மும்பை,செப்.05
ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் ஸ்லம் டாக் மில்லனியம், இந்த படத்தில் இசை அமைத்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார்ட் விருது பெற்றார்.
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அஸார் இஸ்மாயிலின் தந்தை இஸ்மாயில் நேற்று மும்பையில் காலமானார். கடந்த சில மாதங்களாக டி.பி நோயால் அவதிபட்டுவந்த அவர் சிகிச்சை பலனின்றி பாந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். திரைப்படத்தில் நடித்த குழந்தைகள் அனைவரும் குடிசைகளில் வாழ்பவர்கள் இவர்களுக்கு ஸ்லம்டாக் மில்லனியர் படத்தின் இயக்குனர் டன்னிபோயல் குடியிருக்க வீடுகளை வாங்கி தருவாதாக உறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில் சிலருக்கு வீடுகள் கிடைத்துவிட்டது. இன்னும் சிலருக்கு விடுகள் கிடைப்பதில் தாமதமாகிறது.
இந்த குழந்தையில் தந்தை சில நாட்களுக்கு முன்பு அயல் நாட்டில் இருந்து வந்த பத்திரிக்கை நிருபர் ஒருவரிடம் பேட்டி அளிக்க அஸார் தயங்கிய போது பத்திரிக்கையாளர் முன்னிலையில் தனது மகனை அறைந்தாக புகார் எழுந்தது அது சில நாட்கள் விவாதத்தில் இருந்ததும் குறிப்பிட தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக