6 செப்., 2009

புலித்தலைவருக்கு கைது வாரண்ட், சூடேறும் சிவசேனிக்


மும்பை,செப்.06
   சிவசேனாவின் செய்தி பத்திரிக்கையானசாம்னாவில் சர்ச்சைக்குறிய கட்டுரையை எழுதியதற்காக பீகாரில் உள்ள போஷ்பூர் நீதிமன்றம் நேற்று
சிவசேனா கட்சித்தலைவர் பாலா சாகேப் ஜி தாக்கரே அவர்களுக்கு கைது வாரண்டு பிறப்பித்து உள்ளது.

இது குறித்து சிவசேனா செயற்தலைவர் உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொண்ட போது, முதலில் சாகேப் ஜி யை கைது செய்து பார்க்கட்டும், அதன் பிறகு தெரியும் என்றார்.

சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர், நீலம் கோரே நிருபர்களிடம் பேசிய போது இதுவரை எங்களுக்கு கைது வாரண்ட் எதுவும் வரவில்லை, வந்த பிறகு இது குறித்து ஆலோசனை செய்யலாம், அது வரை ஒன்றும் குறிப்பிடபடுவதற்கு இல்லை என்று கூறினார்.

இதனிடையே வதந்திகள் எதையும் யாரும் பரப்பிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து விடக்கூடாது என்ற கவணத்தில் மும்பை காவல்த்துறை தயாராக இருக்கிறது. மும்பையில் தற்போது திருவிழா சமீபத்தில் கணபதி கரைப்பு விழா முடிந்து, நவராத்திரி துவங்கபோகிறது, ரம்ஜான் நோன்புவேறு நடந்து கொண்டு இருக்கிறது.

மேலும் தேர்தல் அருகில் வந்து விட்டது. இந்த நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் அரசுக்கு சிக்கல் என்ற கோணத்தில் மாநிலத்தை ஆளும்
காங்கிரஸ் அரசும் இந்த பிரச்சனையில் கொஞ்சம் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.

1 கருத்து: