7 செப்., 2009

பங்கு சந்தை குறியீடு இந்த வருடத்தில் உயர்ந்த இடத்தை தொட்டது



மும்பை,செப்.07
                            முதல் முதலாக இந்த வருடம் பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16000 புள்ளிகளை தொட்டு பங்கு சந்தையில் பணம் போட்டு எடுப்பவர்களின் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறது.

உலகம் எங்கு மெல்ல மெல்ல மறைந்த வரும் பொருளாதார மாந்த நிகழ்வு இந்தியா முழுவதும் பெய்து வரும் நல்ல மழை, மற்றும் மும்பையில் உற்சாக திருவிழாக்களால் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்திருப்பது போன்ற காரணங்களால் , பங்கு சந்தை சந்தோசமடைந்து இருக்கிறது. விளைவு இந்த வருட உயர்வான இடத்தை 16000 புள்ளியை அடைந்து இருக்கிறது.


தேசிய பங்கு சந்தையும் தனது பங்கிற்கு உயர்வை தொட்டிருக்கிறது. 4782.90
கடந்த வாரம் லண்டனில் நடந்த வளர்ச்சி அடைந்த நாடுகளின் நிதி அமைச்சர் மாநாட்டில் பல சலுகைகளை அளித்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
முக்கிய மாக ஆசிய மற்றும் ஐயிரோப்பிய சந்தைகள் இன்று நல்ல ஏற்றத்தை சந்தித்து இருக்கிறது, இன்று வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் குறியீட்டு எண் 16016.32 புள்ளியில் நின்றது. இது கடந்த 15 மாதங்களில் முதல் முதலாக தொட்ட உயரமாகும்,தேசிய பங்கு வர்த்தகமான நிப்டி 102.50 புள்ளிகள் உயர்ந்து 4782.90 ஐ தொட்டு இருக்கிறது.

கணரக தொழிற்சாலைகளின் பங்கு கடந்த சில மாதங்களில் இருந்தே உயர்ந்து கொண்டே போகிறது. மென்பொருட்களை மறந்து விட்டு கணமான பொருட்களை மக்கள் வாங்க துவங்கி விட்டார்கள் போலும்,
அதே போல் ரிலையன்ஸ் கம்யூணிகேசன், மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் லாபத்தை ஈட்ட துவங்கியுள்ளன.
இன்னும் ஐ.டி மார்க்கேட் மீளவில்லை என்றே தெரிகிறது கடந்த சில மாதங்களாகவே ஐ.டி துறை வர்த்தகம் செக்செக்ஸில் மந்த நிலையில் இருக்கிறது.
பங்கு வர்த்தகம் ரூ5722.02-ல் இருந்து 6,099.73 கோடி வருமாணம் ஈட்டியுள்ளது. நிதானமாக கவணிக்கும் போது மார்க்கேட்டில் அதிக பணம் போட்டிருப்பவர்கள், வெளிநாட்டினர் என்று தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக