாக பின்னடைவு அடைந்திருக்கிறது, ஆனால் மராட்டியத்தில் உள்பகுதியில் ஆதரவு அதிகரிக்க துவங்கியுள்ளது. நாங்கள் புதிய அரசுடன் இனைந்து மக்களின் சேவைக்கான பாடுபடுவோம் என்று உத்தவ் தாக்கரே பதில் அளித்தார்.
இந்த கூட்டத்தில் மும்பை கோரேகாவ் தொகுதியில் வென்ற சிவசேனா வேட்பாளர் சுபாஷ் தேசாய் சட்டமன்ற சிவசேனா கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக