மும்பை, செப்.11
தாராவி புரணமைப்பு திட்டம் எவ்வளவு நாட்கள் தாமதமாகிறதோ அவ்வளவு விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. தாராவி புரணமைப்பு ஒரு புறம் மந்த மான பொருளாதாரம் என்ற வார்த்தை ஒன்றைகையில் வைத்து கொண்டு தாராவி புரணமைப்பு திட்டம் நீண்டு கொண்டே போகிறது, இன்னும் வீடுகள் எத்தனை சதுர அடி என்று பேச்சு வார்த்தை முடியவில்லை இந்த நிலையில் பல பணமுதலைகள் தாராவியில் பணம் கொட்ட தயாராகி விட்டனர். இன்னமும் வீடு எத்தனை சதுர அடி ஒதுக்கல், சிறுதொழில்களுக்கான இதர திட்டங்கள், மற்றும் அடிப்படை வசதிகள் இதற்குள் தனியாருக்கு ஒதுக்கும் இடங்கள் என இழுபறியில் இருந்து கொண்டு இருக்கும் தாரவியில் ஒரு குடிசை உங்களுக்கு இருக்கிறது அப்படி என்றால் முன்பெல்லாம் நீங்கள் லட்சாதிபதிகள், ஆனால் இன்றைய நிலையில் நீங்கள் கோடீஸ்வரர்கள்,
தற்போது மும்பை முழுவதும் ரியல் எஸ்டேட் வியாபாரம் கண்ணைமூடிக்கொண்டு ராக்கேட் வேகத்தில் ஏறிக்கொண்டு போகிறது. இந்த நிலையில் தாராவி புரணமைப்பு திட்டத்தில் தங்களின் பணத்தை போட பல பெரிய கட்டுமான நிறுவனங்கள் முன்வந்த நிலையில் இவர்களுக்குள் தற்போது போட்டி ஏற்ப்பட்டுள்ளது. அதாவது அவர்களை விட நாங்கள் அதிகம் தருகிறோம் என்ற போட்டி இதனால் தாராவி மக்கள் சந்தோசத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர். ஒரு காலத்தில் சாக்கடை ஓடும் குறிகிய சந்துகளில் வாழ்ந்த மக்களின் கைகளின் கோடிகள் புரண்டு கொண்டு இருக்கின்றன.
சமீபத்தில் தனியார் நிறுவனம் தாராவியில் நடத்திய ஒரு ஆய்வில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 7000 குடிசைகள் 700 கோடிக்கு விலை போய் இருக்கிறது.
வரும் காலங்களில் இந்த தொகை மேலும் உயரவாய்ப்பிருக்கிறது. சமீப காலமாக மேம்பட்டு வரும் உலக பொருளாதாரம் தான் இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்கு முதலில் நிலங்களில் தான் முதலீடு செய்வார்கள், முக்கியமாக தற்போதைய பொருளாதார சரிவின் மூலம் இந்தியாவின் அனைத்து துறைகளில் உலகத்தாரின் கண்கள் பட்டுவிட்டது. இதனால் தாராவி போன்ற மெகா திட்டங்களில் உலகின் பார்வை திரும்பி உள்ளது, இதை புரிந்து கொண்ட பல நிறுவனங்கள், இப்போதே தாராவி நில விற்பனைகள் பற்றி தங்களுக்கு ரகசிய விளம்பரங்கள் உலகெங்கிலும் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது .
இதனால் இந்த திடீர் விலையேற்றம் என்றும் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த வாய்ப்பை புரிந்து கொண்ட தாராவி லோக்கல் தாதாக்கள், தங்களில் பாணியில் நாட்கணக்காக அடைபட்டு கிடக்கும் குடிசைகளின் மீது பார்வை போயிருக்கிறது.
இப்படி பட்ட குடிசைகள் தான் சமீபகாலமாக அதிகமாக விற்பனை ஆகியிருக்கிறதென்றும், தற்போதைய நிலையின் படி குடிசைகளில் வசிப்பவர்களின் வீடுகள் கூட அவர்கள் அறியாமல் விற்க வாய்ப்பு இருக்கிறதென்றும் இது பல இடங்களில் நடந்து இருக்கிறது என்றும் தெரிய வருகிறது என்று அந்த தனியார் நிறுவன ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக