மும்பை,செப்.07
26/11 மும்பை தாக்குதலில் உயிருடன் பிடி பட்ட ஒரே ஒரு தீவிரவாதி அஜ்மல் கசாப். மும்பை ஆர்தர் ரோடு சிறை யில் வைக்க பட்டு இருக்கும் இவருக்கு தினமும் ராஜ மரியாதை .
விசாரனைக்காக கோர்ட்டிற்கு கொண்டு செல்லும் போது பெரிய பெரிய வி.ஐ.பிக்கு கொடுக்கும் பாதுகாப்பு, இவர் தங்கி இருக்கும் அறை முழுவதும் மிதமான குளிர்சாதன வசதி செய்யபட்டுள்ளது. இவரின் பாதுகாப்பிற்காக இந்தோ நேபாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சிறப்பு பணிக்காக நியமிக்கபட்டு இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு எனக்கும் ராக்கி கட்டுங்கள் என்று அடம் பிடிக்க கட்ட காலமே என்று கோர்ட் அறையில் இருந்த ஒரு பெண் வழக்கறிஞர் அவனுக்கு ராக்கி கட்டி விட்டார். இப்போது புதிதாக எனக்கு பாசுமதி அரிசி பிரியாணி தான் வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டான்.
இது குறித்து சிறை அதிகாரி ராஜேந்திர தாம்னெ கூறும் போது
கடந்த சில நாட்களாகவே சாப்பாடு சரியாக சாப்பிடாமல் அடம்பிடித்து வந்தான். அவனது உடல் நிலையை தினமும் கவனிக்கும் மருத்துவரிடம் அவன் எனக்கு பாசுமதி அரிசி பிரியாணி வேண்டும் என்று கேட்டு இருக்கிறான்.
சிறையில் உள்ளவர்களுக்கு உணவு விதி 1952-ம் ஆண்டின் அட்டவணைப் படி இதுவரை இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் இந்த முறை தான் பின்பற்ற பட்டு வருகிறது. வி.ஐ.பி க்களுக்கும் வரி கட்டுபவர்களுக்கு சில விதிகள் தளர்த்தபடுகிறது.
அதே நேரத்தில் அஜ்மல் போன்ற முக்கியமான குற்றவாளிகளின் விடயத்தில் கோர்ட்டாரின் உத்தரவுப்படி நாங்கள் நடக்க வேண்டி இருக்கிறது. அஜ்மலை சுற்றி மொத்தம் எட்டு சி.சி டிவி கேமராக்கள், அவனது அறையில் மட்டும் எப்போழுதும் உடனிருக்கிற இரண்டு பணியாளர்கள், ஒரு முறை டுயூட்டி பார்த்தவர்கள் அடுத்த முறை இந்த பணி அவர்களுக்கு வழங்கபடாது.
மேலும் இவனது செல்லிற்கென்றே சிறப்பு வாட்ச் டவர்கள் செலவு செய்து கட்டி இருக்கின்றோம் இவ்வளவு செய்து தற்போது பாசுமதி அரிசி கேட்டு அடம்பிடிக்கிறான்.
பலமுறை நாங்கள் அவனை எச்சரித்தும் கண்டுகொள்ள மறுக்கிறான். மேலும் மேலும் எங்களுக்கு எரிச்சல் ஊட்டும் விதமாகவே நடந்து கொள்கிறான்.
நேரத்திற்கு குளிக்கிறது கிடையாது, அவனுடன் இருக்கும் அதிகாரிகளை கிண்டல் அடிப்பது, கேர்ட்டுக்கு பேகும்நேரங்களில் பாத்ரூமில் போய் உட்கார்ந்து கொண்டு டைம்பாஸ் செய்வது போன்ற பல சேட்டைகள் செய்து வருகிறான்.
நேரத்திற்கு குளிக்கிறது கிடையாது, அவனுடன் இருக்கும் அதிகாரிகளை கிண்டல் அடிப்பது, கேர்ட்டுக்கு பேகும்நேரங்களில் பாத்ரூமில் போய் உட்கார்ந்து கொண்டு டைம்பாஸ் செய்வது போன்ற பல சேட்டைகள் செய்து வருகிறான்.
இதுவும் அவர்களது செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கும் எங்களின் கோபத்தை வரவழைத்து அதன் மூலம் ஏதாவது ஆதாயம் தேட பார்ப்பார்கள்.
என்று கூறினார்.
இது குறித்து பப்ளிக் புரசிக்யூட்டர் உஸ்வல் நிகம் கூறும் போது இன்னும் 150 பேர் சாட்சிகள் சொல்லவேண்டியது பாக்கி இருக்கிறது. இனி அதிக விடுமுறை வேறு வருகிறது. அதனால் சாட்சிகள் விசாரனை முடிவதற்கே ஏப்ரல் 2010 ஆகிவிடும் அதுவரை அஜ்மல் போடும் வேசத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்து தான் ஆகவேண்டும் என்றார்

இலங்கையில் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொல்ல இந்திய அரசு செலவு செய்தது. இப்போது ஒரு தீவிரவாதியைக் காப்பாற்ற இவ்வளவு செலவு செய்கின்றது. வாழ்க இந்திய சனநாயகம்.
பதிலளிநீக்கு