9 செப்., 2009

மதக்கலவரம் குறித்து அனைத்து கட்சி ஆலோசனை

  மும்பை,செப்.09
மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள மீரஜ் என்ற நகரத்தில் கணபதி விழாவின் போது நகரின் முக்கியான இடத்தில் சத்திரபதி சிவாஜி மஹராஜ் அப்சல் கானை கொலை


.
செய்யும் படம் ஒன்று பெரிதாக வைக்கபட்டு இருந்தது. தற்போது ரம்ஜான் நோன்பு நடந்து கொண்டு இருப்பதால் இந்த படத்தை அகற்ற சொல்லி நகர நிர்வாகம் உத்தரவிட பிரச்சனை மத கலவரமாக வெடித்தது. கடந்த 3 நாட்களாக கலவரகாடாக மாறிவந்த மீரஸ் சாங்கிலியிலில் ஞாயிறு அன்று அந்த மாவட்ட ஆட்சியாளர் சியாம் வராண்டே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். திங்கள் கிழமை காலை 8 முதல் 10 மணிவரை ஊரடங்கு தளர்த்த பட்டபோது மீண்டும் கலவரம் வெடித்தது, இதனால் முழு நாளும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு மாநில பாதுகாப்பு சிறப்பு போலீஸ் படை நகரம் எங்கும் நிறுவபட்டது.
அனைத்து கட்சி கூட்டம் :- மராட்டிய மாநிலம் சாங்கிலி - மீரஷில் நடந்து வரும் மதக்கலவரங்கள் நாளுக்கு நாள் தீவிரமாகி கொண்டே வருகிறது. நேற்று துப்பாக்கி சூடு நடந்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை முதல் மந்திரி அசோக் சவான் ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில், துணைமுதல் மந்திரி சஜன் புஜ்பால், பாரதிய ஜனதா தலைவர் கோபிநாத் முன்டே, சிவசேனா எதிர்கட்சி தலைவர் ராம் தாஸ் கதம், தொழிற்துறை மந்திரி நாராயன் ரானே, ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா-அத்வாலே பிரிவு- ராம்தாஸ் அத்வாலே, மத்திய மந்திரி பிரதீப் பாட்டில், மற்றும் பல கலந்து கொண்ட படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக