8 அக்., 2009

மராட்டிய அன்னையின் வளமான எதிர்காலத்திற்காக




                         மராட்டியத்தில் தேர்தல் அறிவித்த பிறகு வாக்காளர்களுக்கா ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று தயாரிப்பதற்காக அறிவிப்பு வெளியானது. அதற்கான கூட்டத்தில் பல, பாடகர்கள், குறும்படம் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் கலந்து கொண்டன தேர்தல் அருகில் வந்து விட்டது.ஆனால் இன்று வரை அவர்கள் ஒன்றும் செய்ததாக‌ தெரியவில்லை,நானே ஒரு ஆல்பம் தயாரிக்கலாம் என்று அரசு அதிகாரி சில டி வி நடிகர்கள் என குரல் பதிவு செய்தேன் ஆனால்  முழுமையாக்கு வதற்குள் தெர்தல் முடிந்து விடும் போல் நீண்டு கொண்டே போகிறது. அதனால் என்னால் முடிந்தது, என்னை வாழவைக்கும் மராட்டிய அன்னையின் வளமான எதிர்காலத்திற்காக






தமிழனாக பஞ்சாபியனாக, குஜராத்தியனாக‌
வங்காளியாக பிறந்தாலும் சரி

மராட்டிய அன்னையின் அன்புகரம்
படிவதால் எங்கு பிறந்தாலும்
எந்த மொழி பேசினாலும்
இந்த மண்ணை தொட்டவுடன் மனம் சொல்லுகிறது

வாழ்க என் மராட்டிய அன்னை,
நான் உனக்கு கடமை பட்டுள்ளேன் (2)

தவறிவிழுநது விட்டால் அய்கோ என்று உச்சரிக்கும் வார்த்தையும்
தோழி சொல்லும் பாய்யிகோ ,என்று நம்மை மறந்து வரும்
செல்ல வார்த்தை மராட்டியே
கோபம் வரும் போது
யாராது பொறுமையை சோதிக்கும் போது
உதடுகள் உச்சரிக்கும் வார்த்தை மராட்டியே

சிந்தித்து கொள் நம்மை அரவணைத்தவள்
மராட்டிய அன்னை உன்னை அவள் கைவிட்டதில்லை

வாழ்க என் மராட்டிய அன்னை,
நான் உனக்கு கடமை பட்டுள்ளேன் (2)

நினைவு படுத்தி ‍பார் மராட்டிய மண்ணில்
நமது குழந்தை பருவத்தை
எந்த வீட்டின் முற்றத்திலும் சென்று விளையாடுவோம்
நமது விளையாட்டையும் அமர்ந்து
ரசிக்கும் மராட்டிய மண்ணில் வாழ்வும் உள்ளங்கள்

சிந்தித்து கொள் நம்மை அரவணைத்தவள்
மராட்டிய அன்னை உன்னை அவள் கைவிட்டதில்லை

வாழ்க என் மராட்டிய அன்னை,
நான் உனக்கு கடமை பட்டுள்ளேன் (2)

இந்த விடியோவின் இறுதியில் எங்களுக்காக  தீவிரவாதிகளுடன் போராடி
இன்னுயிர் துறந்த மராட்டிய மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக