14 செப்., 2009

அரசியல் களம் சென்ற வாரம்{TPI POL}

தேர்தல் களத்தை பொருத்தவரை உடைத்து சுக்கு நூறாகி போய் இருக்கும் ரிபப்ளிக்கன் பார்ட்டி ஒன்று கூடும் என்ற செய்தி கனவாகியே போகும் என்று தெரிகிறது. ஏற்கனவெ சிவசேனா, சிவ் சக்தி + பிம் சக்தி = தேச பக்தி என்று சில வருடங்களுக்கு முன்பு போட்ட பாலிசியை விபரமக இப்போது முறையாகபயண்படுத்தி கொள்ள இருக்கிறது. விளைவு காங்கிரஸ் மீது வெறுப்பாக உள்ள அத்தனை பீமரா கட்சியின் வாக்கு அனைத்தும் சிவசேனாவிற்கு செல்லும் போல் தெரிகிறது. இதனால் அத்வலே அல்லது வாக்மாரே போன்றவர்களை காங்கிரஸில் இழுக்கும் வேலை பலமாக நட்ந்து வருகிறது, ராம் தாஸ், பிரகாஸ் அம்பேத்கார் மற்றும் கவாய் இந்த மூன்று முக்கிய ரிபப்ளிக்கன் பார்ட் தலைவர்களும் இந்த வாரம் முக்கியமுடிவு எடுப்பார்கள் என்று தெரிகிறது;

தேர்தல் பங்கீட்டில் சிவசேனா- பா.ஜ.க முந்தி சென்று விட்டது. ஆனால் காங்கிரஸ்- தே.வா கா அநேகமாக திங்கள் கிழமை டில்லியில் இருந்து தொகுதி பங்கீடு குறித்த அறிக்கை வெளிவரும் என்று நினைக்கிறோம்.வேறு நகரின் முக்கிய செய்திகள்
   தொடர்புடைய செய்திகள்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக