7 செப்., 2009

மும்பை மக்களுக்கோர் நல்ல செய்தி

 
மும்பை,செப்.07
கடந்த சில நாட்களாக மும்பை வாணம் கரிசனம் காட்டியதில் குடிநீர் தேவையை தீர்த்துவைக்கும் அனைத்து ஏரியும் கணிசமான அளவு நிறைந்து இருக்கிறது.

  முக்கியமான துள்சி ஏரி தனது அளவை தாண்டி விட்டது.

           மோடக் சாகர் ஏரி  இந்த வருடம் 1355 mm மழையை பெற்று இன்றுவரை 162.09 மீட்டர் உயர்ந்து விட்டது. கடந்த வருடம் இதே நேரத்தில் இந்த ஏரியின் அளவு 162.40 ஆக இருந்தது

           தன்சா ஏரி 1044 mm மழையை பெற்று 127.98 மீட்டர் உயர்ந்து உள்ளது கடந்த வருட அளவு 128 ஆகும்

      விஹார் ஏரி  1813 mm மழையை பெற்று 76.18 மீட்டர் உயரத்தை தொட்டு இருக்கிறது. கடந்த வருட இதே நேர அளவு 80.11 ஆகும்

     துளசி ஏரி பந்தயத்தில் முதலிடம் வந்து விட்டது. ஆம் துளசி ஏரி முழுவதுமாக நிறைந்து வழிய துவங்கி விட்டது. 1206 mm மழையை பெற்று 139.22 மீட்டர் உயரத்தை அடைத்துவிட்டது. இது அதன் அளவை விட 3 மீட்டர் அதிகமாகும் கடந்த வருடம் இதே நேரத்தில் 139.07ஆக இருந்தது. 

       அப்பர் விகார் ஏரி 1494 mm மழையை பெற்றது, இந்த ஏரியின் அளவு 600 .22 மீட்டர் ஆகும் .கடந்த வருடம் 602.99 மீட்டர் ஆக இருந்தது.

       பாட்சா எரி 1547 mm மழையை பெற்று 131.25 மீட்டர் உயர்ந்து இருக்கிறது கடந்த வருடம் இதன் அளவு 138.40 ஆகும்

துளசி ஏறி இன்று காலை சரியாக 6 மணி அளவில் நிறைந்து தண்ணீர் மீதமுள்ள தண்ணீரை வெளியேற்ற துவங்கியது.

இதனால் மும்பையில் தண்ணீர் தட்டுப்பாடு இனிமேல் வராது என்றும். அமுலில் உள்ள குடிநீர் வெட்டு இந்த வார கமிட்டி கூட்டதிற்கு பிற்கு முடிவெடுக்கபடும் என்று மும்பை மாநகராட்சியின் குடிநீர் வாரியம் தெரிவித்து
உள்ளது
Good news brought you by:- Quick Gun sarvan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக