24 அக்., 2009

இடிபாடுகளில் சிக்கிய ரெயிலின் முன்பகுதி

இடிபாடுகளுக்கு இடையில் ரெயில் புறநகர் ரெயில்

ரெயிலின் உட்புற தோற்றம்

டிரைவர் வெங்கட்ராமனின் உயிரை காப்பாற்ற நடக்கும் முயற்சி

இடிந்து விழுந்த பாலம் கொஞ்சம் சிந்தியுங்கள் ரெயிலின் நடுபகுதியில் விழுந்து இருந்தால் இந்நேரம் ஒரு தேசிய துயரமாக அறிவிக்கபட்டு இருக்கும்

மும்பை சி எஸ் டி ரெயில் நிலையம் மாலை 7 மணிக்கு எடுத்தது

தானே ரெயில் நிலையத்தில் எடுத்த படம் இடமின்றி கூரையின் மீது பயணம்

வெளியூர் செல்ல காத்திருக்கும் ரெயிலுக்காக காத்திருக்கும்  பயணிகள் இடம் சி எஸ் டி எக்ஸ்பிரஸ் நிலையம்

ஆர்க்கிமெண்ட் நோ யூஸ் சி எஸ் டி ரெயில் நிலையத்தில்

ரெயில் ஓடவில்லை பஸ்ஸில் இடமில்லை முல்லுண்ட் நாக்காவில் எடுத்த படம்

மாலை ஐந்து மணி இன்னும் பணிகள் தொடர்கிறது.

 ஒரு விபத்து, 2 நபர் உயிரிழப்பு, 11 பேர் காயம், 463 புறநகர் ரெயில் சேவை நிறுத்தம், 18 வெளியூர் சேவை ரெயில் நிறுத்தம் சுமார் 12 லட்சம் பயணிகள் தவிப்பு, காரணம் இரண்டு அதிகாரிகளின் அலட்சியம்.

கல்யானில் இருந்து  மும்பை நோக்கி சென்றுக்கொண்டு இருந்த ரெயிலில் மீது காலை 10. 45 மணி அளவில் தண்ணீர் குழாய் செல்வதற்காக போடப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்த து. மும்பையை தென் மாநிலங்களுடன் ரெயில் பாதை மூலம் இனைக்கும் முக்கிய பகுதி பாதிக்கபட்ட தால் இந்த நிலை
  தானே மாநகராட்சி நாங்கள் பழுதுபார்ப்பதற்காக அனுமதி கேட்க்கும் பேதெல்லாம் ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து விடுகிறது. இது தானே மாநகராட்சி கமிசனர் லாலின் தரப்பு வாதம், மத்திய ரெயில்வேயோ நாங்கள் பல முறை அனுமதி அளித்து இருக்கிறோம் ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த பாலத்தை பழுது பார்க்க அவர்கள் சரியான நேரத்தில் வரதவறிவிடுகிறார்கள். அதற்குள் ரெயிலை இயக்குவதற்கான நேரம் ஆகிவிடுவதால் ரெயில் இயங்க ஆரம்பித்து விடுகிறது.
  கப்பல் விபத்து அல்லது விமான விபத்து ஏற்பட்டால் பைலட் மற்றும் காப்டன் தான் இறுதி வரை இருந்து அனைத்து பயணிகளும் காப்பாற்றபட்ட பிறகு தப்பிக்க முயற்சிப்பார்கள் இல்லை என்றால் அவர்களும் மரணத்தை தழுவி விடுவார்கள். இன்று தமிழரான வெங்கட்ராமன் என்ற ரெயில் டிரைவரும் அப்படித்தான் மூன்று மணிநேர கடுமையான போராட்டங்களுக்கு பிறகு அவரை டிரைவர் கேபினில் இருந்து மீட்டனர் ஆனால் அவர் டிரைவர் இருக்கையில் அமர்ந்தவாரே உயிர்விட்டிருந்தார். 

லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ 10000, பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சம், மரணமடைந்த டிரைவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் மற்றும் வேலை என அறிக்கைவிட்டிருக்கிறார்கள் ரெயில்வே இலாகாவினர்.
அரசு ஆட்சி அமைப்பதில் பிஸியாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக