4 செப்., 2009

தேர்தல் களத்தில் முந்தும் சிவசேனா- பாரதிய ஜனதா


தேர்தல் களத்தில் முந்தும் சிவசேனா- பாரதிய ஜனதா
மும்பை,வெள்ளி.04
மராட்டிய Justify Fullமாநிலத்தில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பல கட்சிகள் தங்களுடன் கூட்டனியை புதுப்பித்து கொள்ளவும் புதிய கூட்டனியை உருவாக்கவும் முயற்சி எடுத்து வருகிறது.
கூட்டனி பிடிக்கும் போது பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளில் சிக்கல் வருவதும் அதை தீர்த்து வைப்பதும் முக்கியமான ஒரு அங்கமாகும்.

காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்திகொண்டு இருக்கின்றன. இந்த முறை தலித் கட்சிகள் தனித்து போட்டியிடுவதா அல்லது எந்த கட்சியுடன் கூட்டனியிடுவது என்று இன்றுவரை தங்கள் தரப்பில் தெளிவான எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
தலித் கட்சிகளில் முடிவில் தான் அடுத்து அமைய போகும் அமைச்சரவை இருக்கும் என்பது முக்கியமான ஒன்றாகும். மராட்டிய மாநிலத்தின் முக்கிய கட்சிகள் தலித் கட்சிகளின் முடிவை எதிர்நோக்கி இருக்கின்றன.
மும்பை புறநகர் பாந்திராவில் உள்ள மாதேஸ்ரீ இல்லத்தில் வைத்து தொகுதி பங்கீடு குறித்து உத்தவ் தாக்கரே பேட்டி அளித்தார்.
இந்த பேட்டியின் போது,
சிவசேன-பாரதிய ஜனதா கட்சி தங்களது கூட்டனி தொகுதி பங்கீடு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மராட்டிய மாநிலத்தின் கடற்கரை தொகுதியான குகார் தொகுதி தற்போது பாரதிய ஜனதா கட்சியின் வசம் உள்ளது. கோங்கன் பகுதியில் நாரயன் சிவசேனா கட்சியை விட்டு விலகியதால் கொஞ்சம் செல்வாக்கு குறைந்து காணப்படுகிறது.
இந்த பகுதியில் செல்வாக்கு பெறவேண்டுமானால் குகார் தொகுதியில் சிவசேனா நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் இந்த தொகுதியை சிவசேனாவிற்கு விட்டு தருமாறு சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பாரதிய ஜனதாவிற்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இந்த தொகுதியில் தற்போதைய சட்டசபை எதிர்கட்சி தலைவர் ராம் தாஸ் கதம் போட்டி இடுவார் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக