மும்பை,செப்.10
இரவு வெகு நேரம் வரை நெட் கணெக்சன் ஓடிக்கொண்டு இருக்கிறது தேவையான வேலை பார்த்து கொண்டு இருந்தால் பரவாயில்லை, ஏதாவது mms, அல்லது டூப்ளிகேட் சர்டிபிகேட்ஸ், அல்லது ஏதாவது சட்டவிரோதமான
செயல்களில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறீர்களா? கவனம் ஒரு ஜோடி விழிகள் மட்டும் மானிட்டரை கவனித்து பிராடுத்தனம் செய்யவில்லை அந்த மானிட்டரை மானிட்டர் ஒருவர் மானிட் செய்துகொண்டு இருக்கிறார்.
மும்பை சைபர் கிரைம் போலீஸார் இதற்கென ஒரு யூனிட் அமைத்திருக்கிறது. மும்பையில் முக்கிய இணையதள இணைப்பு நிறுவனங்கள்-ISP- யூடன் இணைந்து சிறப்பு கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
இது குறித்து குற்றப் பிரிவு தலைவர் ராகேஸ் மௌரியா கூறியதாவது, தற்போது டெக்னாலஜி பெருக பெருக பலர் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நகரில் இளம் பெண்களுக்கு எதிரான மிரட்டல்கள், மற்றும் பொருளாதார குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கை குலைவிக்கும் வகையில் மிரட்டல் விடுவது, வதந்திகளை பரப்புவது போன்றவைகள் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இணையதள இணைப்பு தரும் நிறுவனங்களில் கண்காணிப்பில் இந்த சிறப்பு ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காகவே ஒரு குழு 24 ,மணி நேரமும் இயங்கி வருகிறது.
முக்கியமாக தற்போது நகரமெங்கும் திருவிழாகோலம் பூண்டு வருகிறது, இதுபோன்ற சமயங்களில் வதந்தி கள் எளிதாக பரவி விடும் 90 சதவிதம் மிரட்டல்கள் வதந்திகள் தான், இவற்றை கட்டுபடுத்த இந்த புதிய ஏற்பாடு, மேலும் கூகிள் யாகூநிறுவனங்களுடன் தேவையில்லாத பிளாக்குகளை தடைசெய்யவும், அயல் நாடுகளில் இருந்து வரும் பொருளாதார மோசடி இணைய தளம், மின்னஞ்சல் போன்றவற்றை அவதானித்து எங்களுக்கு தகவல் தரும்படியும் கேட்டுகொண்டுள்ளோம் என்றார்.
So டெக்னாலஜி சீட்டர்ஸ், மற்றும் சும்மானாச்சுக்கும் என்று தவறான படங்களை யாருக்கும் அனுப்பும் நபர்கள் உங்களை மேலிருந்தல்ல உங்கள் ஏரியாவில் இருந்தே ஒரு குழு கவணிக்கிறது

By Quick Gun Sarvan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக