9 அக்., 2009

மாவோய்ஸ்டு தாக்குதல் உயரதிகாரிகள் உட்பட 17 காவலர்கள் உயிரிழப்பு


மும்பை, கட்சுரேலி(மராட்டியம்) அக்.09.


        
மும்பை:- அக் 7:- இரண்டு நாட்களுக்கு  முன்பு மும்பை வந்திருந்த உளத்துறை மந்திரி பி.சிதம்பரத்திடம் நான் கேட்ட கேள்வி மாவோய்ஸ்டுகளால் தேர்தலில் ஏதாவது பாதிப்பு உண்டா என்றதும். எப்பொழுதும் போல் கேசுவலாக இல்லை இல்லை தேர்தல் சமயத்தில் எந்த நகசலைட்டுகளின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் மக்கள் ஜனநாயகத்தில் விருப்பம் கொண்டு உள்ளனர். அதனால் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் செல்லா காசாகிவிடும் என்ற தோனியில் பதில் அளித்தார்.

         



                கட்சுரேலி(மராட்டியம்):- லகோரி காவல் நிலையத்தில் இருந்து ஒரு கி/மீ தொலைவில் சுமார் 300 மேற்பட்ட மாவோய்ஸ்டுகள் நேற்று இரவு தாக்குதல் நடத்த துவங்கினர். முக்கியமாக தேர்தல் பாதுகாப்பிற்காக வந்த சிறப்பு காவலணி மற்றும் நகசலைட்டு ஒழிப்பு படைப்பிரிவு, உள்ளூர் போலீஸ் பிரிவினர் மீது நடத்த பட்ட இந்த தாக்குதலில் சிறப்பு கமேண்டா பிரிவின் உயரதிகாரி ராமே குரியானி, மற்றும் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தேஷ்முக் உட்பட 17 காவலர்கள் கொல்ல பட்டனர். திடிரென நடைபெற்ற இந்த தாக்குதலில் நிலைகுலைந்த காவலர்கள் எதிர்தாக்குதல் நடத்துவதற்குள் அனைவரும் காட்டிற்குள் தப்பி ஓடிவிட்டனர்.

நக்சலைட்டுகள் குறித்த தகவல் கிடைத்ததும் உயரதிகாரிகள் குழு தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்து இருக்கிறது. தற்போது இறந்த காவல்ர்களின் உடல் அப்புறபடுத்தும் பணி நடந்து வருகிறது. சுமார் 3000- மேற்ப்பட்ட காவலர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இனைந்து மிகப்பெரிய தேடுதல் வேட்டையை இன்று துவக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

லகோரி சத்தீஸ்கரில் இருந்து சில கி.லோ மீட்டர் தூரமே இருப்பதால் நகசலைட்டுகள் எளிதில் எல்லை கடந்து விடுகின்றனர். மேலும் சத்தீஸ்கர் மாவட்ட எல்லைப்பகுதி கிராமங்களில் பொது மக்களின் ஆதரவும் அவ்வளவாக இல்லாததால் போலீசாரின் தேடுதல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த வியாழன் அன்று போலீசுக்கு தகவல் தரும் ஹனாமான்  என்பவரை பொது மக்களுக்கு மத்தியில் மாவோயிஸ்டுகள் தூக்கிலிட்டு கொண்றனர்.

இந்த வருடம் மட்டும் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் சுமார் 52 காவலர்கள் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தகது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக