ஒருவர் மட்டும் உற்சாகத்தில் மற்றவர் எல்லாம், வேடிக்கை யாளர்கள் தான் ஒருவர் மட்டும் ஆப்பம் பறிகொடுத்தவர் போல் அவர் மான்புமிகு நாராயன் ரானே வருவாய் உள்ள வருவாய் த்துறை மந்திரி


கடிகார சுற்று பார்வையில் மத்திய இனைஅமைச்சர் ப்ரத்திக் பாட்டில் இளைய தலைமுறை மராட்டிய மாநில சட்டசபை உறுப்பினர்கள் ராஜீவ் சாகேப்(மந்திரி ஆக முடியாது) யஸ்மதி டாக்கூர் (மந்திரி ஆகமுடியாது) நிலேஸ் பார்கர் (மந்திரி ஆக முடியாது) , பிரநிதி ஷிண்டே மந்திரி பதவி காத்து இருக்கிறது, ராவ்சாகேப் சேகாவத்(சனாதிபதியின் மகன்) மந்திரி பதவி காத்து இருக்கிறது, அமித் தேஷ்முக்(மந்திரி பதவி காத்து இருக்கிறது) பிரஷாந்த் டாக்கூர் மந்திரி ஆகமுடியாது.

மராட்டிய மாநில விதான் சபா கட்டிடம் சரியாக மூன்று மணியில் இருந்து காங்கிரஸ் எம் எல் ஏக்களின் வரவு துவங்கிவிட்ட து. அமைதியாக பிராநிதி ஷிண்டே முதல் முதலாக விதான் சபா வரவேற்பு வளாகத்தில் வந்து இறங்கினார் முதலில் சிலர் வர்ஷா காயக்வாட் வந்துவிட்டார்கள் என்று சொல்ல பத்திரிக்கையாளர்களிடம் கொஞ்சம் அலட்சியம் தெரிந்த்து. புகைப்பட கார ர்களும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
காரைவிட்டு இறங்கிய பிறகுதான் புதுமுகம் என்றுதெரிந்த து. ஸீ டி வி காமிராமேன் பாதையை ஒட்டி உள்ள படியில் இருந்து கொண்டு படமெடுக்க விதான் சபா காவலர்கள் விரட்டி படி இருந்தனர். ஆனால் சிறிது நேரம் அவர் நின்று புன்னகையுடன் போஸ் கொடுக்க அனைவரும் புகைப்பட கலைஞர்களும் அந்த இட த்தில் குவிய ஆரம்பித்தனர். அனைத்து வி ஐ பிக்களும் வரும் நேரமாகையால் அவரை அவரது உதவியாளர் உள்ளே செல்லுங்கள் மேடம் என்று சொல்ல நிதானமாக வெளியே வந்து பார்வையாளர்கள் பகுதியில் பத்திரிக்கையாளர்களுக்கு வேண்டிய அளவு படம் எடுக்க அனுமத்தார்.
நல்ல அரசியல் பாடம் படித்தவர் போலும், ஷிண்டே சென்றவுடன் நாராயன் ரானே முதல் மந்திரி பதவி ஓட்டப்பந்த்யத்தில் இவரும் ஒருவர் அதனால் ஒரு பரபரப்பு நிகழ்ந்த்து ஆனால் அவருக்கு தெரிந்துவிட்ட்து, நமது பலம் இந்த முறை பலிக்காது என்று அதனால் அவர் அமைதியாகிவிட்டார் ஆனால் பத்திரிக்கையாளர்கள் தான் அவரை உசுப்பேற்றி கொண்டு இருந்தனர், அவரோ அமைதியாக அன்னை சோனியாவின் விருப்பம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
கடந்த வருடம் மும்பை தாக்குதலில் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் பதவி பறிப்போக அந்த இட்த்தில் தான் வருவதற்காக பகிரத பிரயத்தனம் செய்தவர் இதே இட்த்தில் இருந்து சொன்னது” என் மீது மராட்டிய மாநில காங்கிரஸ் எம் எல் ஏக்கள் பலர் நம்பிக்கை வைத்து இருக்கின்றனர். அதனால் முதல்மந்திரி பதவிக்கு நான் எனது தரப்பு ஆதரவு எம் எல் ஏக்களை டில்லி அழைத்து செல்வேன் என்று சொன்னவர் இந்த முறை சுருதி குறைவான வயலின் போல் டொய்ங் என்று பதில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். டில்லியில் இருந்து அண்டனி வயலார் ரவி , சிவராஜ் பாட்டில், மற்றும் சுரேல் கல்மாடி போன்றோர் வரிசையாக வரத்துவங்க ஆண்டனி எப்போதும் போல் மேலிடம் தான் முடிவு செய்யும் முதல் மந்திரி யார் என்பதை எனது கடமை எம் எல் ஏக்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதை தலைமைக்கு(சோனியாவிற்கு) கொண்டு செல்வது ஐ மீன் போஸ்ட் மேன் மட்டும் தான் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். ஷிண்டே யாரிடமே பணிவாக மொபைலில் பேசிக்கொண்டே சென்று விட்டார், அநேகமாக அன்னையின் அழைப்பாக இருக்க்கூடும்.
விலாஸ்ராவ் தேஷ்முக்குடன் அவரது மகன் புதிய எம் எல் ஏ அமித் தேஷ்முக் வர அப்பனின் டூப்ளிக்கேட் போல் இருவரும் ஒரே மாதிரி பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்து விட்டு சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் பரபரப்பு ஏற்பட்ட து முதல் மந்திரி அசோக் சவான் வருகை புரிந்தார். அவர் வந்த தும் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு நீங்கள் தான் அடுத்த முதல்வரா என்றபோது அவர் அமைதியாக அது மேலிடம் முடிவு செய்யும் என்றார்.
அதன் பிறகு எல்லாம் டிராமாவாக மாறியது, விதான் சபா உள்வளாகத்தில் உள்ள பெரிய அறையில் கலந்துறையாடல் நடந்து கொண்டு இருந்த்து. பேருக்கு அனைத்து காங்கிரஸ் எம் எல் ஏக்களுடம் விவாதித்து கொண்டு இருந்தார்கள். ஆனால் விலாஸ் ராவ் மற்றும் நாராயன் ரானே இருவருடைய முகத்திலும் சந்தோசமே இல்லை. விலாஸ் ராவ் தனது மகனுக்கு என்ன அமைச்சர் பதவி கேட்கலாம் என்று ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்து இருந்தார். இதை அவரிடம் கேட்டே விட்டார் ஆட் தக் ராஜேஸ் ” தேஷ்முக் ஜி உங்க மகனுக்கு அமைச்சர் பதவி உறுதி எந்த பதவி கேட்பீர்கள் என கேட்க டென்சனில் இருந்தவர் அதை மறைத்து கொண்டு அதெல்லாம் இல்லை மக்கள் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள் அதனால் மக்களின் விருப்பம் போலவே என்று டபாய்த்தார்.
திடிரென பரபரப்பு ஏற்பட்ட து பல எம் எல் ஏக்கள் முதல்முறையாக விதான் சபா வந்தால் விதிமுறைகள் தெரியாமல் தங்களது மாமன் மச்சான் சகலை சொக்காரன் என ஒரு சிற்றூரையே அழைத்து வந்து இருந்தார்கள். விதான் சபா காவலர்கள் அவர்கள் அனைவரையும் வெளியேற்ற விதான் சபா தோட்ட த்தில் அனைவரும் மெட்ராசுக்கு வந்த கொட்டாம்பட்டி கார ர்கள் போல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்த து நல்ல டமாசா இருந்த து.
அதில் ஒருவர் சாவானின் சகலைபாடி என சொல்லி பரபரப்பு ஏற்படுத்த இறுதியில் அவர் சந்தோஷ் சவான் என்ற புதிய எம் எல் ஏவின் சகலைபாடி எனதெரிந்த உடன் அவரிடம் மனு கொடுத்த பலர் நொந்து கொண்டனர்.
இவ்வளவு ஆன பிறகு சரியாக 7 மணி அளவில் வெளியே வந்த அந்தோனி டில்லி முடிவு செய்யும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட அவரை பின் தொடர்ந்து நாராயன் ரானே, விலாஸ் ராவ் தேஷ்முக் அனைவரும் டில்லி சென்றனர். அசோன் சவான் தனியாக டில்லி சென்றார். எப்படியும் இன்று இரவு அசோக் சவான்????????????????????????????????????????????????????? இதுவரை முடிவு அறிவிக்கபடவில்லை நெரம் 21:53 முதல் மந்திரி என்ற அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக