4 செப்., 2009

மும்பையில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் மரணம்

Justify Full

மும்பை,வெள்ளி.04

மும்பை புறநகர் பகுதியான அந்தேரியில் கடுமையான மழைகாரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் மரணமடைந்தனர். 13 நபர்கள் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
நிலச்சரிவு சம்பவம் குறித்து இணைபோலீஸ் கமிசனர் அமிதாப் குப்தா கூறியதாவது:-

நெற்று இரவு அந்தேரி சாக்கி நாக்காவில் உள்ள எல்.பி.எஸ் நகரில் கடுமையான மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த பகுதியில் இருந்த 15 முதல் 20 குடிசை வீடுகள் இந்த நிலச்சரிவில் சிக்கி கடுமையாக பாதிப்படைந்தது. அந்த குடிசைகளில் குடியிருந்த வந்தவர்களின் குழந்தைகள் உட்பட 12 பேர் மரணமடைந்தனர்.

13 நபர்கள் படுகாயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் 12 தீயணைப்பு வாகணங்கள் மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றன என்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மராட்டிய முதல் மந்திரி அசோக் சவான் மரணமடைந்தவர்களுக்கு ரூ50000-ம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.25000 நிவாரண தொகையாக அறிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக