24 அக்., 2009

மராட்டியர்கள் மறந்து விட்டனர் பால் தாக்கரெ

 


          

                         மராட்டிய மாநில சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டனி வைத்து போட்டி இட்ட சிவசேனா 20 வருடங்களுக்கு முன்பு மீண்டும் பின்னோக்கி சென்று உள்ளது. சிவசேனா கட்சியின் ஆரம்ப தேர்தலில் வெறும் 8 தொகுதியும் அதன் பிறகு அதற்கு 13 தொகுதி 40 தொகுதி என இடம் கிடைத்தது. பாரம்பரிய கட்சிகள் நாளுக்கு நாள் அதிக தொகுதிகள் போட்டி போட்டு வெல்லும் காலம் இது ஆனால் 20 வருடங்களுக்கான அதே நிலையை சிவசேனா அடைந்து உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 42 தொகுதிகளே கிடைத்து உள்ளது. இந்த நிலையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் மராட்டிய மக்களை கடுமையாக தாக்கி எழுதி இருக்கிறார்.
 ”தமிழகத்தில் கருணாநீதி, ஜெயலலிதா, ஒரிசாவில் பி ஜி பட்நாயக் மற்றும் பிற மாநிலங்களில் மாநிலத்தின் நலன்களுக்காக பாடுபட்டவர்களுக்கு அந்த மாநிலத்து மக்கள் வாய்ப்பளிக்கின்றனர். ஆனால் மராட்டிய மாநிலத்தவர்கள் இது நாள் வரை மராட்டியத்தை படுபாதாளத்திற்கு அழைத்து சென்ற காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பளித்திருக்கின்றனர். இது மேலும் மேலும் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்யவழி வகுக்கும் இனி எனக்கு அனைவர் மீது நம்பிக்கை போய்விட்டது” இவ்வாறு சாம்னாவின் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக