
இதே கூட்டனி மீண்டும் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பானமை இடங்களை பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த வருடம் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரசை விட குறைந்த இடங்கள் கிடைத்ததும், தேசிய வாத காங்கிரசின் முக்கிய அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் மண்ணை கவ்வினார்கள். இதனால் காங்கிரஸ்கட்சி தனது உண்மையான புத்தியை காட்ட துவங்கி இருக்கிறது. தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் எம் எல் ஏ கூட்டத்தில் சஜன் புஜ்பால் துணைமுதல் மந்திரியாக தேர்தெடுக்கப்பட்டது தெரிந்ததே. இந்த கூட்டத்தில் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பாய் பட்டேல் 1999 மற்றும் 2004 வருடத்திய பார்முலாமே மந்திரி எண்ணிக்கையில் பின் பற்ற படும் என்றார்.
இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியில் சலசலப்பைஉண்டு செய்து விட்டது. நம்மை விட குறைவான எண்ணிக்கையில் இருக்கும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் மந்திரி பதவி கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் டில்லியில் இது குறித்து தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத பவார் மற்றும் அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரும் விமான போக்குவரத்து துறை அமைச்சருமான பிரபுல்பாய் படேல், போன்றோர் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் இந்த பேச்சு வார்த்தை தற்போது மேலும் தீவிரமாகி இருக்கிறது. இதனால் தனது பிறந்த நாளான நேற்று பதவி ஏற்க வேண்டிய மராட்டிய மாநில முதல் மந்திரி அசோக் சவான் நேற்று தனது வீட்டிலேயே பிறந்த நாளை கொண்டாடினார்.
அசோக் சவான் இன்று மீண்டும் டில்லி செல்வார் என்று எதிர்பார்க்க படுகிறது. இதனிடையே தேசிய வாத காங்கிரஸ் ஒருவருடம் தொடர்பு கொண்ட நமது நிருபரிடம் கூறியதாவது” எக்காரணத்தை கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு உள்துறையை தரமுடியாது, காங்கிரசின் இந்த முரன்பாடு தேவையில்லாதது, எங்கள் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்களை விட குறைவாக இருந்தாலும் மராட்டிய மாநிலத்தில் அதிக சதவிதம் ஓட்டுக்கள் எங்களுக்குதான் கிடைத்து இருக்கிறது. மேலும் சிவசேனா வலுவான பகுதியாக கருதப்படும் தானே பகுதியில் எங்கள் கட்சியினர் அமோக வெற்றி பெற்று இருக்கின்றனர். மந்திரிகள் பற்றிய எண்ணிக்கையில் நாங்கள் விட்டுகொடுக்கும்
பேச்சிற்கு இடமில்லை என்று கூறினார். தற்போது உள்ள அரசியல் சூழலில் தனது பெயரை வெளியிட வேண்டாம் என்றும் நமது மும்பை நிருபரிடம் அந்த தலைவர் கேட்டு கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக