23 அக்., 2009

எதிரியின் பலவீனம் தனக்கு சாதகம்


காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் மராட்டியத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்கிறது.
மராட்டியமக்கள் மற்றும் இந்தியாவின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மராட்டிய மாநில தேர்தல் முடிவுகள் இன்று காலையில் இருந்தே வெளியாக துவங்கின. வாக்கு எண்ணிக்கை துவங்கிய அரை மணிநேரத்திற்குள்ளாகவே மராட்டியம் மற்றும் மும்பையில் இருந்து காங்கிரஸ் தேசியவாதம் காங்கிரஸ் கூட்டனி மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.



  ராஜ் தாக்கரே இந்த தேர்தலில் மூலம் தனது அரசியல் கணக்கை துவங்கியுள்ளார்.  மும்பையில் உ பி காரர்கள் , மற்றும் குஜராத்தியர்கள் அதிகம் வாழும் (45 % 80 %) காட்கோபரில் நவநிர்மான் வென்றதற்கு காரணம் ஒருவேளை நாம் ஓட்டுப்போட்டால் நம்மை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற எண்ணமாக இருக்கலாம்???? @





 சிவசேனா பாரதிய கட்சி இரண்டும்  சேர்ந்து 20 வருட த்தில் காணாத தோல்வியை தழுவி இருக்கிறது. சிவசேனாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எதிர்கட்சி தலைவர் ராம் தாஸ் கதம் குஹார் தொகுதியில் தேசியவாத காங்கிரஸிடம் தோல்வியை சந்தித்தார்.
மும்பராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜித்தேந்திர ஆவட் வெற்றி கனியை பறித்து சென்றார். இவர் ஆரம்ப சுற்றில் பின்னால் இருந்தார். ஆனால் ராஜன் கினி இந்துக்கள் அதிகமாக வசிக்கும் கல்வா, ரேத்தி பந்தர் போன்ற பகுதி ஓட்டுக்கள் மொத்தமாக கிடைத்த து. ஆனால் மும்பாரா கவுசா ஓட்டுகள் இறுதியாக எண்ணபட்டபோது ஒட்டு மொத்த மும்பரா-கவுசா வாசிகளும் ஜித்தேந்திர ஆவட்டை தேந்தெடுத்து இருந்தனர்.(காரணம் ராஜன் கினி மும்பராவை சேர்ந்தவர், வருடம் முழுவதும் இருந்த வரைமுறையற்ற மின் வெட்டு பற்றி பல முறை இவரிடன் புகார் கொடுத்தும் ஆளும் கட்சியின் மீது பழியை போட்டு இவர் வீட்டில் மட்டும் இன்வெட்டர் வைத்து கொண்டு ஏசி போட்டு கொண்டு தூங்கியவர்.
மக்கள் பார்த்தார்கள் எப்போது பார்த்தாலும் ஆளும் கட்சி மீதே பழியை போடுகிறார். தற்பொது ஆளப்போவதும் காங்கிரஸ் தே வா கா தான் அதனால் அவர்களையே தேர்தெடுக்கலாம் என்ற நினைப்பில் ஜித்தேந்திர ஆவடை தேர்ந்தெடுத்தார்கள். இது குறித்து மும்பராவை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் குறிப்பிட்ட து. எங்களுக்கு நன்கு அறிமுகமாகியவர் எங்களுடன் இருப்பவர்தான் ராஜன் கினி ஆனால் எங்களின் பிரச்சனைகளை கையாள தெரியாதவர் அதனால் அவரை நாங்கள் நிராகரித்து விட்டோம் என்றார். உண்மையிலேயே நல்ல ஜனநாயக தீர்ப்பு.

தாதாவாகி பிறகு அரசியலில் குதித்த அருன் காவ்லி இந்த முறையும் சட்டசபைக்கு செல்ல போகிறார். இவரும் ஆரம்ப கட்ட த்தில் தோல்வியை தழுவுவார் என்று தெரிந்த து ஆனால் பைகுல்லாவில் உள்ள தகடிசால் ஓட்டுக்கள் இறுதி நேரத்தில் பிரிக்கபட்ட போது இவர் முந்தி கொண்டார். இருப்பினும் நவ நிர்மான் சேனா இவரை சிறிது நேரம் டென்சனிலொ ஆழ்த்த்தி விட்ட து. பின்னே இப்போது கூட இவர் ஜாமினில் தானே வெளியே இருக்கிறார்


பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் கொலை செய்யபட்ட பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மஹாஜன் மும்பை காட்கோபர் தொகுதியில் தோல்வி அடைந்தார். இவரது தோல்விக்கு கட்சியின் உள்ள உறுப்பினர்களே காரணம் என்று கூறப்படுகிறது. இவரது தோல்வி பரிதாபத்திற்கு உரியது. மாநிலத்தில் உள்ள அனைத்து பிரபலங்களில் மகன் மகள் தேர்ச்சி பெற்றபோது இவர் மட்டும் தோற்றது இவரை சும்மா காட்சி பொருளாக நிற்கவைத்து காலைவாரிவிட்ட து பா ஜ க 
.
சகஜன் புஜ்பாலின் பங்கஜ் புஜ்பால் வெற்றியை தட்டி சென்றார். இவருக்கும் சிவசேனாவிற்கும் பலத்த போட்டி இருந்த து. இருப்பினும் அப்பாவின் ஆசி இறுதி சுற்றில் வெற்றி.
மராட்டிய மாநில பாரதிய சனதாவின் முத்த தலைவரின் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே வெற்றி வெற்றிபெற்றார்,

முன்னாள் முதல்வரும், இன்னாளைய மத்திய அமைச்சருமான சுஷில் குமான் சிண்டேவின் மகள் பிரானாதி ஷிண்டே சோலாப்பூர் தொகுதியில் முதல் முறையாக வெற்றிபெற்று சட்டசபையில் நுழைய விருக்கிறரார். பிரதிபா பாட்டிலின் மகன் ராவ்சாகேப் செகாவத் அமராவதி தொகுதியில் இருந்து தன்னுடைய வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
  சரத் பவாரின் அண்ணன் மகன், மருமகனின் சகோதரர், உதவியாளரின் மகன் என அனைவரும் அமேக வெற்றி பெற்று விட்டனர்.

 தங்களுக்கு அடித்து கொண்ட காரணத்தால் ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருக்க வேண்டிய மூன்றாவது அணி ஒரு இடத்தில் கூட வராமல் பல இடங்களில் டிபாசிட்டை இழந்தும் நின்றது பரிதாபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக