11 செப்., 2009

உருகிபோன தலைமை,


மும்பை,செப்.10
    ஜேட் ஏர்வேய்ஸின் விமான பைலட்டுல்களுடன் பேச்சுவார்த்தை சுமூகம், 
பணிநீக்கம் செய்யபட்ட விமானிகள் மீண்டும் பணியில் அமர்த்தபடுவர். நிர்வாகம் அறிவிப்பு,
கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ஜெட் ஏர்வேய்ஸின் போராட்டம்
காரணமாக இந்தியா முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கபட்டது,
இதையே காரணமாக கொண்டு இதர தனியார் விமான நிறுவனங்கள்
பயணிகளிடம் நல்ல அறுவடை செய்து கொண்டது. கடந்த திங்கள் அன்று
நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய விமான போக்குவரத்து துறை ஜெட்
ஏர்வேஸ் நிறுவன தலைவரான நரேஸ் கோயலிடம் பைலட்டுகளின் பிரச்சனைகளை விரைவில் தீர்க்குமாறு கேட்டு கொண்டது, இந்த நிலையில்நிர்வாகம் நேற்றும் முன் தினம் யூனியனில் உள்ள சிலரை மிரட்டும் பாணியில்பேசியதை அடுத்து பைலட்டுகளின் போராட்டம் மேலும் வலுவானது.இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து சர்வீஸ்  செக்டரிலும்கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நிறுவனத்தின் மற்ற பிரிவுபணியாளர்களின் மூலம் வேண்டு கோள் விட்டு பார்த்தனர்.

இந்த முக்கியமான தகவல் குறித்து நெற்று ஜெட் ஏர்வேய்ஸின் தரை அலுவகநிர்வாகஸ்தர்களின் ஒருவர் TPI-யிடம் பேசும் போது ஜெட் நிர்வாகம் தற்போதுபைலட்டுகளின் போராட்டததால் பயணிகளிடையே வெறுப்பு ஏற்பட்டுஉள்ளது. இதன் பாதிப்பு இன்னும் அதிக நாள் நீடிக்கும் என்று தெரிகிறது.இதற்காக விரைவில் பைலட்டுகளின் போராட்டம் நிற்காவிட்டால், வேறு விமானநிருவனத்தின் சேவைய ஏற்றுகொண்ட எங்களின் ரெகுலர் பயணிகள் கூடமீண்டும் வருவது என்பது சந்தேகத்திற்கு உரியது ஆகிவிடும், அதனால்நிறுவனத்தில் உள்ள அனைவருக்குமே பாதிப்பு தான், இது போன்றகாரணங்களால் நாங்கள் -இதர பணியாளர்கள் அமைப்பு
பைலட்டுகள் மீண்டும் பணிக்கு திரும்பும் படி வேண்டுகோள் விடுத்துள்ளோம்எங்களுக்கு நிர்வாகம் எந்த ஒரு நிர்ப்பந்தமும் ஏற்படுத்தவில்லை இவ்வாறுஜெட் நிறுவனத்தின் தரைகட்டுப்பாட்டு நிர்வாக அதிகாரி ஒருவர் மும்பையில்கூறினர். 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஜெட் ஏர்வேய்ஸின் தலைமை நிர்வாகிகள்கூட்டம் ஒன்று நடந்தது. இதில் விமான பைலட்டுகளின் தேவைகளை பூர்த்திசெய்வது என்றும் பணியில் இருந்து நீக்கபட்ட பைலட்டுகளை மீண்டும்பணியில் அமர்த்துவது என்றும் முடிவு செய்யபட்டது.
இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு இன்று காலைக்குள் வெளிவரலாம் -இந்தசெய்தி தட்டும் வரை அதிகாரபூர்வ அறிப்பு வரவில்லை-

அரசியல் புகுந்தது:- தமிழ் பிரஸ் இன்போவில் மட்டும்.
சில மாதங்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேயிஸின் பிரச்சனையில் ராஜ் தாக்கரேதலையிட்ட உடன் நிர்வாகத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் நவ நிர்மான்சேனா விற்கு இளைஞர்களிடையே நல்ல பெயர் ஏற்பட்டது, இந்த முறையும்இதே போல் பிரச்சனையில் ராஜ் தாக்கரே தலையிடாமல் பார்த்து கொள்ளவேண்டும் என டில்லியில் தலைமை உத்தரவிட்டது.
இதனை அடுத்து நரேஸ்கோயலின் நன்பரும் உறவினருமான மும்பைகாங்கிரஸின் முக்கிய தலைவர்சஞ்சய் நிறுபம் நேற்று ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் தலைவர்நரேஸ்கோயலை சந்தித்தார். இந்த சந்திப்பின் ஜெட் ஏர்வேஸினால்பாதிக்கபட்ட பொதுமக்கள் அவர்களுக்கான் நிவாரணம் குறித்து பேச்சுநடத்தினோம் என இருவரும் கூட்டாக அறிக்கை விட்டனர். ஆனால்உண்மையில் ராஜ் தாக்கரே இந்த பிரச்சனையில் தலையிடுவதற்கு முன்பேநீங்கள் சுமுக முடிக்க வேண்டும் என சஞ்சய் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஏனெனில் மராட்டிய மாநில தேர்தல் இன்னும் சில வாரங்களில் வரப்போகிறது. 
  நேற்று இரவு சஞ்சய் நிறுபம் பொது விமான துறை அமைச்சர் பிரபுல் பட்டேலை சந்தித்து இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து விவாதித்தார். மேலும் இன்று-11/09/09- மதியத்திற்குள் பிரச்சனை சுமுக்கமாக தீர்த்து வைக்கபடும் என்று கூறினார். இதனை அடுத்து இன்று பணி நீக்கம் செய்யப்பட்ட விமான பைலட்டுகள் மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளபடுவார்கள் என்றும் ,விமான பைலட்டுகள் பணிக்கு திரும்பியதும் இது குறித்து யூனியனிடம் கலந்து ஆலோசனை நடத்தி எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் வந்தால் நிறுவனத்தின் அன்றாட பணிகள் பாதிக்கபடாமல் எப்படி கையாள்வது என்பது குறித்து வரும் சில நாட்களில் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

இன்றைய பெரிய செய்தி JET JAMED - by quick gun sarvan  -FLP-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக