5 செப்., 2009

விமானத்தில் தீ முன்னோர் செய்த புண்ணியத்தால் விமான பயணிகள் உயிர் பிழைத்தனர்

   
மும்பை,செப்.05
 ரியாத்திற்கு விண்ணில் பறக்க தயாரான விமானத்தின் எஞ்சீனில் எரிபொருள்
கசிவு காரணமாக தீபிடித்தது. விமானம் வின்னில் பறக்கும் முன்பே இந்த விபத்து கண்டறிய பட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 213 விமான பயணிகள் உட்பட 16 விமான பயணிகள் உயிர் பிழைத்தனர்.
நேற்று மதியம் மும்பையில் இருந்து சவுதி தலைநகர் ரியாத் செல்ல ரன்வேயில் போயிங் 747-400  என்ற 15 வருட பழைய கோனார் என்ற பெயர் கொண்ட ஏர் இந்திய விமானம் எப்போதும் போதும் போல் பல மணிநேர தாமதமாக பயணிகளின் பொறுமையை சோதித்து விட்டு விண்ணில் கிளம்புவதற்காக ரன்வேயில் ஓடிக்கொண்டு இருந்தது.
அப்போது விமானத்தின் இடது இறகில் பொறுத்தபட்ட  எஞ்சீனில் இருந்து புகைகிளம்புவதை ஒரு பயணி கண்டு விமான பணியாளரிடம் கூறியுள்ளார்.
தரைக்கட்டுப்பாடு தளத்தில் இருந்தும் புகை கிளம்புவது குறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்க பட்டது.
இதனை அடுத்து விமானம் உடனடியாக நிறுத்தபட்டது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் அவசர பாதை வழியாக கீழே இறக்கிவிடபட்டனர்.
இந்த சம்பவத்தில் 6 பயணிகள் லேசான காயமடைந்தனர்.
இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும் போது விமானம் இந்த நிலையில் பறந்து சென்று இருந்தால் பெருத்த விபத்து ஒன்று நிகழ்ந்து இருக்கும் இந்த சம்பவம் குறித்து விசாரனை நடத்தபடுவதாக தெரிவித்தார்.
விமான பயணிகள் அனைவரும் மாற்றும் விமானத்தில் ஏற்றபட்டு 16 மணி நேர தாமத்திற்கு பிறகு ரியாத் புறப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக