10 செப்., 2009

பாந்திரா ஒர்லி கடல்வழிப்பாதையில் டாக்ஸி தீபிடித்தது லட்சக்கணக்கான வாகனங்கள் டிராபிக்கில் சிக்கியது

  
            மும்பையில் புதிதாக கட்டபட்டு உள்ள பாந்திர ஒர்லி கடல்வழிப்பாதை  நான்கு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு புதிய வரபிரச்சாதமாக
மாறி உள்ளது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த புதிய கடல்வழிப்பாதையை பயண்படுத்துகின்றனர். நேற்று சரியாக 5 மணி அளவில் கடல்வழிப்பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு டாக்ஸ்யின் மீது பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு கார் மோதியது. கார் மோதிய வேகத்தில் டாக்ஸியில் தீபற்றிகொண்டது. டாக்ஸி இயற்கை எரிவாயுவினால் ஓடுகிறது என்பது இங்கே குறிப்பிடதக்கது. இந்த விபத்தில் டாக்ஸி டிரைவர் தீக்காயங்களுடம் பாதையில் சென்று கொண்டிருந்தவர்களால் மீட்க்கபட்டார். அவர் தற்போது பாபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் டாக்ஸியுடம் மோதிய கார் டிரைவர் குடிபோதையில் இருந்தாரா என்று விசாரித்து வருகிறோம் என்று கூறப்படுகிறது. மாலை அலுவலகம் விட்டு திரும்பும் பலர் இந்த விபத்தினால் சரியான நேரத்தில் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்த விபத்தின் காரணமாக சாலையின் இரண்டு புறங்களிலும் சுமார் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்க பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக