31 அக்., 2009
வெளிச்சத்திற்கு வரும் எக்விரா கோவில் தரிசனம்.
கட்சியை விட்டு விலகி வேறு கட்சியுடன் இணைய மாட்டேன் , சத்தியம் வாங்கி கொண்ட ராஜ் தாக்கரே
லோனாவாலா(மராட்டியம்) அக்டோபர்.30
மும்பைக்கு அருகில் உள்ள லோனா வாலா எக்வீரா கோவிலுக்கு நவ நிர்மான் கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவுடன் புதிதாக மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட எம் எல் ஏக்கள் 13 பேருடன் சென்றது அனைவருக்கும்
தெரிந்தே.
சிவசேனாவின் 20 வருடம் அரசியல் போராட்டத்திற்கு பிறகு தான் எம் எல் ஏக்கள் மந்திராலயாவில் நுழைந்தனர். சிவசேனாவில் இருந்து 2007-ம் ஆண்டு பிரிந்த ராஜ் தாக்கரே நவநிர்மான் சேனா என்ற புதிய கட்சியை உருவாக்கினார். கட்சி உருவான முதல் மூன்று வருடங்களில் முதல் முறையாக தேர்தலை சந்தித்த நவநிர்மான் கட்சி 13 எம் எல் ஏக்களை பெற்றது. இந்த வெற்றி நான்கு பெரிய கட்சிகளாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சிவசேனா மற்றும் பாரதிய சனதாவிற்கு பெரிய அதிர்ச்சியை தந்தது. முக்கியமாக சிவசேனா இந்த முறை வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. நவ நிர்மான் சேனா மராட்டியர்களின் ஓட்டுக்களை பிரித்ததுதான் காரணமாக கூறப்படுகிறது. தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை காங்கிரஸை விட குறைவான எம் எல் ஏ கிடைத்து
உள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸை மதிக்கும் போக்கில் மாற்றம் தெரிந்து வருகிறது. இந்த நிலையில் சரத்பவார் நவநிர்மான் சேனாவின் 13 பேரையும் தனது கட்சிக்கு இழுக்கும் வேலையை உள்ளுக்குள் செய்துவருவதாக தகவல் கிடைத்தது. நவ நிர்மான் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் சிவ சேனா தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான், இவர்களை சரத்பவார் எளிதில் பிரித்து விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக எம் எல் ஏக்களை அழைத்து சென்று எக்வீரா தேவியின் சன்னதியில் சத்தியம் வாங்கிகொண்டார்.
கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலை போன்று சத்தியம் மீறுபவர்களுக்கு பல இன்னல்களை தரும் கோவில் என்று மராட்டியத்தில் பெயர் பெற்ற கோவில் என்வீரா தேவி கோவில். இது குறித்து சிவசேனா முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரை கேட்டபோது சிவசேனாவின் பால் தாக்கரே இதே போல் செய்தார் என்றும், அதன் பிறகு தொடர்வெற்றிகள் கிடைத்ததும், கோவிலை மறந்து விட்டார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் உள்ள சஞ்சய் நிருபம், மந்திரி நாராயன் ரானே போன்றோரும் தேசிய வாத கட்சியில் உள்ள சஜன் புஜ்பால் ராஜ் ஹன் சிங் போன்றோரும் சிவசேனாவில் இருந்து வெளியே வந்தவர்கள்.
இதில் நாராயன் ரானே வினால் கோங்கன் பகுதியில் சிவசேனா பலத்த தோல்விகளை சந்தித்து வருகிறது. அதே வேளையில் சஜன்புஜ்பாலினால் வடக்கு மராட்டியத்தில் தோல்விகளை சந்தித்து வருகிறது. நவநிர்மான் கட்சி எம் எல் ஏக்களும் இது போன்று வேறு கட்சிக்கு தாவிவிடக்கூடாது என்று சாமர்த்தியமாக இந்த கோவிலுக்கு சென்று எம் எல் ஏக்களிடம் சத்தியம் வாங்கிகொண்டார்.
இது மட்டும் அல்லாமல் கட்சிக்கு தூரோகம் இழைக்கமாட்டேன், வரும் வருமானத்தில் 50 % கட்சிக்கு தரவேண்டும் என்று சில சத்தியங்களை எக்ஸ்ராவாக வாங்கிகொண்டார் இது பற்றி சந்தேகம் கொள்ளும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக நவ நிர்மான் கட்சி எம் எல் ஏக்கள் அனைவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேவரவில்லை, பாரம்பரிய வழக்கபடி கோவிலில் சத்தியம் எடுத்துகொண்ட பிறகு மூன்று நாட்கள் வெளியாட்கள் யாருடன் பேசக்கூடாது என்பது ஆண்டாண்டும் காலமாக இருந்து வருகிறது. அனைத்து கட்சி எம் எல் ஏக்களும் நன்றி அறிவித்தல், புதிய அரசு அமைக்க ஆதரவு தெரிவித்தல், கட்சி கூட்டங்கள் என தொகுதிகளில் சுற்றி கொண்டு இருக்கும் போது நவ நிர்மான் கட்சி எம் எல் ஏக்கள் மட்டும் வீட்டின் விட்டதை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கின்றனர். இந்த செய்தி குறித்து நவநிர்மான் கட்சியின் செய்தி தொடர்பாளை சஞ்சய் பார்க்கரிடம் மும்பை நிருபர் பேசிய போது இது வெறும் வதந்தி எங்கள் கட்சி இவ்வளவு குறிகிய காலத்தில் அசுர வெற்றிஅடைந்திருப்பதால் பொறாமை கொண்டு இப்படி புரளியை கிளப்பி விடுகின்றனர் என்றார்.
இந்திய தேர்தல் ஆனையம் நேற்று நவநிர்மான் கட்சியை மாநில கட்சியாக அங்கிகரித்துள்ளதும் இங்கே குறிப்பிடதக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக