14 செப்., 2009

H1N1 TPI:- Rank 2

                   ஆரொக்கிய விடயத்தை பொருத்தவரை உலகம் முழுவதையும் பயமுறுத்தி தற்போது இந்தியாவை  பயமுறுத்திக்கொண்டு இருக்கும் ஸ்வன் புளு விட்ட பாடு தெரியவில்லை. நகர ஆரோக்கிய மற்றும்தோற்றுநோய் நிர்வாகம் வேறு முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டது, இரண்டாவது தாக்குதல்மிகவும் பயங்கரமாக இருக்கும் என்று வேறு பயமுறுத்தி விட்டார்கள்.
        பூனாவில் 35 வயது பெண்இறந்ததை தொடர்ந்து இந்த நோயினால் இறந்தோரின் எண்ணிக்கை 43 ஐ தொட்டு விட்டது. இதில் கவனிக்கபட  வேண்டிய விடயம் என்ன வென்றால் ஆரம்ப கட்ட பரிசோதனையின் போது H1N1 சின்ரோம்தெரியவில்லை, அதனால் நாங்கள் அதற்குறிய சிகிச்சை அளிக்கவில்லை, ஆனால் மருந்துகளினால் குணமடையாத போது முழுவதும் முற்றிய நிலையில் தான் பரிசோதனை கூடத்தில் உறுதிபடுத்தபட்டது, என்று சாஸ¤ன் பொது மருத்துவமனை டீன் குறிப்பிட்டுள்ளார்.
           கர்ப்பவதிகளில் உடலின் ஆரம்பகட்டத்தில் H1N1 சின்ரோம் கண்டறிவதற்கான சாதனங்கள் நமது நாட்டில் மிகவும் குறைவாக உள்ளதாகவேறு டில்லி மருத்துவ கழகம் அறிக்கை வெளியிட்டு திகிலூட்டி இருக்கிறது.  பொதுவாக கர்ப்பவதி பெண்களின் உடலில் எதிர்ப்பு சக்தி இரண்டு விதமான வகைகளிலும் நடுநிலையில் இருக்கும் அதீத எதிர்ப்பு சக்தி அல்லது நோய் எதிர்ப்பின்மை போன்ற மந்த உணர்வு,[ வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற வகையில் இயற்கையின் பொதுவான செயல் பாடு ஆனால் இயற்கையின் இந்த செயல் பாடு இன்று பல தாய்மார்களின் உயிருக்கு உலைவைக்கும் காரியமாக மாறிவிடுமோ என்ற கவலை வேறு எழ ஆரம்பித்து உள்ளது. 
                        இனி வரும் நாட்கள் மும்பைக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போகும் போது கைகுட்டை மறக்காதீர்கள். பூனாவை பெருத்தவரை கணேசர் திருவிழாவில் அதிகமாக H1N1  வைரஸ் பரவியதாக ஆய்வரிக்கையில் வந்துள்ளது. மும்பையிலும் கணேசர் திருவிழாவிற்கு பிறகு மருத்துவமனை யில் கூட்டம் அலைமோதின, ஜாவ்டேக்கர் சார் What about Mumbai city 
தொடர்புடைய செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக