மும்பை, செப்.07
மும்பையில் கடந்த ஜூன் முதல் அனைவரையும் அச்சுருத்தி கொண்டு இருந்த
ஸ்வன் புளு கணபதி விழாவின் போது அடங்கி போனது என்றே கூறலாம்.
பள்ளிக்கூடங்கள் விடுமுறை, தியேட்டர்கள் மூடல் மால்களில் கூட்டம் வேண்டாம் என்று கேட்டுகொண்ட நகரசுதாதார நிர்வாகம் கணபதி விழாவின் போது கூட்டம் வேண்டாம் என்றது. ஆனால் கணபதி மீது உள்ள ; பாசத்தால் மக்கள் வெள்ளம் கடந்த 10 நாட்களாக அலைமோதியது. மும்பையில் முக்கியமான கணபதியான லால்பாக் ராஜா கணபதியின் தரிசனத்திற்கு 8 மணி
நேரம் வரை தரிசனம் செய்ய மக்கள் காத்திருந்தனர். கணபதி விழா முடிவடைந்ததும் லால்பாக் ராஜா கணபதிக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை எண்ணும் பணிதுவங்கி நடந்து கொண்டு இருக்கிறது.
ஆரம்ப கட்ட எண்ணிகையில் 7000 மூட்டைகளுக்கு மேலான தேங்காய்கள் கணபதிக்கு காணிக்கையாக தரப்பட்டு இருந்தது. அலங்கார பொருட்கள் -உலோகமில்லாதவை- சுமார் 12 லாரிகள் வரை தேறும் என்றும் அவை விரைவில் ஏலம் விடப்படும்.
இதனை அடுத்து முக்கிய மேட்டரான தங்கம்\வெள்ளி\ பிளாட்டினம்\மற்றும் வைர நகைகள் பணம் போன்றவை எண்ணப்பட்டு வருகிறது. கடந்த வருடம் இதே நாளில் பணத்தின் மதிப்பு 8 லட்சம் வரை எண்ணபட்டு கொண்டு இருந்தது. ஆனால் இந்த வருடம் 4.32 கோடிகளை தொட்டு விட்டது. எப்படியும் 5 கோடியை தொட்டு விடும் என்று தெரிய வருகிறது. பணம் எண்ணுவதற்காக பாங்க் ஆப் மஹராஷ்டிரா 3 பணம் எண்ணும் இயந்திரங்களை கொடுத்து இருக்கிறது.
இன்று மாலைக்குள் பணம் எண்ணும் பணி முடிவடைந்து விடும் என்று தெரிகிறது. நாளையில் இருந்து நகைகள் கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளது. இதற்காக லால்பாக் ராஜா கணபதி மண்டல் நிர்வாகம் மும்பையில் பிரபல நகை நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக