23 செப்., 2009

அரசியல் காட்சிகள்

நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மும்பை ஆசாத் மைதானத்தில் உள்ள மராட்டிய
மாநில பத்திரிகையாளர் சங்கத்திற்கு திடீர் விஜயம் செய்தார் . அவருடன்
பிரகாஸ் மோகோஸி விஜய குமார் பந்துளா பத்திரிக்கையாளர் சங்க தலைவர்கள்

இது மராட்டிய ஸ்டெயில்; மராட்டிய மாநில முன்னாள் முதல் அமைச்சரும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியில் அமரவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையுடன் நம்பிக்கையில்  மால்வான்மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தனது வேட்பாளர் மனுவை தாக்கல் செய்ய சென்ற போது
     
‍‍‍‍‍‍காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் கட்சி  பெரிய தலைகள்


 முதல்வர் அசோக் சவான்:-10 வருடமாக நம்மை நம்பி ஓட்டு போட்டவர்களை ஓட்டிவிட்டோம், அடுத்த முறையும் நம்மை நம்புவர்களா? மீண்டும் அடுத்த மாதம் நமக்கு மீண்டும் இதே சீட் கிடைக்குமா, அல்லது கிளப்பி விட்டு விடுவார்களா ஒன்றுமே புரியவில்லை
துணை முதல்வர் சஜன் புஜ்பால்:- கவலைப்படாதீர்கள் திருப்பதிக்கு எங்க குடும்பமே மொட்டை போட வேண்டிக்கொண்டேன், பந்தர்பூருக்கு நடந்து செல்வதாக நேர்ந்துகொண்டேன், நாசிக் பஞ்ச லிங்கத்திற்கு பஞ்ச நதி தீர்தத அபிசேகம் செய்வதாக நெர்ச்சை, அஸ்டவினாயகர் கோவில்கள் அனைத்திற்கும் நவரத்தின மாலை தருவதாக வேண்டுதல், சோலாப்பூர் லட்சுமி தேவிக்கு பச்சை கும்பகோனபட்டு சாற்றுவதாக வேண்டுதல், சனி சிங்கனாப்பூருக்கு அன்னாதானம், சிரிடி சாய்பாப கோவிலில் சிறப்பு பூசை, குல்பர்கா தர்காவில் பட்டாடை சாற்றல், ஹாஜி அலி தர்காவிற்கு சிறப்பு மலர் சென்டு தருவதாக வேண்டுதல், வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு சிலை காணிக்கை, ஐயப்பனுக்கு மாலை, பந்திரா மலைமாதா கோவிலுக்கு சிறப்பு சாற்றுதல் இதெல்லாம் சாம்பிள்இன்னும் நிறைய இருக்கு ,. கவலைபடாதாதீர் இவ்வளவு சாமிகளில் ஏதாவது சில  சாமிகள் கூட்டனியை உடைத்து கொண்டு நம்மக்கு அருள் புரியாத என்ன??
















சிவ சேனா பாரதிய ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட போது உடனிருப்பவர் மனோகர் ஜோஷி, கோபிநாத் முண்டே, உத்தவர் தாக்கரே, ம மாநில பா ஜா க தலைவர் நிதின் கட்கர், சட்டசபை எதிர்கட்சி தலைவர் ராம் தாஸ் கதம்

தேர்தல் வந்ததால் ஒற்றுமை வரும்



மராட்டிய மாநில தேர்தல் நேற்றுவரை பழமை பேசிக்கொண்டு காவிக்கொடியின் கீழ் அடம்பிடித்து அமர்ந்திருந்த பல கட்சிகளை தேர்தல் என்னும் மந்திர வார்த்தை பச்சைகொடியையும் பிடிக்கவைத்துள்ளது.

மும்பை நகரமெங்கும் ஈத் முபாரக், என்ற வாழ்த்து பேனர்கள் பிரம்மாண்ட அளவில் மும்ரா, பாந்திரா, முகமது அலிசாலை, மாகிம், மிரா சாலை என நகர் மற்றும் புறநகரங்களில் அதிகமாக இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிகளில்
எங்கு நோக்கினும் நைலான் பேனர்கள் காணப்படுகிறது.

இஸ்லாமியர்கள் விடயத்தில் மேம்போக்காக வாழ்த்து சொன்ன காவி கட்சிகள் இந்த முறை முழுமையாக இறங்கி வாழ்த்துக்கள் கூறிவருகிறது. இந்த தேர்தல் திரிசங்கு நிலைக்கு கொண்டு சென்றுவிடுமே என்ற நிலை இருந்து வருகிறது. இது நாள் வரை காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை கொண்டு செல்லும் பாலமாக இருந்த சமாஸ்வாடி கட்சி இந்த வருடம் மூன்றாம் கூட்டனி என ஒன்றை அமைத்து தனியாய் போய்விட காங்கிரஸ் கலக்கத்தில் இருக்கிறது. காவிக்கூட்டனியில் ராஜ் தாக்கரே பெரும் தலைவலியாக இருக்கிறார். காவிக்கூட்டனிக்கு இப்போது காங்கிரஸ்+தே வா க போட்டியாக தெரியவில்லை, ஆனால் புதிதாக ஆரம்பிக்க பட்ட நவ நிர்மான் கட்சி பெரும் தடையாக தெரிகிறது, ராஜ் மி மராட்டி பேசினாலும் தனது கொடியில் தலித்துகள், இஸ்லாமியர்கள், போன்றவர்களை கவர்ந்து இழுக்கும் நீல மற்றும் பச்சை வர்ணங்களை சேர்த்துவிட்டார்.

 இதனால் நடுநிலையுடன் இருக்கும் கொஞ்ச நஞ்ச சிறுபாண்மை இனத்தவரும் நவ நிர்மான் கட்சியின் ரெயிலுக்கு ஓட்டு போடும் சூழல் வருமா என்ற கவலை ஏற்பட்டது. மேற்கூறிய காரனங்களை முன்னிட்டு சிறுபாண்மையினர், தலித்துகளில் ஓட்டுகளை பெற முழுமையாக களத்தில் இறங்கிய காவிகள் நகரம் எங்கும் ஈத் முபாரக் கூற ஆரம்பித்து விட்டார்கள்.

தேர்தல் வரை பார்க்கலாம் மக்கள் தீர்ப்பு யார் பக்கம் என்று

பரிசு பொருட்கள் முக்கானாங்கயிறு


 திருவிழா நெருங்கிவிட்டது, யாரும் கிப்ட் என்ற பெயரில் வண்ண காகிதம் சுருட்டிய பார்சலை தந்தால் மனதில் மின்னால் வெட்ட அதை வாங்கிவிடவேண்டாம்.
நம் நகரை பொருத்தவரை (மும்பை) கணபதிக்கு பிறகு திருவிழா நாட்களுக்கு பஞ்சமே இல்லை , அதே போல் மெல்ல மெல்ல வரும் பரிசு பொருட்களுக்கும் பஞ்சமில்லை, கடந்த வருடம் மும்பை மந்திராலயா(அரசு தலைமை அலுவலகம்) வில் உள்ள நுழைவு  தீபாவளி சமயங்களில் உள்ளே கொண்டு சென்ற பரிசு பொருட்கள் இந்தியாவே அதிர்ச்சியூட்டும் அளவிற்கு இருந்தன. ஆம் அரசு அலுவலகம் ஒன்றில் பரிசாக அயல் நாட்டு மதுபாணங்கள் ,தங்க நாணயங்கள்,புதிய இறக்குமதி செய்யபட்ட கார்களில் சாவிகள்,என விலை உயர்ந்த பொருட்கள்,
பத்திரிக்கைகள் குறிப்பாக தொலைக்காட்சி சகோதரர்கள்(பொறாமையில்) இந்த பார்சல்கள் பாதுகாவலர்களால் பரிசோதிக்க படும் போது தங்களது டீ.வி திறையில் ஒரு புறம், மந்திராலயாவின் முழுதோற்றத்தையும் மறுபுறம் இந்த பார்ஸல்களில் உள்ள சம்திங் சம்திங்கை மாறி மாறி காண்பித்து மந்திராலாயவில் மரியாதையை காற்றில் பறக்கவிட்டது.
விலையுயர்ந்த பரிசு பொருள் விடயம் அப்போதைய விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையினாலான காங்கிரஸ் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறிவிட்டது.
 தற்போது பொருப்பில் இருக்கும் அசோக் சவான்  தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த விடயத்தில் முக்கானாங்கயிறு போட முயற்சித்து இருக்கிறது.
எத்திக் பாலிஸி
தீபாவளி போன்ற சமயங்களில் விலையுயர்ந்த பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், நகைகள் போன்றவற்றை வாங்க வேண்டாம் என்று ரகசிய உத்தரவிட்டுள்ளாதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் தீபாவளியில் புதிய அரசு அமைந்துவிடும், இருப்பினும் புதிய அரசு தலைமை ஏற்ற உடனே தலை தீபாவளி சிக்கலான தீபாவளியாக அமைந்து விடக்கூடாது என்ற கவலையும் அரசியல் கட்சியிடம் வர துவங்கி விட்டது.
இதனிடையே விலையுயர்ந்த பரிசு பொருட்களை தரும் நிறுவனங்கள், தனிநபர்களை கண்காணிக்கும் நடவடிக்கையும் மறைமுகமாக எடுக்கபட்டு வருகிறது.

















மந்திராலயா நபர்களுக்குள் இப்போது சங்கடமான சூழல். ஆண்டாண்டு தீபாவளி என்றாலே பரிசு பொருள் வாங்கி பழகிப்போன கரங்களுக்கு இந்த வருடம் எப்படி வெறுங்கையுடன் வீட்டிற்கு செல்ல சென்றால் மனைவி மந்திராலயாவில் வேலைபார்த்து என்ன கிழித்தீர்கள் என்று கேட்பாளே என கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.
(அதனால் என்ன சாகிப் ஜி இப்பவே தங்களை சிறப்பாக கவனிப்பவர்களிடம் தங்களது வீட்டு முகவரியை கொடுத்து விடுங்கள் சிக்கல் தீர்ந்தது)

14 செப்., 2009

TPI_MUMBAI PRESENTS {BOLLYWOOD}

பாலிவுட்டை பொருத்தாவரை பாப்பி தியொல் , கங்கனா ராவுத் நடித்த வாதா ரகா- ஏதோ பார்க்கலாம்




 





மிதுன் சக்ரவர்த்தில் சோகன் ஷா, ஓம் பூரி நடித்த பப்பர் மிதுன் சார் யார் யாரோ ரிட்டைரு ஆகிறார்கள்,


நீங்கள் ஏன் சார் ரிட்டைர் ஆக மாட்டீங்கிறீங்கா,
 
சல்லுமியா, ஆயிஷா தாக்கியாவோட வாண்டேட், நல்லா இருக்குங்கா பாக்கலாம் நிச்சியமா டைம்பாஸ் படம்


 







தில் போலே ஹடிப்பா  ராணி முகர்ஷி உண்மையிலேயே நல்ல மூடில் நடித்து இருக்கிறார்கள் போல் முதல் முதலாக சாஹித் கபூரோட ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள், படம் பார்த்து விட்டு வரும் போது நமது மனமும் சொல்லும் ஹடிப்பா,

கமீனே, கிசான், எல்லாம் நல்ல போய்கிட்டு இருக்கிறது நம்ம எங்க குயிக் கன் சர்வனோட  டப்பிங் குக் கன் முருகனும் நல்ல போகிறார். பலர் இதை தமிழ் படம் என்றே நினைத்து கொண்டு இருக்கிறார்கள், தமிழர்கள் எல்லாம் இதை இந்திபடம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள், இது கொஞ்சம் லேட் பிக் அப்
ஆனால் சூப்பர் டைம்பாஸ்ங்க  மைண்ட் இட் :}


முக்கியாம செய்தி புதிதாக ஆரம்பிக்க பட்ட பாலிவுட் பார்வை மூன்று நாட்களில்  270 புள்ளிகளை தொட்டு இருக்கிறது. 
               தமிழ் படங்கள் மீது தான் நம்மவர்களுக்கு காதல் என்றால் ஹிந்தி படம் மற்றும் பிற மொழி படங்கள் மீதும் பாசம் குறையவில்லை போலும்
ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி உங்களின் ஆலோசனைகளை அப்ப அப்ப தெரியபடுத்துங்க

வரும் வாரம் நல்ல வாரமாக அமைய வாழ்த்துவது தமிழ் பிரஸ் இன்போ மும்பை

பொதுவான செய்திகள் சென்றவாரம்{TPI Common News}

                மும்பைக்கு நிம்மதியான ஒரு செய்தி மும்பைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் தங்களில் கடந்த சில நாட்களாக பெயத மழையின் காரணமாக  தண்ணீர் இருப்பை பெருக்கி கொண்டது துளசி போன்ற ஏரிகள் முழுவதுமாக பெருகிவிட்டது. இந்த வாரம் புதன் அன்று நடக்கும் மாநகராட்சி கமிட்டி கூட்டத்தில் தண்ணீர் குறைப்பு பற்றி விவாதித்துதண்ணீர் கட் அகற்றபடும் என்று தெரிகிறது,
தொடர்புடைய செய்திகள்
மும்பை மக்களுக்கோர் நல்ல செய்தி 

இந்த வாரம் குயிக் கன் சர்வனின் எச்சரிக்கை சாலையை கடைக்காதீர்கள், 60 to 120 வரை தண்டம் வசூல் செய்து விடுவார்கள். ரெயில் நிலையங்களில் எச்சில் துப்பி மாட்டி கொள்ளவேண்டாம், அப்படி மாட்டி கொண்டால்  2 மணி நேரம் ரெயில் நிலையங்களில் வேறு யாரும் துப்புகிறார்களா என்று கண்கானிக்க வேண்டும், உங்களைகண்கானிப்பவர்கள் Railway police Force .

 MIND ID BY QUICK GUN SARVN
தொடர்புடைய செய்திகள்
பல பேரின் கண்கள்  காதலிக்க ஆரம்பித்து விட்டது. நன்றி அஞ்சலி மேடம் நிறைய போன் கால்கள் வந்தது.
தொடர்புடைய செய்திகள்





அரசியல் களம் சென்ற வாரம்{TPI POL}

தேர்தல் களத்தை பொருத்தவரை உடைத்து சுக்கு நூறாகி போய் இருக்கும் ரிபப்ளிக்கன் பார்ட்டி ஒன்று கூடும் என்ற செய்தி கனவாகியே போகும் என்று தெரிகிறது. ஏற்கனவெ சிவசேனா, சிவ் சக்தி + பிம் சக்தி = தேச பக்தி என்று சில வருடங்களுக்கு முன்பு போட்ட பாலிசியை விபரமக இப்போது முறையாகபயண்படுத்தி கொள்ள இருக்கிறது. விளைவு காங்கிரஸ் மீது வெறுப்பாக உள்ள அத்தனை பீமரா கட்சியின் வாக்கு அனைத்தும் சிவசேனாவிற்கு செல்லும் போல் தெரிகிறது. இதனால் அத்வலே அல்லது வாக்மாரே போன்றவர்களை காங்கிரஸில் இழுக்கும் வேலை பலமாக நட்ந்து வருகிறது, ராம் தாஸ், பிரகாஸ் அம்பேத்கார் மற்றும் கவாய் இந்த மூன்று முக்கிய ரிபப்ளிக்கன் பார்ட் தலைவர்களும் இந்த வாரம் முக்கியமுடிவு எடுப்பார்கள் என்று தெரிகிறது;

தேர்தல் பங்கீட்டில் சிவசேனா- பா.ஜ.க முந்தி சென்று விட்டது. ஆனால் காங்கிரஸ்- தே.வா கா அநேகமாக திங்கள் கிழமை டில்லியில் இருந்து தொகுதி பங்கீடு குறித்த அறிக்கை வெளிவரும் என்று நினைக்கிறோம்.வேறு நகரின் முக்கிய செய்திகள்
   தொடர்புடைய செய்திகள்
 

கிரைம்: TPI Rank 3

மாநகர போலிஸ் கமிசனர் திரு தா. சிவானந்தம் சிறந்த இலக்கியவாதியும் கூட
கிரைம்: இந்த வாரம் இதை எழுதும் வரை 12 கொலைவழக்கு, 40 மேற்பட்ட வழிப்பறி கொள்ளை, மற்றும் குர்லாவில் தாயே மகளின் காதல் விவகாரம் பொறுக்காமல் அவளை ஆல்வைத்து கொலை செய்து நாடகமாட.விசயம் போலீசாருக்கும் மிகவும் தாமதாம் தெரியவர தாயும் கொலைக்கூலி ஆட்களும் கம்பி என்னுகிறார்கள்.
பாந்திரா ஒர்லியில் கடல்பாலத்தில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்று இந்த வார விபத்து அட்டவனையில் முதலிடம் வகிக்கிறது. அதிகமாக விபத்துகள் நவிமும்பையில் இருந்து பன் வேல் செல்லும் நெடுஞ்சாலையில்நிகழ்வதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது,
சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை பொறுத்தவரை நகரில் இருந்து பல கி.மீ தூரம் இருக்கும் சாங்கிலி-மீரஸ் நகரமதசண்டை சர்ச்சைக்குறிய போஸ்டரை வைக்க அதன்மூலம் வன்முறை வெடிக்க தேர்தல் சமயத்தில் சில கட்சிகள் தங்களுக்கு வாக்கு வாங்கும் சதாமாக கருதி கொண்டது. இருப்பினும் தமிழகத்தை போல் நீயா நானா பார்க்காமல் அனைத்து கட்சிகளும் உடனே ஒன்று கூடி பேசினார்கள்.பிரச்சனை உடனடியாகமுடிவிற்கு வந்து விட்டது. பார்க்க படம்.

H1N1 TPI:- Rank 2

                   ஆரொக்கிய விடயத்தை பொருத்தவரை உலகம் முழுவதையும் பயமுறுத்தி தற்போது இந்தியாவை  பயமுறுத்திக்கொண்டு இருக்கும் ஸ்வன் புளு விட்ட பாடு தெரியவில்லை. நகர ஆரோக்கிய மற்றும்தோற்றுநோய் நிர்வாகம் வேறு முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டது, இரண்டாவது தாக்குதல்மிகவும் பயங்கரமாக இருக்கும் என்று வேறு பயமுறுத்தி விட்டார்கள்.
        பூனாவில் 35 வயது பெண்இறந்ததை தொடர்ந்து இந்த நோயினால் இறந்தோரின் எண்ணிக்கை 43 ஐ தொட்டு விட்டது. இதில் கவனிக்கபட  வேண்டிய விடயம் என்ன வென்றால் ஆரம்ப கட்ட பரிசோதனையின் போது H1N1 சின்ரோம்தெரியவில்லை, அதனால் நாங்கள் அதற்குறிய சிகிச்சை அளிக்கவில்லை, ஆனால் மருந்துகளினால் குணமடையாத போது முழுவதும் முற்றிய நிலையில் தான் பரிசோதனை கூடத்தில் உறுதிபடுத்தபட்டது, என்று சாஸ¤ன் பொது மருத்துவமனை டீன் குறிப்பிட்டுள்ளார்.
           கர்ப்பவதிகளில் உடலின் ஆரம்பகட்டத்தில் H1N1 சின்ரோம் கண்டறிவதற்கான சாதனங்கள் நமது நாட்டில் மிகவும் குறைவாக உள்ளதாகவேறு டில்லி மருத்துவ கழகம் அறிக்கை வெளியிட்டு திகிலூட்டி இருக்கிறது.  பொதுவாக கர்ப்பவதி பெண்களின் உடலில் எதிர்ப்பு சக்தி இரண்டு விதமான வகைகளிலும் நடுநிலையில் இருக்கும் அதீத எதிர்ப்பு சக்தி அல்லது நோய் எதிர்ப்பின்மை போன்ற மந்த உணர்வு,[ வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற வகையில் இயற்கையின் பொதுவான செயல் பாடு ஆனால் இயற்கையின் இந்த செயல் பாடு இன்று பல தாய்மார்களின் உயிருக்கு உலைவைக்கும் காரியமாக மாறிவிடுமோ என்ற கவலை வேறு எழ ஆரம்பித்து உள்ளது. 
                        இனி வரும் நாட்கள் மும்பைக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போகும் போது கைகுட்டை மறக்காதீர்கள். பூனாவை பெருத்தவரை கணேசர் திருவிழாவில் அதிகமாக H1N1  வைரஸ் பரவியதாக ஆய்வரிக்கையில் வந்துள்ளது. மும்பையிலும் கணேசர் திருவிழாவிற்கு பிறகு மருத்துவமனை யில் கூட்டம் அலைமோதின, ஜாவ்டேக்கர் சார் What about Mumbai city 
தொடர்புடைய செய்திகள்

மும்பை கடந்த வாரம், TPI Rank First முதலிடம் பெறுவது

மும்பை கடந்த வார திங்கள் முதல் சனிவரை பெருபாண்மையான விமான பயனிகளுக்கு சிக்கலான வாரமாகவே அமைந்து விட்டது. பெரும்பாண்மையான கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் பலவருடபயணஅனுபவம் என்பதால் ஜெட் ஏர்வேய்ஸ் தொடர்ந்து விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளில் இந்தியாவில் மட்டும் சுமார் 45 சதவீதம் பேர் 
                
                                   உலகில் உள்ள முன்னனி தனியார்விமான நிறுவனங்களில் இதுவும் ஒன்று, கிட்ட தட்ட இந்தியாவின் அனைத்து நகரங்களையும் ஜெடவிமானம் ஆகாயமார்க்கமாக இணைத்து விட்டது, உலகில் இந்தவிடயத்திலும் ஜெட் உலக சாதனை படைத்து விட்டது. ஆனால் சுமார் 15 வருட சாம்ராஜ்ஜியம் ஒரே வாரத்தில் வீதிக்கு வந்து விட்டது,

               ஆம் சில நாட்களுக்கு முன்பு வெகு நாட்களாக மேனேஸ்மெண்டின் ஈகோ பிரச்சனையால் செக் வைக்கபட்ட சில பைலட்டுகள் சப்பை காரணங்களுகாக வீட்டிற்கு அனுப்பபட்டனர், இது தான் ஜெட் சட் என்று சிட் ஆகிவிட்டது.
 எப்படி பார்த்தாலும் இரண்டு தரப்பிலும் விட்டு கொடுத்திருக்கலாம் எத்தனை பேருக்கு சிரமம், பாவம் எத்தனை பயணிகள் கண்களின் பதட்டத்துடன் அங்கும் இங்கும் அலைவதை நேரில் பார்த்து இருக்கிறேன்.இந்த சந்தடியை பயன்படுத்தி சக விமாண நிறுவனங்கள், தங்களது பணபெட்டியை நிறப்பு வேலை ஜரூராக
பார்த்து கொண்டது, இங்கு ஒன்று விளங்கியது. அதாவது இந்தியாவின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் சட்டங்கள் கட்டங்களுக்குள் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது, என்று ஏனேனில் விமான பயண சட்டப்படி சிரமமான காலங்களில் தனியார் நிறுவனங்கள் தங்களில் விலைபட்டியலை எக்காரணத்தை கொண்டும் ஏற்றக்கூடாது. இதில் சரியாக எழுத பட்டுள்ளது. போர் காலங்கள், மற்ற பேரிடர் சமயங்கள் பிற விமான நிறுவனங்கள் சிக்கலில் இருக்கும் போது, இதில் மூன்றாவதாக சொன்ன விடயம்குப்பையில் போடபட்டுள்ளது.
இது குறித்து வேறு தனியார் விமான  கிரவுண்ட் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் "தனியார் விமான சிக்கலில் இருக்கும் போது தான் குறிப்பிட்டுள்ளதே தவிர அவர்களின் தனிப்பட்டபிரச்சனையில் இருக்கும் போது எளிதாக தீர்க்க கூடிய பிரச்சனைகளில் அவர்கள் இழுத்தடிக்கும் போது இந்த சரத்து சேர்க்க படாது என்று பெரிதாக ஒரு குண்டை தூக்கி போட்டார். பிரபுல் பாய் படேல் ஜி கவனத்தில் கொள்வீரா?? என்ன செய்ய மராட்டிய மாநில தேர்தல் பிஸியில் மூழ்கிவிட்டீர்கள்.
  கடந்த வார விமான பயண கட்டணவிபரம் அட்டவனை
விமான நிலையத்தில் சென்று சேகரித்து
மும்பை சென்னை சாதாரன சமயங்களில் 3000-5000 ஜெட் ஸ்ரைக்கினால் பிற விமான நிறுவனம் வைத்த கட்டணம் 13000-19000 என்னங்க இது நியாமா என்றால் ஆமா உன்னை எவன் விமானத்தில் போக சொல்கிறான் என்று வேறு பதில் வருகிறது. ஒரு வழியாக சில பாட்டில் விஸ்கி மற்றும் கார ஐயிட்டங்களுடம் விமான நிலையம் அருகில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நெற்று முன் தினம் பிரச்சனை சுமூகமானது அந்த நான்கு விமான பைலட்டுகளும் மீண்டும் பணியில் அமர்த்த பட்டனர்.
நேற்று சுமார் 100 முதல் 170 விமானிகள்[ வருகை பதிவேட்டின் படி] வெள்ளை தொப்பியை அனிந்துவிட்டனர். எல்லாம் சரிங்க உங்கள் ஐந்து நாள் நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் நிலை தடுமாறி போன பொதுமக்களுக்கு யார் நீதி வழங்குவார்கள்,
இது  தான் ஜனநாயகமா ????????????????????????????????????????????????
 
தொடர்புடைய செய்திகள்
 

    

அதிசய உலகம் {நாசா வெளியிட்ட புதிய புகைப்படங்கள்

    சென்ற வார உலகம்,
சென்ற வாரம் புதன் கிழமை அன்று நாசாவின் அதி சக்தி   வாய்ந்த தொலை நோக்கி, 2009-ம் வருடத்தில் முதல் முதலாக இதுவரை மனித இனம் காணாத பிற தொலைநோக்கிகள் தந்திராத பிரபஞ்சத்தின் பல ரகசியங்களை புகைப்படம் பிடித்து வெளியிட்டது. கதிரியக்க கற்றை கள் பலகேலக்ஸி கூட்டங்களில் பின்னி பினைந்திருக்கும் காட்சி இந்த கற்றைகளால் பினைக்கபட்ட காலக்ஸிகள், மற்றும் அதில் இருந்து பிரிந்து சென்ற பிறகும் கற்றைகளின் தாக்கங்கள் அந்த காலக்ஸிகளை புதிய ஒளிவடிவமாக  வைத்திருக்கும் படம்.
இந்த காலக்ஸிகள் சூரிய குடும்பங்களை விட்டு பல  டிரில்லியன் ஒளிவருட தூரத்தில் இருக்கிறது.
மின் காந்த கதிர்வீச்சு அதிர்வினால் பிரபஞ்சத்தில் உருவான பட்டாம்பூச்சி போன்ற தோற்றம்.
ஈர்ப்பு விசை அதிகமாக கொண்ட கெலக்ஸி கூட்டங்களான ஆபல் 370
பிளானட் ஜுபிட்டரின் தோற்றம்
பிரபஞ்ச அதிசயங்களில் ஒன்றான வண்ண வண்ண நட்சத்திரக்கோளம்
மீள் சுழற்சி வகை கேலக்ஸிகள்  ஸ்பிரிங் கேலக்ஸி  எனப்படுகிறது என்.ஜி.சி. 6217
பலவித கேலக்ஸிகளும் அந்த கேலக்ஸிகளில் இருந்து எறியப்படும் நட்சத்திர கூட்டங்களும் ஊதாநிற நட்சத்திரக்கோளம் இளமையான வை, சிகப்பு நிற நட்சத்திரக்கோளம் வயதானவை

13 செப்., 2009

gosh choti dongra yevadhi{மராட்டிய மாநில விவசாயி}

மராட்டிய படம் gosh-choti-dongra-yevadhi சாதாரனமானவை
சாதாரனமானவை   ஆனால் மலைபோல்

ஆனால் மலைபோல் ஆம் எளிதாக தீர்க்க கூடிய மராட்டிய மாநில விவசாயிகளின் பிரச்சனைகளை அரசியல் காய்களை நகர்த்தி ஓட்டுக்களை பெறுவதற்காக மராட்டிய மாநில விவசாயிகளின் வாழ்க்கை பிரச்சனையில் விளையாடும் அரசியல் வாதிகள் அவர்களின் பிடியில் சிக்கிகொண்ட விவசாய குடும்பம் என்ற கருத்தை மையமாக கொண்டு எடுக்கபட்ட படம்

கதை- gosh-choti-dongra-yevadhi  {bollywood parvai}

12 செப்., 2009

பாலிவுட் பார்வை:- தமிழ் பிரஸ் இன்போ

தமிழ் பிரஸ் இன்போ  வழங்கும் பாலிவுட் பார்வை
ஹிந்தி /மராட்டி  திரைப்படங்களின் ஸ்டீல்கள், திரைப்பட பிரிமியர் நிகழ்வுகள், சிறப்பு
நிகழ்ச்சிகள் பதிவுகள் மற்றும் போட்டோ காலரி, முதல் முதலில் தமிழில்
More..................
PLS click Your Mouse Here

TPI-MUMBAI{BOLLYWOOD}

www.tpibollywood.viviti.com
www.tpibollywood.viviti.com
www.tpibollywood.viviti.com

11 செப்., 2009

இன்றைய அரசியல் காட்சி

தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்கள் தேர்வு குறித்து ஆலோசனை மும்பை நரிமன் பாய்ண்ட்டில்

உள்ள தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மற்றும் மத்திய விவசாய்துறை மந்திரி சரத்பாவார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மராட்டிய மாநில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்ஆர்.ஆர்.பாட்டில் , துணைமுதல் மந்திரி சகன் புஜ்பால், முன்னாள் மாநில மந்திரி சூர்யகாந்த் பாட்டில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிவேதிதா மானே, தற்போதைய அரசின் மந்திரிசபையில் பங்குவகிக்கும் மந்திரி விஜய்சிங் மோகிதே பாட்டில், முன்னாள் மாநில தலைவர் அருன் பாய் குஜராத்தி, மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பாபன் ராவ் பாஜ்புதேம் ஹேம்ந்த டாக்ளே, குருநாத்குல்கர்னி, ஆகொயோர் கலந்து கொண்டனர்.
 ஸ்வபிமான் இயக்கத்தின் தலைவர் நிதேஸ் ரானே-தொழில்த்துறை மந்திரி நாராயன் ரானேவின் மகன்- மராட்டிய மாமன்னன் சத்திரபதி சிவாஜி குறித்த புத்தகம் ஒன்றை நவிமும்பை வாஜியில் ஆர்பிட் மாலில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது ஸ்டார்டீவில் நடந்து வரும் சத்திரபதி சிவாஜி குறித்த வரலாற்று நாடகத்தில் சிவாஜியாக வேடமிட்டு வரும் அமோல் கோள்கே, மற்றும் புத்தக ஆசிரியர் நாம்தேவ் ஜாதவ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது நிதேஷ் ரானே மும்பையில் உள்ள புத்தகடைகளில் மராட்டி புத்தகங்கள் பார்க்க கிடைப்பதில்லை, அதனால் மராட்டிபுத்தகத்திற்கு முன்னுரிமை அளித்து அவற்றை விற்பனைக்கு வைக்குமாறு கேட்டுகொண்டார் - நிதேஷ் பாய் வைக்கலாம் ஆனால் யார் வாங்குவார்கள்-
மத்திய எரிசக்தி துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இன்று மும்பை காந்திபவனில் வைத்து பத்திரிக்கை நிருபர்களை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியின் போது மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் மானிக்ராவ் தாக்கூர், மும்பை காங்கிரஸ் தலைவர் கிருபாசங்கர் சிங், மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் சஞ்சய் தத், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜிவ் சாவந்த், மற்றும் பிரமுகர்கள் உடன் இருந்ததனர்.

தாராவி கோடிகளில் விற்பனை ஆகும் குடிசைகள்


மும்பை, செப்.11



  தாராவி புரணமைப்பு திட்டம் எவ்வளவு நாட்கள் தாமதமாகிறதோ அவ்வளவு விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. தாராவி புரணமைப்பு ஒரு புறம் மந்த மான பொருளாதாரம் என்ற வார்த்தை ஒன்றைகையில் வைத்து கொண்டு  தாராவி புரணமைப்பு திட்டம் நீண்டு கொண்டே போகிறது, இன்னும் வீடுகள் எத்தனை சதுர அடி என்று பேச்சு வார்த்தை முடியவில்லை இந்த நிலையில் பல பணமுதலைகள் தாராவியில் பணம் கொட்ட தயாராகி விட்டனர். இன்னமும் வீடு எத்தனை சதுர அடி ஒதுக்கல், சிறுதொழில்களுக்கான இதர திட்டங்கள், மற்றும் அடிப்படை வசதிகள் இதற்குள் தனியாருக்கு ஒதுக்கும் இடங்கள் என இழுபறியில் இருந்து கொண்டு இருக்கும் தாரவியில் ஒரு குடிசை உங்களுக்கு இருக்கிறது அப்படி என்றால் முன்பெல்லாம் நீங்கள் லட்சாதிபதிகள், ஆனால் இன்றைய நிலையில் நீங்கள் கோடீஸ்வரர்கள்,

          தற்போது மும்பை முழுவதும் ரியல் எஸ்டேட் வியாபாரம் கண்ணைமூடிக்கொண்டு ராக்கேட் வேகத்தில் ஏறிக்கொண்டு போகிறது. இந்த நிலையில் தாராவி  புரணமைப்பு  திட்டத்தில் தங்களின் பணத்தை போட பல பெரிய கட்டுமான நிறுவனங்கள் முன்வந்த நிலையில் இவர்களுக்குள் தற்போது போட்டி ஏற்ப்பட்டுள்ளது. அதாவது அவர்களை விட நாங்கள் அதிகம் தருகிறோம் என்ற போட்டி இதனால் தாராவி மக்கள் சந்தோசத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர். ஒரு காலத்தில் சாக்கடை ஓடும் குறிகிய சந்துகளில் வாழ்ந்த மக்களின் கைகளின் கோடிகள் புரண்டு கொண்டு இருக்கின்றன.



        சமீபத்தில் தனியார் நிறுவனம் தாராவியில் நடத்திய ஒரு ஆய்வில் கடந்த  3 மாதங்களில் மட்டும் 7000 குடிசைகள் 700 கோடிக்கு விலை போய் இருக்கிறது.
வரும் காலங்களில் இந்த தொகை மேலும் உயரவாய்ப்பிருக்கிறது. சமீப காலமாக மேம்பட்டு வரும் உலக பொருளாதாரம் தான் இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்கு முதலில் நிலங்களில் தான் முதலீடு செய்வார்கள், முக்கியமாக தற்போதைய பொருளாதார சரிவின் மூலம் இந்தியாவின் அனைத்து துறைகளில் உலகத்தாரின் கண்கள் பட்டுவிட்டது. இதனால் தாராவி போன்ற மெகா திட்டங்களில் உலகின் பார்வை திரும்பி உள்ளது, இதை புரிந்து கொண்ட பல நிறுவனங்கள், இப்போதே தாராவி நில விற்பனைகள் பற்றி தங்களுக்கு ரகசிய விளம்பரங்கள் உலகெங்கிலும் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது .






         இதனால் இந்த திடீர் விலையேற்றம் என்றும் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த வாய்ப்பை புரிந்து கொண்ட தாராவி லோக்கல் தாதாக்கள், தங்களில் பாணியில் நாட்கணக்காக அடைபட்டு கிடக்கும் குடிசைகளின் மீது பார்வை போயிருக்கிறது.






             இப்படி பட்ட குடிசைகள் தான் சமீபகாலமாக அதிகமாக விற்பனை ஆகியிருக்கிறதென்றும், தற்போதைய நிலையின் படி குடிசைகளில் வசிப்பவர்களின் வீடுகள் கூட அவர்கள் அறியாமல் விற்க வாய்ப்பு இருக்கிறதென்றும் இது பல இடங்களில் நடந்து இருக்கிறது என்றும் தெரிய வருகிறது என்று அந்த தனியார் நிறுவன ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

மொழி மாற்றத்தில் பிரச்சனை, மும்பை தீவிரவாத தாக்குதல் முடிவுக்கு வராத மெகா தொடர்.

  
மும்பை, செப்.11
மும்பை தாக்குதல் நடந்து ஒருவருடம் சோக தின கொண்டாட போகும் நாளும் வந்து விட்டது-இன்று 11/09- அமேரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.

           வழக்கு விசாரனை இன்னும் இழுத்து கொண்டு தான் போய்க்கொண்டு இருக்கிறதும் முக்கியமாக ஒவ்வொரு விசாரனையின் போது நடப்பது எல்லாம், வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார்களா என்று புரியாத புதிராக இருக்கிறது.

           நேற்று மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரிக்கும் நீதிமன்றத்தில் ,மும்பை சி.எஸ்.டி, மற்றும் தாஜ் ஓட்டலில்  மீட்க்கபட்ட ஆர்.டி.எக்ஸில் உருதுவில் எழுதபட்ட சில காகிதங்கள் ஒட்ட பட்டு இருந்தது. இது என்னவென்று கண்டறிய மும்பைக்கு அருகில் உள்ள சிறிய நகரமான பீவண்டியில் இருந்து ஒரு மொழிபெயர்ப்பாளரை அழைத்து வந்தனர். அவரும் கடந்த  மாதமாக 5 வார்த்தைகளை ஆராய்ந்து -ஆம் அந்த சீட்டில் ஐந்து வார்த்தைகள் எழுதி இருந்தது- அந்த ஐந்தில் இரண்டு அரபி வார்த்தை என்ற மிகப்பெரிய ரகசியத்தை நெற்று கோர்ட்டில் சொல்லி இருக்கிறார்,
                    நாட்டின் மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இன்று தொழில் நுட்பங்கள் எவ்வளவோ பெருகி விட்டது. அந்த ஐந்து வார்த்தைகள் அடங்கிய சீட்டை எங்கோ உள்ள பீவண்டியில் இருந்து ஒருவரை அழைத்து வந்து மொழிமாற்ற சொல்லி இருப்பதும் அதுவும் 7 மாதங்களுக்கு பிறகு அவர் அதில் இரண்டு வார்த்தை அரபி அது எனக்கு தெரியாது என்று சொல்வது நகைப்பிற்கு இடமாக இருக்கிறது. மும்பை பல்கலைகழகத்தில் பல முனைவர்கள், பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள். இல்லை என்றால் அதிகாரபூர்வ முறையில் அரபி நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இந்த காகித்ததை அனுப்பி இருந்தால் எப்போதோ என்ன எழுதி இருக்கிறது என்று தெரிந்திருக்கும்.

                கனம் நீதிபதி அவர்கள் இந்த விசாரனையின் போது தனது கோபத்தை நேற்று வெளிப்படுத்தினார். அதாவது ஏன் பீவண்டியில் இருந்து ஒரு மொழிபெயர்ப்பாளரை கொண்டு வரவேண்டும், மும்பையில் அரபி, உருது தெரிந்தவர்கள் யாருமே தெரியாதா, என்று கேட்டுள்ளார்.

                அப்படி என்னதான் அந்த சீட்டில் எழுதி இருக்கிறது என்று பார்த்த போது அதன் அரபி உச்சரிப்பு அமாரோ அஸ்காரி அதாவது தவறுக்கு தண்டனை வழங்கும் இறைத்தூதர்.

                 வழக்கை விசாரித்து வருவோருக்கு இந்த உண்மை தெரிந்து இருக்கவேண்டும் போல அதுதான் மிகவும் மிதமான போக்கில் இந்த விசயத்தை கையாளுகிறது.

தீர்வை தேடுங்கள் குறைகளை அழித்துவிடுங்கள் (TAO 79)



           தாவோ மதம் மந்திர தந்திரங்களால் ஆனது அல்ல, மந்திர தந்திரவாதிகள் என்றாலே தாவோ மதத்திற்கு கடுமையான எதிரிகள், மந்திரவாதிகள் மக்களை ஏமாற்றுகிறவர்கள், நட்சத்திரங்களை பார்த்து பலன் சொல்கிறவர்கள்(ஜோசியகாரர்கள்), குறி சொல்கிறவர்கள், இதர மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் என்று பலவாறு ஏமாற்றுபவர்கள் தாவோவிடம் இருந்து தப்ப முடியாது. இவர்கள் குறைகளை அடுக்கி கொண்டே போவார்கள், வருபவர்களின் கவலை முகங்களை பார்த்து அவர்களில் ஒரு சில வார்த்தைகளிலே அவரகளுடைய முழு குடும்ப கஷ்ட நஷ்டவிபரங்களை அறிந்து கொள்வார்கள். அவர்களுக்கு அது ஒரு கலை அதை மீண்டும் தன்னிடம் வரும் நபர்களுக்கு சொல்லும் போது வியப்பு கொள்வார்கள். அவர்களுக்கு தெரியாது இவர்கள் தான் சில வினாடிகளுக்கு முன்பு நூலின் முனையை மந்திரவாதி/பூசாரி/ஜோசிய/ காரர்களிடம் கொடுத்கொடுத்தோம் என்று தெரியாது. சரி மந்திரவாதிகள்/பூசாரி/ஜோசியகாரர்கள் என்ன செய்வார்கள் கடந்த கால,  வருங்கால குறைகளை சொல்லிகொண்டே போவார்கள் அவர்களால் தீர்வு சொல்ல முடியாது தீர்வு சொல்ல முடியுமானால் மந்திரவாதிகள்/பூசாரி/ஜோசியகாரர்கள் இந்த வியாபாரத்திற்கு வந்திருக்கவே முடியாது. மந்திரம்/ஜோசியம் என்பது பவுத்தம் மற்றும் தாவோ விடம் கிடையாது. 
            தாவோ நிரந்தர தீர்வை தருவார்கள் அதற்காக அவர்கள் எங்களிடம் வாருங்கள் நாங்கள் தீர்வு சொல்கிறோம் என்று விளம்பரபடுத்தமாட்டார்கள், தாவோ மதத்தை சேர்ந்தவர்கள் சிறந்த வழிகாட்டிகள் என்று  பலனை அனுபவித்தபிறகு தான் தெரியும்.

                   கோவாவை சேர்ந்த அல்பர்ட் மெஸ்கரந்தஸ்  3 குழந்தைகளின் தந்தை, பானாஜி நகர எல்லையை ஒட்டிய சிறிய மலை குன்றின் அடிவாரத்தில் இவர்களது வீடு இருக்கிறது. சிலவருடங்களுக்கு முன்பு  மழைக்காலத்தில் நிலச்சரிவினால் வீடு இடிந்து போனது , குடும்பத்தினர் அனைவரும் பிழைத்து கொண்டனர். ஆனால் குடும்ப தலைவரான மெஸ்கரந்தஸ்க்கு மட்டும் நிறந்தர ஊனம் ஏற்பட்டுவிட்டது. அவர் அரசின் உதவிக்காக தனது மூன்று சக்கரவண்டியின் அலையாய் அலைந்தார். அரசு உதவி எளிதாக கிடைத்துவிடுமா என்ன? யாருடைய கையெழுத்தோ பாக்கியாம்.    வீட்டுக்கார அம்மா ஏதோ சில வீடுகளில் வேலை பார்த்து குடும்பத்தை நகர்த்திகொண்டு இருக்கிறார். பாவம் சில வருடங்களுக்கு முன்பு கறிக்கோழி மொத்தவியாபாரம் பார்த்த மெஸ்கரந்து உடல் ஊணமுற்ற பிறகு அந்த வேலையை செய்ய முடியவில்லை.

                   நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த தனக்கு ஏன் இந்த நிலைவந்தது  ஏதாவது பூர்வ ஜென்ம சாபமா என்று அறிய வசாயை அடுத்து உள்ள ஒரு சிறுநகரத்தில் அடிக்கடி பத்திரிக்கைகளில் பேச்சு அடிபடும் ஒரு மந்திரவாதியை/பாபாவை சந்தித்திக்க சென்றார்.பாபா சில ஊதுபத்திகளை ஒரு சாமி புத்தகத்தில் இருந்து  மெஸ்கரந்தின் கைகளில் கொடுத்து அந்த புத்தகத்தின் உள்ளே உங்களால் முடிந்த அளவு ஒரு ரூபாய் கூடவைத்தால் போது அதுதான் காணிக்கை என்றார்.

        அதன் பிறகு நீங்கள் எவ்வளவு வைப்பீர்களோ அதைவிட 10 மடங்கு நீங்கள் வீட்டிற்கு சென்று 24 மணிநேரத்திற்குள் வரும் என்றார். இதனை அடுத்து மெஸ்கரந்தஸ் தான் கொண்டு சென்ற மூன்று 500 நோட்டுக்களை அந்த சாமி புத்தகத்தில் வைத்து அவரிடம் தந்தார். அந்த பாபாவும் உங்களுக்கு பலன் அளிக்கவில்லை என்றால் உடனே வந்து இந்த ரூபாயை எடுத்துகொண்டு சென்றுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அந்த பணத்தை அதே சாமி புத்தகத்தில் வைத்து இருப்பேன் என்றார். சில மந்திரங்கள் சொன்னார். மெஸ்கரந்தின் வீடு  முன்பு சுடுகாடாக இருந்தது, அங்கு அப்படி நடந்தது, இப்படி நடந்தது என்று பலவாறு சொன்னார்.

                அதானால் தான் உங்களது குடும்ப சீரழிந்தது என்றும் சொன்னார். இறுதியில் சரி நீங்கள் போங்கள் எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்றார். பாபாவிடம் வந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் பாருங்கள் என்று பல தொழிலதிபர்களுடன் எடுத்த போட்டோக்களை காண்பித்தார். அதன் பிறகு சில 500 ரூ தாளை வாங்கி கொண்டார். புதிதாக சென்ற வீட்டில் எதும் கெட்டது வராமல் இருக்க ஒரு தாயத்து ஒன்றை அந்த சில 500 ரூ தந்துவிட்டார். மொத்தம்  ரூ.4000 மேல் செலவும் தனது மனைவியின் நகைகளை கடையில் வைத்து இந்த பணத்தை வாங்கிவந்திருந்தார். மூன்று வருடங்கள் கழிந்தது அரசு அறிவித்த உதவி தொகையும் வரவில்லை   மந்திரவாதி சொன்னது போல் அவர் கொடுத்த சில 500 ரூபாய்கள் பன்மடங்காகவும் இல்லை , அதை போல் நூறு மடங்கு ரூபாய்கள் மருத்துவ செலவிற்கு குழந்தைகளில் பள்ளிக்கூட செலவிற்கும் தான் போனது.

                          அங்குள்ள ஒரு தாவோ துறவி ஒருவரிடம் இவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. இவர் பவுத்தம்/ தாவோ மீதேல்லாம் கிண்டல் மனப்பான்மை கொண்டவர். வெட்டியாக காலத்தை போக்கும் சாமியார்கள் /பிச்சை எடுத்து வயிறுவளர்ப்பவர்கள் என்று அடிக்கடி கிண்டல் அடிப்பார். தனக்கு கஷ்ட காலம் ஏற்பட்ட சில மாதங்களுக்கு பிறகு தாவோ துறவியிடம் பேச ஆரம்பித்தார். அப்போது தாவோ பற்றி தாவோ துறவி சொன்னார். இயற்கையை வஞ்சிக்காதே அது உன்னை வஞ்சிக்கும் என்றார்.

                   இருப்பினும் நீ இயற்கையை நேசி அது உன்னை நேசிக்கும் என்றார். அந்த பணம் பிடிங்கி மந்திரவாதியின் மீது கூட இவருக்கு அவ்வளவு கோபமில்லை ஆனால் இந்த தாவோ துறவி மீது கடுமையான கோபம் வந்துவிட்டது.  ஆனாலும் ஒன்றும் சொல்லமுடியாமல் தனது மூன்று சக்கர வாகணத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.   பாதி இடிந்த நிலையில் இருந்த தனது பழைய வீட்டின் வழியாக திரும்பிக்கொண்டு இருந்தார்.  அந்த வீடு நேராக மலையின் அடிவாரத்தில் இருந்தது. மலைக்கும் வீட்டிற்கு இடைவெளியில்லாமல் அமைந்திருந்தது. அவரது மூதாதையார் அந்த வீட்டிற்கு முன்புறம் பல அடிதூரம் வீடு கட்டி இருந்தனர். மெஸ்கரந்தஸ்ஸோ அந்த இடங்களை செங்கள் சூளைகாரர்களுக்கு கொடுத்து விட்டு வீட்டை மலையை ஒட்டி கட்டிகொண்டார். செங்கள் சூளைக்காரர்கள் மலையில் இருந்து மண் எடுத்து கொண்டு இருந்தார்கள்.

                              இப்போது புரிந்துவிட்டது. தாவோ வின் சூட்சுமம் வியந்து போனார் மெஸ்கரந்தஸ் சுமார் 42 வருட காலமாக இதை தெரியாமல் இருந்தேனே என்று வருத்தபட்டார். மறுநாள் தாவோ பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாக மீண்டும் துறவியிடம் சென்றார். துறவியிடம் உண்மையை மறைக்காமல் சொன்னார் நேற்று நீங்கள் தாவோ பற்றி சொல்லும் போது எனக்கு பயங்கர கோபம் வந்தது. ஆனால் பழைய வீட்டின் வழியாக செல்லும் போதுதான் உண்மை தெரிந்து கொண்டேன். முன்னோர்களின்  யோசனையை கழித்துவிட்டு மாதாமாதம் கிடைக்கும் சிலநூறு ரூபாய்க்காக இன்று இந்த நிலைக்கு வந்துவிட்டேன் என்று மனதார துறவியிடம் சொல்லி வருந்தினார்.                  

                         ஆனால் அவனுக்குத்தெரியும் அங்கு அவனுக்கு ஒன்றும் கிடைக்காது இருப்பினும் சில நாட்கள் அங்கு வர ஆரம்பித்தான். தாவேவை பற்றி பல கேள்விகள் கேட்டான். இப்போது அவனுக்கு மனது மிகவும் தொம்பாக இருந்தது. முன்பு போல் சோகமாக அவன் இல்லை, கால்கள் இழந்த பின் இருந்த அதே நிலைதான் அதே வருமைதான் ஆனால் இப்போது அவனிடத்தில் ஏதோ ஒரு சக்தி பிறந்திருக்கிறது. அவன் குழந்தைகளிடத்தில் வெறுப்பாக பேசுவதில்லை, அதைவிட எப்போதும் அவனை திட்டி கொண்டே இருக்கும் மனைவி அவனிடத்தில் அன்பாக நடக்க ஆரம்பித்தாள்.  இந்த மாற்றங்கள் அவனுக்கு எப்படி ஏற்பட்டன என்று தெரியவில்லை. மறுநாள் மீண்டும் துறவியின் தாவோ கோவிலுக்கு செல்கிறார்.

                                 தற்செயலாக அவனுக்கு ஒரு யோசனை வருகிறது ஒரு காகிதமும் பேனாவும் எடுத்துகொள்கிறான். தாவோ கோவிலுக்கு வந்தது முதல் அதற்கு முன்புவரை என்று பிரித்து எழுத துவங்குகிறான். அவனுக்குள் சந்தோசம் அடங்கவில்லை. ஆம் அவனது வாழ்வில் நடந்த சில மாற்றங்கள்   தாவோ கோவிலுக்கு சென்றதில் இருந்து வந்தவை அவனுக்கு அரசு பணம் இன்னும் வந்து சேரவில்லை, வீட்டில் மனைவி குழந்தைகளின் அன்றாடைய தேவைக்கு இன்னும் போராட்டம்தான் இருப்பினும் அவனுக்கு நிறைய நல்ல மாற்றங்கள். 
            
                   அன்று மாலை தனது மூன்று சக்கர வாகணத்தில் வீடு திரும்புகிறான். தனது இடிந்து போன பழைய வீட்டின் வழியாக சென்று கொண்டு இருந்தான். மண்சரிவு ஏற்பட்டு வீடு இடிந்த பிறகு செங்கல் சூளைகாரர்களும் ஓடிவிட்டனர். அந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் மனித சஞ்சாரமே கிடையாது. அவனது வீட்டில் மாலை நேரம் சில பறவைகள் அடைவதை கண்டான். ஆம் செங்கல் சூளையிலும் ஆங்காகே அமர்ந்திருந்த அந்த பறவைகளை பார்த்தான் அவனுக்கு சந்தோசம் தாங்கவில்லை. அது காடையினத்தை சேர்ந்த பறவை சாதாரன கறிக்கோழி விலை 40.ரூ ஆனால் இந்த காடை இனபறவையின் விலையோ 150 முதல் 200 வரை வீட்டிற்கு செல்ல வில்லை மீண்டும் தாவே கோவிலுக்கு செல்கிறான்.

                        ஆனால் கோவிலை மூடிவிட்டு துறவி திரும்பி கொண்டு இருந்தார். வேகமாக வரும் இவனை பார்த்ததும் துறவிக்கு ஆச்சரியம் அல்லது வேறு எந்த உணர்சியும் காட்டவில்லை, பொறுமையாக என்ன என்று கேட்டார். எனக்கு ஒரு பாதை தெரிந்துவிட்டது, நான் கோவிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்றான். இப்போது நான் சில நாட்கள் நடைபயனம் செல்ல  இருக்கிறேன். மீண்டும் வரும் வரை கோவிலை கவனித்துகொள்  கோவிலை தூய்மையாக வைத்திரு அது போதும், நான் ஒருவரிடம் சாவி கொடுத்துள்ளேன் அவரிடம் இருந்து வாங்கி கொள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

                     மறுநாள் அதிகாலை பொழுது புலர்வதற்கு முன்பே எழுந்து தவழ்ந்து தவழ்ந்து சென்று தனது மூன்று சக்கர வாகனத்தில் ஏறி கோவிலை நோக்கி சென்றார். ஏன் என்றால் சாவி கொடுத்த ஆள் வாஸ்கோவில் பணிபுரிகிறார் அவர் காலை சென்றுவிட்டல் இரவு தான் வீட்டிற்கு வருவார். மெஸ்கரந்தஸ் அவரது வீட்டிற்கு செல்லும் போது அவர் புறப்பட்டு வெளியே வந்துவிட்டார். இவரை கண்டதும் ஆச்சர்யத்துடன் என்ன என்று கேட்டார் விபரத்தை சொன்னதும் கோவிலின் சாவியை கொடுத்துவிட்டு சென்று விட்டார். மெஸ்கரந்தஸ் கோவிலை திறக்கும் போது பொழுது புலர்ந்துவிட்டது. கோவிலின் அமைப்பை இப்போது தான் தெளிவாக பார்க்கிறார். சூரிய ஒளி எல்லா இடத்தில் இருந்தும் விழுகிறது. காற்று நன்றாக வந்து போய்க்கொண்டு இருந்தது, காற்று வந்துகொண்டு இருந்தும் அகல்விளக்கு அசையாமல் நெளியாமல் எரிந்து கொண்டு இருந்தது.

                    ஏதோ ஒரு புது உலகில் வந்து அமர்ந்ததை போன்ற ஒரு உணர்வு அவனிடம் இருந்தது. காலை நன்றாக புலர்ந்த உடன் கோவிலை பராமரிக்கும் முதிய பெண்மணி வந்து விட்டார். அவரிடம் சாவியை கொடுத்துவிட்டும் மாலை நான் வருவேன். கோவிலை மூடிவிட்டு நாளை காலை வழக்கம் போல் கோவிலை திறப்பேன் என்று சொல்லி துறவி தன்னிடம் சொன்ன வார்த்தையையும் சொல்லிவிட்டு தனது மூன்று சக்கர வாகனத்தில் தனது பழைய வீடு நோக்கி உற்சாகமாக சென்றான். அப்போது வீட்டில் இருந்த பறவைகள் எல்லாம் வெளியே சென்றுவிட்டன. நிதானமாக வீட்டை சுற்றிபார்க்கிறார் ஆம் சுமார் 13 கூடுகள் சாரளங்களிலும்,மேல் தாழ்வாரங்களிலும், மணம் சரிந்து மூடிய சமையலறை பகுதிகளிலும் இருந்தன.

                        வீடு இடிந்த பிறகு அதை ஒன்றும் செய்யவில்லை, அரசு அதிகாரிகள் பார்வையிட வருவார்கள் என்று அப்படியே மெஸ்கரந்தஸ் அப்படியே போட்டுவிட்டார். வருடம் 4 ஆகிவிட்டது. இன்று நாளை என்று சொல்கிறார்களே தவிர வந்த பாடில்லை, வெளியே வந்து பார்க்கிறார், மலை முழுவதும் காட்டு அரிசி செடிகள் அதனை உண்ண வரும் வெட்டுக்கிளிகள், பூச்சிகள் என  கடைகளுக்கு பிரியமான உணவுகள். காடைகள் ஏன் தனது பாழடைந்த வீட்டை தேர்ந்து எடுத்தன என்று இப்போது புரிந்து விட்டது. அன்று மாலை தாவோ கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றிவைத்துவிட்டு கோவிலை மூடிவிட்டு மீண்டும் வீடு செல்கிறார்.
                             மறுநாள் விடுமுறை தனது குடும்பத்தை அழைத்துகொண்டு தாவோ கோவிலுக்கு வருகிறார். எப்போதும் போல் விளக்கேற்றி விட்டு மூதாட்டியிடம் கோவிலின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அனைவரையும் அழைத்து கொண்டு தனது பழைய வீட்டிற்கு செல்கிறார். செங்கல் சூலையில் பல மரச்சாமான்கள் அப்படியே இருந்தன. தான் கொண்டு சென்ற கருவிகள் மூலம் தனது குழந்தை மனைவி உதவியுடன் சிறிய சிறிய அறைகள் சதுரங்கள் செய்து வீட்டின் அனைத்து பகுதிகளிலும் வைக்கிறார்
                அதன் பிறகு வைக்கோல் மற்றும் குச்சிகளை வீட்டின் வெளியே போட்டுவிட்டு சென்று மாலையில் மீண்டும் கோவிலுக்கு திரும்புகிறார்கள், இப்படியாக சில நாட்களின் 50 மேற்பட்ட கட்டங்கள் செய்து விட்டின் சுவற்றை ஒட்டிய பகுதிகளில் வைத்துவிட்டார். கட்டங்களில் வைக்கோல்கூடுகள் கட்டப்படுவதை கண்டார். கூடுகளில் மூன்று முதல் நான்கு காடைமுட்டைகள் இருந்தன. சில நாட்களில் காடைகுஞ்சுகள், வளர்ந்தது சுமார் 25 ஜோடி சிறகு முளைத்த காடைகுஞ்சுகளை பிடித்து கொண்டு வீட்டிற்கு சென்றார். அங்கு அவற்றிக்கு தானிய உணவிட்டு வளர்த்தார். தனக்கு ஏற்கனவே அறிமுகமான உணவகங்களுக்கு சென்று காடை வேண்டுமா என்று கேட்க முதலில் பணத்தை பிடி தினமும் கொண்டுவா டூரிஸ்டுகள் அதைத்தான் கேட்கிறார்கள் என்றார்கள். 

                                   இப்போது ஊனமுற்றோருக்கான மோட்டார் சைக்கிள், தனது பழைய வீட்டைசுற்றி பெரிய வேலி அந்த வேலியின் முகப்பில் பானாஜி காடைபண்ணை என்று பெயர் வைத்தார். இப்போது மீண்டும் கோழிவிற்பனை துவங்கிவிட்டார், முன்பு போல் அல்ல பண்ணைகளில் இருந்து போன் வருகிறது. கடைகளின் இருந்து போன் வருகிறது. இவர் மாலை பணம் வாங்க மட்டும் தான் வெளியே செல்கிறார். இரண்டு வாகணங்கள் 5 வேலைக்காரர்கள் இருக்கின்றனர்.  சில நாட்களுக்கு பிறகு துறவி மீண்டும் வந்தார். துறவியை தனது வீட்டிற்கு வற்புறுத்தி அழைத்து வந்தார்.
                              துறவிக்கு எல்லாம் தெரியும்  ஏனெனில் தாவோ ஏற்று கொண்டவர்கள் தங்களை பக்குவபடுத்தி கொள்வார்கள், தங்களை பக்குவபடுத்தி கொண்டவர்கள், வீணான கரியங்களில் ஈடுபடமாட்டார்கள். தீர்வை மட்டும் தேடுவார்கள், குறைகளை தேடிகொண்டு வாழ்க்கையை வீனடிக்க மாட்டார்கள்.

தாவோ சொன்னது போல் தீர்வை தேடினான், விடை கிடைத்தது. இதைத்தானே தாவோ சொன்னார். இதில் மந்திரம் ஏது மாயம் ஏது, குறைகளை மட்டும் எண்ணிக்கொண்டு இருந்தால் இன்று மெஸ்கரந்தஸ் அரசு அலுவலகத்திற்கும் தனது வீட்டிற்கு மூன்று சக்கர வாகணத்தில் சுற்றிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

உருகிபோன தலைமை,


மும்பை,செப்.10
    ஜேட் ஏர்வேய்ஸின் விமான பைலட்டுல்களுடன் பேச்சுவார்த்தை சுமூகம், 
பணிநீக்கம் செய்யபட்ட விமானிகள் மீண்டும் பணியில் அமர்த்தபடுவர். நிர்வாகம் அறிவிப்பு,
கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ஜெட் ஏர்வேய்ஸின் போராட்டம்
காரணமாக இந்தியா முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கபட்டது,
இதையே காரணமாக கொண்டு இதர தனியார் விமான நிறுவனங்கள்
பயணிகளிடம் நல்ல அறுவடை செய்து கொண்டது. கடந்த திங்கள் அன்று
நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய விமான போக்குவரத்து துறை ஜெட்
ஏர்வேஸ் நிறுவன தலைவரான நரேஸ் கோயலிடம் பைலட்டுகளின் பிரச்சனைகளை விரைவில் தீர்க்குமாறு கேட்டு கொண்டது, இந்த நிலையில்நிர்வாகம் நேற்றும் முன் தினம் யூனியனில் உள்ள சிலரை மிரட்டும் பாணியில்பேசியதை அடுத்து பைலட்டுகளின் போராட்டம் மேலும் வலுவானது.இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து சர்வீஸ்  செக்டரிலும்கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நிறுவனத்தின் மற்ற பிரிவுபணியாளர்களின் மூலம் வேண்டு கோள் விட்டு பார்த்தனர்.

இந்த முக்கியமான தகவல் குறித்து நெற்று ஜெட் ஏர்வேய்ஸின் தரை அலுவகநிர்வாகஸ்தர்களின் ஒருவர் TPI-யிடம் பேசும் போது ஜெட் நிர்வாகம் தற்போதுபைலட்டுகளின் போராட்டததால் பயணிகளிடையே வெறுப்பு ஏற்பட்டுஉள்ளது. இதன் பாதிப்பு இன்னும் அதிக நாள் நீடிக்கும் என்று தெரிகிறது.இதற்காக விரைவில் பைலட்டுகளின் போராட்டம் நிற்காவிட்டால், வேறு விமானநிருவனத்தின் சேவைய ஏற்றுகொண்ட எங்களின் ரெகுலர் பயணிகள் கூடமீண்டும் வருவது என்பது சந்தேகத்திற்கு உரியது ஆகிவிடும், அதனால்நிறுவனத்தில் உள்ள அனைவருக்குமே பாதிப்பு தான், இது போன்றகாரணங்களால் நாங்கள் -இதர பணியாளர்கள் அமைப்பு
பைலட்டுகள் மீண்டும் பணிக்கு திரும்பும் படி வேண்டுகோள் விடுத்துள்ளோம்எங்களுக்கு நிர்வாகம் எந்த ஒரு நிர்ப்பந்தமும் ஏற்படுத்தவில்லை இவ்வாறுஜெட் நிறுவனத்தின் தரைகட்டுப்பாட்டு நிர்வாக அதிகாரி ஒருவர் மும்பையில்கூறினர். 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஜெட் ஏர்வேய்ஸின் தலைமை நிர்வாகிகள்கூட்டம் ஒன்று நடந்தது. இதில் விமான பைலட்டுகளின் தேவைகளை பூர்த்திசெய்வது என்றும் பணியில் இருந்து நீக்கபட்ட பைலட்டுகளை மீண்டும்பணியில் அமர்த்துவது என்றும் முடிவு செய்யபட்டது.
இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு இன்று காலைக்குள் வெளிவரலாம் -இந்தசெய்தி தட்டும் வரை அதிகாரபூர்வ அறிப்பு வரவில்லை-

அரசியல் புகுந்தது:- தமிழ் பிரஸ் இன்போவில் மட்டும்.
சில மாதங்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேயிஸின் பிரச்சனையில் ராஜ் தாக்கரேதலையிட்ட உடன் நிர்வாகத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் நவ நிர்மான்சேனா விற்கு இளைஞர்களிடையே நல்ல பெயர் ஏற்பட்டது, இந்த முறையும்இதே போல் பிரச்சனையில் ராஜ் தாக்கரே தலையிடாமல் பார்த்து கொள்ளவேண்டும் என டில்லியில் தலைமை உத்தரவிட்டது.
இதனை அடுத்து நரேஸ்கோயலின் நன்பரும் உறவினருமான மும்பைகாங்கிரஸின் முக்கிய தலைவர்சஞ்சய் நிறுபம் நேற்று ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் தலைவர்நரேஸ்கோயலை சந்தித்தார். இந்த சந்திப்பின் ஜெட் ஏர்வேஸினால்பாதிக்கபட்ட பொதுமக்கள் அவர்களுக்கான் நிவாரணம் குறித்து பேச்சுநடத்தினோம் என இருவரும் கூட்டாக அறிக்கை விட்டனர். ஆனால்உண்மையில் ராஜ் தாக்கரே இந்த பிரச்சனையில் தலையிடுவதற்கு முன்பேநீங்கள் சுமுக முடிக்க வேண்டும் என சஞ்சய் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஏனெனில் மராட்டிய மாநில தேர்தல் இன்னும் சில வாரங்களில் வரப்போகிறது. 
  நேற்று இரவு சஞ்சய் நிறுபம் பொது விமான துறை அமைச்சர் பிரபுல் பட்டேலை சந்தித்து இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து விவாதித்தார். மேலும் இன்று-11/09/09- மதியத்திற்குள் பிரச்சனை சுமுக்கமாக தீர்த்து வைக்கபடும் என்று கூறினார். இதனை அடுத்து இன்று பணி நீக்கம் செய்யப்பட்ட விமான பைலட்டுகள் மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளபடுவார்கள் என்றும் ,விமான பைலட்டுகள் பணிக்கு திரும்பியதும் இது குறித்து யூனியனிடம் கலந்து ஆலோசனை நடத்தி எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் வந்தால் நிறுவனத்தின் அன்றாட பணிகள் பாதிக்கபடாமல் எப்படி கையாள்வது என்பது குறித்து வரும் சில நாட்களில் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

இன்றைய பெரிய செய்தி JET JAMED - by quick gun sarvan  -FLP-

10 செப்., 2009

கண்களை காப்பாற்றூங்கள்

  மும்பை பைகுல்லாவில் இருந்து அஞ்சலி மேடம் ஒரு நல்ல தகவல் சொல்லி இருக்கிறாங்க.

{கண்களை எப்படி பாதுகாப்பது என்ற நல்ல சேதி}
நமக்காக கண்கள் எவ்வளவு கஷ்டபடுது தெரியுமா, நாம் இமைகளை திறந்ததும், எதிரில் உள்ளதை அப்படியே காட்டுவது நமது கண்கள் மட்டும் தான் கண்களுக்கு நம் மீது அவ்வளவு காதல், ஆனால் நாம் கண்களை என்றாவது கவனித்து இருக்கிறோமா, நாளாக நாளாக ஒவ்வொரு செயலும் கண்களை கடுமையாக பாதிக்கிறது.
  • டி.வி பார்த்தல்,
  • டிஜிடல் பேனர்களை பார்த்தல்,
  • சிரியல் பல்புகளை பார்த்தல்,
  • அதிக ஒளியுடைய ஹோலோஜன் விளக்கு ஒளி
 அப்படின்னு  அன்றாடம் நாம் அதிகமாக கண்களை தொந்தரவு படுத்தி வருகிறோம், இதெல்லாம் அத்தியாவசியமாகியும் போய்விட்டது. அதை விட கணணி என்னதான் பில்டர் கிளாஸ், எல்,சி,டி என்று வந்து விட்டாலும் கணணியில் இருந்து வெளிவரும் ஒளிச்சிதரல் நமது கண்களுக்கு பாதிப்பு தாங்க, அதுக்காக கணணியின் முன்பு உட்காராம இருக்க முடியுமா, ஏதாவது பிரச்சனை வந்தால் மருத்துவரிடம் சென்று ஐ டிராப் போட்டு கொள்கிறோம், உள்ளுக்குள் மாத்திரை சாப்பிடுகிறோ,ஐ.டிராப், ஆரம்ப காலங்களில் நமக்கு நன்மை செய்வது போல் இருந்தாலும் நாட்பட நாட்பட நம்ம கண்களின் மேல் உள்ள இயற்கையாகவே அமைந்த மிகவும் மெல்லிய பாதுகாப்பு படலத்தை சிதைத்து விடுகிறது. அது மட்டும் இல்ல இந்த பிரச்சனை ஜீன்களின் மூலம் நம்ம தலைமுறைக்கும் போய்விடுகிறது. இது நிறுபிச்சிருக்காங்கா, 
அப்ப வேற வழியே இல்லையா என்றால் இருக்குங்க ரொம்ப அழகான வழி, மிகவும் எளிமையான வழி இதை தொடர்ந்து செய்து வந்தால் நம்ம கண் நம்மை காதலிக்கும் நிஜம் தாங்கஅதாவது பியூட்டி பார்லர்ல நம்மகிட்ட ஆயிரம் ரெண்டாயிரம் வாங்கிவிட்டு வெறும் ஒரு ரூபா வெள்ளிரிக்காவை அதிலையும் கஞ்சதனமா கொஞ்சூண்டு நம்ம கண்ணில் வைத்து விட்டு சில நிமிடங்களில் எடுத்து விடுகிறார்கள். இதனால் எந்த ஒரு நன்மையும் இல்லைங்க, இதே ஒரு ரூபாய் வெள்ளரிக்காதாங்க நமது கண்கள் நம்மை காதலிக்கும் காரணக்காரியமா இருக்கிறது.
அதாவது வேலை பார்த்து முடிந்த பிறகு தூங்க போகும் போது ரெண்டு துண்டு வெள்ளரிக்காயை கண்களை மூடி இமைகளின் மேல் வைத்து சுத்தமான துணியால் கண்களை மெல்ல கட்டி விட்டு தூங்கி விடுங்கள், -மெதுவாக கட்ட வேண்டும் ரொம்ப இருக்கமா கட்ட வேண்டாம்- இதை நீங்க முதல் நாள் செய்த உடனே உங்களுக்கு ரிசல்ட் தெரிந்துவிடும், இது நாள் வரை காலையில் எழுந்த உடன் இருந்த கண் எரிச்சல் போயே போச்சே, இதை தொடர்ந்து செய்து வந்தால் நம்ம கண்களின் உள்ள பாதுகாப்பு படலம் வலுபெற்று பார்வை திறன் கூடிப்போகும்,

கவனத்தில் கொள்ள வேண்டியது மெல்லிசாக வெள்ளிரிக்காயை வெட்டி இமைமேல் வைத்து அதிக அழுத்தமில்லாமல் கட்ட வேண்டும். ரொம்ப எளிதான மருத்துவங்க, ஆயிரக்கணக்கில் செலவு செய்வதை விட வெறும் ஒரு ரூபாயில் ஐந்து நாட்களை ஓட்டி விடலாம், ஒரு வெள்ளிரிக்காயை ஐந்து நாட்கள் கணக்கில் வெட்டி பயண்படுத்த வேண்டும், இது    தஞ்சையில் இருக்கும் அவர்களின் அத்தை கூறினார்களாம்,


இதை சொன்ன அஞ்சலி மேடம் மும்பை ஹெச்ஸாட் வே டெக் லிட் புரோகராம் லீடரா இருக்காங்க அஞ்சலி மேடம் இப்ப தெரியுது உங்க கண் ஏன் இவ்வளவு பெரிதா அழகா இருக்கு என்று
நன்றி மேடம் 
  மேடம் உங்களுக்காக உஸ்தாத் நுஸ்ரத் பதே அலிகான் பாடிய "இந்த அழகிய
கண்களில் நான் மயங்குவதில் இருந்து இறைவா என்னை காப்பாற்று"
karpalaa sarpe aayee thu leekkin uSnu vaaLoose alla pachalee
அதாவது -கர்பலா- சுடுகாடு  போகும் நிலை வந்தால் கூட இந்த அழகிய கண்களில் இருந்து என்னை காப்பாற்று  கண்களின் அழகை பயங்கரம் என்று சொல்லவில்லை,

  கொள்ளை அழகு என்று மிகவும் உயர்ந்த பதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

காலை வணக்கம் மும்பை


மும்பை,செப்.10
  இரவு வெகு நேரம் வரை  நெட் கணெக்சன் ஓடிக்கொண்டு இருக்கிறது தேவையான வேலை பார்த்து கொண்டு இருந்தால் பரவாயில்லை, ஏதாவது mms, அல்லது டூப்ளிகேட் சர்டிபிகேட்ஸ், அல்லது ஏதாவது சட்டவிரோதமான
செயல்களில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறீர்களா? கவனம் ஒரு ஜோடி விழிகள் மட்டும் மானிட்டரை கவனித்து பிராடுத்தனம் செய்யவில்லை அந்த  மானிட்டரை மானிட்டர் ஒருவர் மானிட் செய்துகொண்டு இருக்கிறார்.
       மும்பை சைபர் கிரைம் போலீஸார் இதற்கென ஒரு யூனிட் அமைத்திருக்கிறது. மும்பையில் முக்கிய இணையதள இணைப்பு நிறுவனங்கள்-ISP- யூடன் இணைந்து சிறப்பு கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. 
இது குறித்து குற்றப் பிரிவு தலைவர் ராகேஸ் மௌரியா  கூறியதாவது, தற்போது டெக்னாலஜி பெருக பெருக பலர் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நகரில் இளம் பெண்களுக்கு எதிரான மிரட்டல்கள், மற்றும் பொருளாதார குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கை குலைவிக்கும் வகையில் மிரட்டல் விடுவது, வதந்திகளை பரப்புவது போன்றவைகள் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இணையதள இணைப்பு தரும் நிறுவனங்களில் கண்காணிப்பில் இந்த சிறப்பு ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காகவே ஒரு குழு 24 ,மணி நேரமும் இயங்கி வருகிறது.
முக்கியமாக தற்போது நகரமெங்கும் திருவிழாகோலம் பூண்டு வருகிறது, இதுபோன்ற சமயங்களில் வதந்தி கள் எளிதாக பரவி விடும் 90 சதவிதம் மிரட்டல்கள் வதந்திகள் தான், இவற்றை கட்டுபடுத்த இந்த புதிய ஏற்பாடு, மேலும் கூகிள் யாகூநிறுவனங்களுடன் தேவையில்லாத பிளாக்குகளை தடைசெய்யவும், அயல் நாடுகளில் இருந்து வரும் பொருளாதார மோசடி இணைய தளம், மின்னஞ்சல் போன்றவற்றை அவதானித்து எங்களுக்கு தகவல் தரும்படியும் கேட்டுகொண்டுள்ளோம் என்றார்.
So டெக்னாலஜி சீட்டர்ஸ், மற்றும் சும்மானாச்சுக்கும் என்று தவறான படங்களை யாருக்கும் அனுப்பும் நபர்கள் உங்களை மேலிருந்தல்ல உங்கள் ஏரியாவில் இருந்தே ஒரு குழு கவணிக்கிறது 
  By Quick Gun Sarvan

பாந்திரா ஒர்லி கடல்வழிப்பாதையில் டாக்ஸி தீபிடித்தது லட்சக்கணக்கான வாகனங்கள் டிராபிக்கில் சிக்கியது

  
            மும்பையில் புதிதாக கட்டபட்டு உள்ள பாந்திர ஒர்லி கடல்வழிப்பாதை  நான்கு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு புதிய வரபிரச்சாதமாக
மாறி உள்ளது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த புதிய கடல்வழிப்பாதையை பயண்படுத்துகின்றனர். நேற்று சரியாக 5 மணி அளவில் கடல்வழிப்பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு டாக்ஸ்யின் மீது பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு கார் மோதியது. கார் மோதிய வேகத்தில் டாக்ஸியில் தீபற்றிகொண்டது. டாக்ஸி இயற்கை எரிவாயுவினால் ஓடுகிறது என்பது இங்கே குறிப்பிடதக்கது. இந்த விபத்தில் டாக்ஸி டிரைவர் தீக்காயங்களுடம் பாதையில் சென்று கொண்டிருந்தவர்களால் மீட்க்கபட்டார். அவர் தற்போது பாபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் டாக்ஸியுடம் மோதிய கார் டிரைவர் குடிபோதையில் இருந்தாரா என்று விசாரித்து வருகிறோம் என்று கூறப்படுகிறது. மாலை அலுவலகம் விட்டு திரும்பும் பலர் இந்த விபத்தினால் சரியான நேரத்தில் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்த விபத்தின் காரணமாக சாலையின் இரண்டு புறங்களிலும் சுமார் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்க பட்டது.

இரண்டு லட்சம் போலி வாக்காளர்கள் , தேர்தல் ஆணையத்திடம்

      இரண்டு லட்சம் போலி வாக்காளர்கள் , தேர்தல் ஆணையத்திடம்
பாரதிய ஜனதா புகார்.
மும்பை,செப்.09
   மும்பை, தானே,நாசிக், மற்றும் பூனாவில் சுமார் 2 லட்சத்திற்கும்  மேறப்பட்ட போலி வாக்காளர்கள் உள்ளதாக மும்பை பாரதிய ஜனதாவினர் மராட்டிய மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளனர்.இன்று மும்பையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையகமான கமலாலயத்தில்  பாரதிய ஜனதாவின் முன்னாள் எம்.பி கிரிட் சோமையா,ராம் நாயக் ,ஆகியோர் பத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர், இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியினர் தேர்தலில் பல முறைகேடுகள் செய்திருப்பதாக கூறினார். முக்கியமாக வாக்காளர் பட்டியலில் மிகவும் அதிக அளவு முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் மும்பை, தானே, நாசிக் மற்றும் பூனா போன்ற நகரங்களில் இந்த முறை கேடுகள் அதிகம் நடந்து இருப்பதாகவும், இதன் காரணமாக சுமார் 2லட்சம் பேருக்கு அதிகமானோர் சட்டவிரோதமாக‌ போலி வாக்காளர்களாக சேர்க்கபட்டு இருக்கின்றனர்.இது குறித்து ராம் நாயக் நிருபர்களிடம் கூறியது போது,
சந்திகாந்த் தால்வி என்ற பூனா மாவட்டத்தில் உள்ள மால்வல் தாலுகாவை சேர்ந்தவர் பள்ளிசான்றிதழில் அவரது பிறந்த தேதி செப்,18, 1991 என இருக்கிறது. ஆனால் அவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது போன்று பல மோசடிகள் நடைபெற்று இருக்கிறது. இந்த மோசடிக்கு உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் காரணமாக இருக்கின்றனர். இது குறித்த தகுந்த சாட்சியங்களுடன் நாங்கள் தேர்தல் கமிசனில் புகார் செய்துள்ளோம் என்று கூறினார்.

யூ.எஸ் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் லியண்டன் பேயஸ் ஜோடி

நியூயார்க், செப்.09
         லியண்டர் பெயஸ் மற்றும் அவரது அவரது பாட்னர் லூக்காஸ் துலோகி      பிரபல உள்ளூர் ஆட்டக்காரர்களான மைக், மற்றும் போப் பிரயான் ஆகியொருடம் மோதிய விருவிருப்பான ஒருமணி 51நிமிட‌  ஆட்டத்தில் 6-4,3-6,7-6, :8-6:   புள்ளிகளை பெற்று, இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.
பேயஸ் கலப்பு இரட்டையர் ஆட்டத்திலும் இறுதி சுற்றிற்கு நுழைந்து இங்கு குறிப்பிடதக்கது.

9 செப்., 2009

உலக எழுத்தறிவு தினம்

மும்பை, செப்.08
    உலக எழுத்தறிவு தினம், எழுத்தறிவு என்ற உடனே படிப்பவர்கள் மட்டும்
நினைவிற்கு வரக்கூடாது. கேட்பது, எழுதுவது, வாசிப்பது என மூன்றுமே எழுத்தறிவிற்குள் அடங்கும்.
இந்தியாவை பொருத்தவரை இந்தியாவிற்கு எழுத்தறிவு என்பது 1500-களுக்கு பிறகு தான் எழுத்தறிவு தொடர்வண்டி கிளம்பியது, குறிப்பாக சொல்ல போனால் இன்று கேரளா எழுத்தறிவில் முதலிடமும், தென் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு கிருஸ்தவ மிஸினரிகள் தான் முக்கிய காரணமாக இருந்தனர், கிருஸ்தவ மிஸினரிகள், இந்தியா வரக்காரணம், பைபிளில் சாலமன் அரசனுக்கு சென்ற மயில் இறகும், சேர சோழர்கள் பாண்டியர்கள் கொண்டு சென்ற யானை தந்தம், மயிற்பீலி, ஏலக்காய், மிளகு, மற்றும் முத்து போன்றவைகள்.
மிஸினரிகள் வருவதற்கு முன்பு இந்தியாவில் குரு குல வழி கல்வி மட்டும் தாம், முதலாம் நூற்றாண்டில் முக்கியமாக முவேந்தர்களின் ஆட்சியில் தலைமுறை கல்வியாளர்கள் ஊர் ஊராக சென்று கல்வி கற்று வந்தார்கள். ஆனால் மூவேந்தர்களின் ஆட்சி மறைந்த பிறகு குருகுல கல்வி முறை மீண்டும், தலையெடுக்க துவங்கியது. இதன் காரணமாக தமிழகம் எங்கும் கல்வியில் ஒரு மந்தமான சூழல் சுமார் 13 நூற்றாண்டுகளாக இருந்தது. கல்வி என்பது உயர்பிரிவினருக்காக என்று எழுதாத சட்டமாகி விட்டது. நாயக்கர்கள் ஆட்சி காலத்திலும் சரி , கேரள வர்மர்களின் ஆட்சிகாலத்திலும் சரி, மதுரை, நெல்லை என தென் தமிழக பகுதிகள் கல்வியில் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தன. இந்த நிலையில் தான் கேரளாவில் 1400-களில் போர்ச்சுகீஸியர்கள் வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து பல கிருஸ்துசபைகள் கிருஸ்துவமதத்தை பரப்ப இந்தியாவிற்கு போதகர்களை அனுப்ப ஆரம்பித்தார்கள். ஆரம்ப காலத்தில் அப்படி வந்தவர்களின் ஒருவரால் தான் இன்று தென் தமிழகம் மட்டுமல்ல கேரளா முதலாம் இடம் அடையவும் காரணமாக இருந்தார். 
அவர் தான் புனித பிரான்ஸிஸ் சவேரியார். கோவாவை விட்டு கிளம்பும் வரை மதத்தை பரப்பும் ஒரு போதகராகத்தான் இருந்தார். ஆனால் கோவாவில் இருந்து கொச்சி சென்று கொண்டு இருக்கும் போது அவருடன் பயணபட்ட தூத்துகுடியை சேர்ந்த மீனவர்கள் சிலரிடன் அந்தமக்களின் நிலையை கேள்விபட்டார். கோச்சி சென்ற சில நாட்களின் மீனவர்களின் வழிகாட்டலில் தூத்துக்குடி வந்து இறங்குகிறார். இங்கு இருந்துதான் தென் தமிழகத்தின் கல்வி வசந்த காலம் ஆரம்பிக்கிறது.
முதல் முதலாக ஆரம்பிக்க பட்ட அச்சகம் தாமிர பரணி தனது தாயிடம் இளைப்பாரும் சிறிய கிராமமான புன்னை காயல் என்னும் இடத்தில் ஆரம்பிக்க பட்டது. வருடம் 1545 ஆம் தமிழகத்தில் அச்சகம் தோன்றி வெற்றிகரமாக கிராமம் கிராமாக கல்வி சென்று கல்வி புரட்சி நடத்த துவங்கினார். அச்சகம் ஆரம்பித்தவர் ஹென்றி ஹென்ற்ஸ்கஸ்
ஆனால் கோவாவில் புனித பவுல் கல்லூரியில் தான் முதல் முதலாக பிரிண்டிங் பிரஸ் ஆரம்பித்தாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள் ஆனால் வருடம் 1556-ல் தான் பிரிண்டிங் பிரஸ் கோவாவிற்கு லிஸ்பனில் இருந்து அச்சு இயந்திரம் வரவழைக்க பட்டு நிறுவப்பட்டது. அப்படி என்றால் இதற்கு 10 வருடத்திற்கு முன்பு தமிழகத்தில் இருந்தது.  ஹென்றி ஹென்றிக்கஸ் தானாகவே உலோகத்தில் உருவாக்கிய அச்சு எந்திரம் தாம் இந்தியாவின் முதல் அச்சு எந்திரம், அந்த பெருமை புன்னை காயலை போய் சேரும். அந்த அச்சு எந்திரமும் அதில் பதிக்கபட்ட சில பதிப்புகளும் , கேரள உண்ணிவர்மனின் தலைமுறை தகவல்களாக பதிக்கபட்ட காகிதங்களும் இன்னும் திருவனந்த புரத்தில் இருக்கின்றன.

அதன் பிரதிகள் சேவியர் கல்லூரியில் FRSC நூலகத்திலும் கிடைக்கும். 

அதன் பிறகு 200 வருடங்கள் கழித்தும் மதுரையில் ஓலையில் எழுதியும் , ஆடைகளில் வரைந்தும் எழுதி கொண்டு இருந்தனர். இந்த வகையில் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள். அதன் பிறகு ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் ஆட்சி செய்யும் போது கல்வியையும் நமக்கு கற்று கொடுத்தனர். இந்தியாவிலேயே முதல் முதலாக அச்சகம் தோன்றிய தமிழகம் இருந்தும் நாம் இன்னும் கல்வியில் முதல் ஐந்து இடத்தை கூட பிடிக்கவில்லை என்றால் அதற்கு காரணம் என்ன வென்று தெரியவில்லை, ஆனால் கேரளா சேவியரின் சேவையை முழுமையாக ஏற்றுகொண்டது.  அதன் காரணமாக கேரளாவின் கிராமம் கிராமாக பள்ளிகள் ஆரம்பிக்க பட்டன. விளைவு கல்வி 1600- களின் ஆரம்பத்தில் ஏறத்துவங்கி இன்றுவரை இறங்கவே இல்லை, ஒரு வேளை போர்ச்சுகீஸியர்கள் நேராக வங்காளம் சென்று இறங்கி இருந்தால் இன்று தமிழகமும் பிகாராகவும் அதைவிட பரிதாப நிலையிலும் இருந்து இருக்கும்.

தமிழ் நாடு 06 இடம் , கேரளா தொடர்ந்து முதலாவது இடம், மிஸோராம் தொடர்ந்து இரண்டாவது, கோவா, மராட்டியம் , மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் மூன்று நான்கு ஐந்தாவது இடங்களை பிடிக்கிறது, வழக்கம் போல் பிகார் கடைசி இடம்.
இன்று நாடு முழுவதும் எழுத்தறிவை வளர்ப்பதற்காக சர்வ சிக்ஸா அபியாந் - அனைவருக்கு கல்வி இயக்கம்-, ராஷ்டிரிய சாக்சரதா  மிஸன் தேசிய எழுத்தறிவு இயக்கம்- இன்னும் பல உண்டு ஆனால் இதன் செயல்பாடுகள் எல்லாம் காமடியாக இருக்கிறது. தூர்தர்ஷனில் மதியம் 3 மணிமுதல்  4மணி வரை ஒளிபரப்பாகும் இதன் நிகழ்ச்சிகளை பார்க்க யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்திய அரசு வருடம் தோறும் எழுத்தறிவு தருவதற்காக சுமார் 600 கோடிகளை வாரி கொட்டுகிறது. ஆனால் இந்த கோடிகள் கடைக்கோடி வரை செல்வதற்குள்
கோவிந்தா ஆகிவிடுகிறது. இந்தியாவும் அனைத்து சிக்ஷா அபியான் -எழுத்தறிவு இயக்கம் அனைத்தும் தனியாரை சார்ந்துதான் இருக்கிறது. இப்போது புரிந்திருக்கும் கோடிகள் ஏன் அதன் நோக்கத்திற்காக செலவு செய்யபடவில்லை என்று.
  நாம் செய்யவேண்டியது எல்லாம் ஒன்று மட்டும் தான் அனைவரையும் மனித நேய பார்வை கொண்டு பார்த்து நேரம் கிடைக்கும் போது ஏழைகுழந்தைகளுக்கு, தாழ்த்தபட்ட குழந்தைகளுக்கு எழுத்தறிவு கற்று கொடுங்கள், நாளை நல்ல உலகம் மலர எழுத்தறிவு என்னும் விழி கொடுங்கள்