11 செப்., 2009

தீர்வை தேடுங்கள் குறைகளை அழித்துவிடுங்கள் (TAO 79)



           தாவோ மதம் மந்திர தந்திரங்களால் ஆனது அல்ல, மந்திர தந்திரவாதிகள் என்றாலே தாவோ மதத்திற்கு கடுமையான எதிரிகள், மந்திரவாதிகள் மக்களை ஏமாற்றுகிறவர்கள், நட்சத்திரங்களை பார்த்து பலன் சொல்கிறவர்கள்(ஜோசியகாரர்கள்), குறி சொல்கிறவர்கள், இதர மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் என்று பலவாறு ஏமாற்றுபவர்கள் தாவோவிடம் இருந்து தப்ப முடியாது. இவர்கள் குறைகளை அடுக்கி கொண்டே போவார்கள், வருபவர்களின் கவலை முகங்களை பார்த்து அவர்களில் ஒரு சில வார்த்தைகளிலே அவரகளுடைய முழு குடும்ப கஷ்ட நஷ்டவிபரங்களை அறிந்து கொள்வார்கள். அவர்களுக்கு அது ஒரு கலை அதை மீண்டும் தன்னிடம் வரும் நபர்களுக்கு சொல்லும் போது வியப்பு கொள்வார்கள். அவர்களுக்கு தெரியாது இவர்கள் தான் சில வினாடிகளுக்கு முன்பு நூலின் முனையை மந்திரவாதி/பூசாரி/ஜோசிய/ காரர்களிடம் கொடுத்கொடுத்தோம் என்று தெரியாது. சரி மந்திரவாதிகள்/பூசாரி/ஜோசியகாரர்கள் என்ன செய்வார்கள் கடந்த கால,  வருங்கால குறைகளை சொல்லிகொண்டே போவார்கள் அவர்களால் தீர்வு சொல்ல முடியாது தீர்வு சொல்ல முடியுமானால் மந்திரவாதிகள்/பூசாரி/ஜோசியகாரர்கள் இந்த வியாபாரத்திற்கு வந்திருக்கவே முடியாது. மந்திரம்/ஜோசியம் என்பது பவுத்தம் மற்றும் தாவோ விடம் கிடையாது. 
            தாவோ நிரந்தர தீர்வை தருவார்கள் அதற்காக அவர்கள் எங்களிடம் வாருங்கள் நாங்கள் தீர்வு சொல்கிறோம் என்று விளம்பரபடுத்தமாட்டார்கள், தாவோ மதத்தை சேர்ந்தவர்கள் சிறந்த வழிகாட்டிகள் என்று  பலனை அனுபவித்தபிறகு தான் தெரியும்.

                   கோவாவை சேர்ந்த அல்பர்ட் மெஸ்கரந்தஸ்  3 குழந்தைகளின் தந்தை, பானாஜி நகர எல்லையை ஒட்டிய சிறிய மலை குன்றின் அடிவாரத்தில் இவர்களது வீடு இருக்கிறது. சிலவருடங்களுக்கு முன்பு  மழைக்காலத்தில் நிலச்சரிவினால் வீடு இடிந்து போனது , குடும்பத்தினர் அனைவரும் பிழைத்து கொண்டனர். ஆனால் குடும்ப தலைவரான மெஸ்கரந்தஸ்க்கு மட்டும் நிறந்தர ஊனம் ஏற்பட்டுவிட்டது. அவர் அரசின் உதவிக்காக தனது மூன்று சக்கரவண்டியின் அலையாய் அலைந்தார். அரசு உதவி எளிதாக கிடைத்துவிடுமா என்ன? யாருடைய கையெழுத்தோ பாக்கியாம்.    வீட்டுக்கார அம்மா ஏதோ சில வீடுகளில் வேலை பார்த்து குடும்பத்தை நகர்த்திகொண்டு இருக்கிறார். பாவம் சில வருடங்களுக்கு முன்பு கறிக்கோழி மொத்தவியாபாரம் பார்த்த மெஸ்கரந்து உடல் ஊணமுற்ற பிறகு அந்த வேலையை செய்ய முடியவில்லை.

                   நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த தனக்கு ஏன் இந்த நிலைவந்தது  ஏதாவது பூர்வ ஜென்ம சாபமா என்று அறிய வசாயை அடுத்து உள்ள ஒரு சிறுநகரத்தில் அடிக்கடி பத்திரிக்கைகளில் பேச்சு அடிபடும் ஒரு மந்திரவாதியை/பாபாவை சந்தித்திக்க சென்றார்.பாபா சில ஊதுபத்திகளை ஒரு சாமி புத்தகத்தில் இருந்து  மெஸ்கரந்தின் கைகளில் கொடுத்து அந்த புத்தகத்தின் உள்ளே உங்களால் முடிந்த அளவு ஒரு ரூபாய் கூடவைத்தால் போது அதுதான் காணிக்கை என்றார்.

        அதன் பிறகு நீங்கள் எவ்வளவு வைப்பீர்களோ அதைவிட 10 மடங்கு நீங்கள் வீட்டிற்கு சென்று 24 மணிநேரத்திற்குள் வரும் என்றார். இதனை அடுத்து மெஸ்கரந்தஸ் தான் கொண்டு சென்ற மூன்று 500 நோட்டுக்களை அந்த சாமி புத்தகத்தில் வைத்து அவரிடம் தந்தார். அந்த பாபாவும் உங்களுக்கு பலன் அளிக்கவில்லை என்றால் உடனே வந்து இந்த ரூபாயை எடுத்துகொண்டு சென்றுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அந்த பணத்தை அதே சாமி புத்தகத்தில் வைத்து இருப்பேன் என்றார். சில மந்திரங்கள் சொன்னார். மெஸ்கரந்தின் வீடு  முன்பு சுடுகாடாக இருந்தது, அங்கு அப்படி நடந்தது, இப்படி நடந்தது என்று பலவாறு சொன்னார்.

                அதானால் தான் உங்களது குடும்ப சீரழிந்தது என்றும் சொன்னார். இறுதியில் சரி நீங்கள் போங்கள் எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்றார். பாபாவிடம் வந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் பாருங்கள் என்று பல தொழிலதிபர்களுடன் எடுத்த போட்டோக்களை காண்பித்தார். அதன் பிறகு சில 500 ரூ தாளை வாங்கி கொண்டார். புதிதாக சென்ற வீட்டில் எதும் கெட்டது வராமல் இருக்க ஒரு தாயத்து ஒன்றை அந்த சில 500 ரூ தந்துவிட்டார். மொத்தம்  ரூ.4000 மேல் செலவும் தனது மனைவியின் நகைகளை கடையில் வைத்து இந்த பணத்தை வாங்கிவந்திருந்தார். மூன்று வருடங்கள் கழிந்தது அரசு அறிவித்த உதவி தொகையும் வரவில்லை   மந்திரவாதி சொன்னது போல் அவர் கொடுத்த சில 500 ரூபாய்கள் பன்மடங்காகவும் இல்லை , அதை போல் நூறு மடங்கு ரூபாய்கள் மருத்துவ செலவிற்கு குழந்தைகளில் பள்ளிக்கூட செலவிற்கும் தான் போனது.

                          அங்குள்ள ஒரு தாவோ துறவி ஒருவரிடம் இவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. இவர் பவுத்தம்/ தாவோ மீதேல்லாம் கிண்டல் மனப்பான்மை கொண்டவர். வெட்டியாக காலத்தை போக்கும் சாமியார்கள் /பிச்சை எடுத்து வயிறுவளர்ப்பவர்கள் என்று அடிக்கடி கிண்டல் அடிப்பார். தனக்கு கஷ்ட காலம் ஏற்பட்ட சில மாதங்களுக்கு பிறகு தாவோ துறவியிடம் பேச ஆரம்பித்தார். அப்போது தாவோ பற்றி தாவோ துறவி சொன்னார். இயற்கையை வஞ்சிக்காதே அது உன்னை வஞ்சிக்கும் என்றார்.

                   இருப்பினும் நீ இயற்கையை நேசி அது உன்னை நேசிக்கும் என்றார். அந்த பணம் பிடிங்கி மந்திரவாதியின் மீது கூட இவருக்கு அவ்வளவு கோபமில்லை ஆனால் இந்த தாவோ துறவி மீது கடுமையான கோபம் வந்துவிட்டது.  ஆனாலும் ஒன்றும் சொல்லமுடியாமல் தனது மூன்று சக்கர வாகணத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.   பாதி இடிந்த நிலையில் இருந்த தனது பழைய வீட்டின் வழியாக திரும்பிக்கொண்டு இருந்தார்.  அந்த வீடு நேராக மலையின் அடிவாரத்தில் இருந்தது. மலைக்கும் வீட்டிற்கு இடைவெளியில்லாமல் அமைந்திருந்தது. அவரது மூதாதையார் அந்த வீட்டிற்கு முன்புறம் பல அடிதூரம் வீடு கட்டி இருந்தனர். மெஸ்கரந்தஸ்ஸோ அந்த இடங்களை செங்கள் சூளைகாரர்களுக்கு கொடுத்து விட்டு வீட்டை மலையை ஒட்டி கட்டிகொண்டார். செங்கள் சூளைக்காரர்கள் மலையில் இருந்து மண் எடுத்து கொண்டு இருந்தார்கள்.

                              இப்போது புரிந்துவிட்டது. தாவோ வின் சூட்சுமம் வியந்து போனார் மெஸ்கரந்தஸ் சுமார் 42 வருட காலமாக இதை தெரியாமல் இருந்தேனே என்று வருத்தபட்டார். மறுநாள் தாவோ பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாக மீண்டும் துறவியிடம் சென்றார். துறவியிடம் உண்மையை மறைக்காமல் சொன்னார் நேற்று நீங்கள் தாவோ பற்றி சொல்லும் போது எனக்கு பயங்கர கோபம் வந்தது. ஆனால் பழைய வீட்டின் வழியாக செல்லும் போதுதான் உண்மை தெரிந்து கொண்டேன். முன்னோர்களின்  யோசனையை கழித்துவிட்டு மாதாமாதம் கிடைக்கும் சிலநூறு ரூபாய்க்காக இன்று இந்த நிலைக்கு வந்துவிட்டேன் என்று மனதார துறவியிடம் சொல்லி வருந்தினார்.                  

                         ஆனால் அவனுக்குத்தெரியும் அங்கு அவனுக்கு ஒன்றும் கிடைக்காது இருப்பினும் சில நாட்கள் அங்கு வர ஆரம்பித்தான். தாவேவை பற்றி பல கேள்விகள் கேட்டான். இப்போது அவனுக்கு மனது மிகவும் தொம்பாக இருந்தது. முன்பு போல் சோகமாக அவன் இல்லை, கால்கள் இழந்த பின் இருந்த அதே நிலைதான் அதே வருமைதான் ஆனால் இப்போது அவனிடத்தில் ஏதோ ஒரு சக்தி பிறந்திருக்கிறது. அவன் குழந்தைகளிடத்தில் வெறுப்பாக பேசுவதில்லை, அதைவிட எப்போதும் அவனை திட்டி கொண்டே இருக்கும் மனைவி அவனிடத்தில் அன்பாக நடக்க ஆரம்பித்தாள்.  இந்த மாற்றங்கள் அவனுக்கு எப்படி ஏற்பட்டன என்று தெரியவில்லை. மறுநாள் மீண்டும் துறவியின் தாவோ கோவிலுக்கு செல்கிறார்.

                                 தற்செயலாக அவனுக்கு ஒரு யோசனை வருகிறது ஒரு காகிதமும் பேனாவும் எடுத்துகொள்கிறான். தாவோ கோவிலுக்கு வந்தது முதல் அதற்கு முன்புவரை என்று பிரித்து எழுத துவங்குகிறான். அவனுக்குள் சந்தோசம் அடங்கவில்லை. ஆம் அவனது வாழ்வில் நடந்த சில மாற்றங்கள்   தாவோ கோவிலுக்கு சென்றதில் இருந்து வந்தவை அவனுக்கு அரசு பணம் இன்னும் வந்து சேரவில்லை, வீட்டில் மனைவி குழந்தைகளின் அன்றாடைய தேவைக்கு இன்னும் போராட்டம்தான் இருப்பினும் அவனுக்கு நிறைய நல்ல மாற்றங்கள். 
            
                   அன்று மாலை தனது மூன்று சக்கர வாகணத்தில் வீடு திரும்புகிறான். தனது இடிந்து போன பழைய வீட்டின் வழியாக சென்று கொண்டு இருந்தான். மண்சரிவு ஏற்பட்டு வீடு இடிந்த பிறகு செங்கல் சூளைகாரர்களும் ஓடிவிட்டனர். அந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் மனித சஞ்சாரமே கிடையாது. அவனது வீட்டில் மாலை நேரம் சில பறவைகள் அடைவதை கண்டான். ஆம் செங்கல் சூளையிலும் ஆங்காகே அமர்ந்திருந்த அந்த பறவைகளை பார்த்தான் அவனுக்கு சந்தோசம் தாங்கவில்லை. அது காடையினத்தை சேர்ந்த பறவை சாதாரன கறிக்கோழி விலை 40.ரூ ஆனால் இந்த காடை இனபறவையின் விலையோ 150 முதல் 200 வரை வீட்டிற்கு செல்ல வில்லை மீண்டும் தாவே கோவிலுக்கு செல்கிறான்.

                        ஆனால் கோவிலை மூடிவிட்டு துறவி திரும்பி கொண்டு இருந்தார். வேகமாக வரும் இவனை பார்த்ததும் துறவிக்கு ஆச்சரியம் அல்லது வேறு எந்த உணர்சியும் காட்டவில்லை, பொறுமையாக என்ன என்று கேட்டார். எனக்கு ஒரு பாதை தெரிந்துவிட்டது, நான் கோவிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்றான். இப்போது நான் சில நாட்கள் நடைபயனம் செல்ல  இருக்கிறேன். மீண்டும் வரும் வரை கோவிலை கவனித்துகொள்  கோவிலை தூய்மையாக வைத்திரு அது போதும், நான் ஒருவரிடம் சாவி கொடுத்துள்ளேன் அவரிடம் இருந்து வாங்கி கொள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

                     மறுநாள் அதிகாலை பொழுது புலர்வதற்கு முன்பே எழுந்து தவழ்ந்து தவழ்ந்து சென்று தனது மூன்று சக்கர வாகனத்தில் ஏறி கோவிலை நோக்கி சென்றார். ஏன் என்றால் சாவி கொடுத்த ஆள் வாஸ்கோவில் பணிபுரிகிறார் அவர் காலை சென்றுவிட்டல் இரவு தான் வீட்டிற்கு வருவார். மெஸ்கரந்தஸ் அவரது வீட்டிற்கு செல்லும் போது அவர் புறப்பட்டு வெளியே வந்துவிட்டார். இவரை கண்டதும் ஆச்சர்யத்துடன் என்ன என்று கேட்டார் விபரத்தை சொன்னதும் கோவிலின் சாவியை கொடுத்துவிட்டு சென்று விட்டார். மெஸ்கரந்தஸ் கோவிலை திறக்கும் போது பொழுது புலர்ந்துவிட்டது. கோவிலின் அமைப்பை இப்போது தான் தெளிவாக பார்க்கிறார். சூரிய ஒளி எல்லா இடத்தில் இருந்தும் விழுகிறது. காற்று நன்றாக வந்து போய்க்கொண்டு இருந்தது, காற்று வந்துகொண்டு இருந்தும் அகல்விளக்கு அசையாமல் நெளியாமல் எரிந்து கொண்டு இருந்தது.

                    ஏதோ ஒரு புது உலகில் வந்து அமர்ந்ததை போன்ற ஒரு உணர்வு அவனிடம் இருந்தது. காலை நன்றாக புலர்ந்த உடன் கோவிலை பராமரிக்கும் முதிய பெண்மணி வந்து விட்டார். அவரிடம் சாவியை கொடுத்துவிட்டும் மாலை நான் வருவேன். கோவிலை மூடிவிட்டு நாளை காலை வழக்கம் போல் கோவிலை திறப்பேன் என்று சொல்லி துறவி தன்னிடம் சொன்ன வார்த்தையையும் சொல்லிவிட்டு தனது மூன்று சக்கர வாகனத்தில் தனது பழைய வீடு நோக்கி உற்சாகமாக சென்றான். அப்போது வீட்டில் இருந்த பறவைகள் எல்லாம் வெளியே சென்றுவிட்டன. நிதானமாக வீட்டை சுற்றிபார்க்கிறார் ஆம் சுமார் 13 கூடுகள் சாரளங்களிலும்,மேல் தாழ்வாரங்களிலும், மணம் சரிந்து மூடிய சமையலறை பகுதிகளிலும் இருந்தன.

                        வீடு இடிந்த பிறகு அதை ஒன்றும் செய்யவில்லை, அரசு அதிகாரிகள் பார்வையிட வருவார்கள் என்று அப்படியே மெஸ்கரந்தஸ் அப்படியே போட்டுவிட்டார். வருடம் 4 ஆகிவிட்டது. இன்று நாளை என்று சொல்கிறார்களே தவிர வந்த பாடில்லை, வெளியே வந்து பார்க்கிறார், மலை முழுவதும் காட்டு அரிசி செடிகள் அதனை உண்ண வரும் வெட்டுக்கிளிகள், பூச்சிகள் என  கடைகளுக்கு பிரியமான உணவுகள். காடைகள் ஏன் தனது பாழடைந்த வீட்டை தேர்ந்து எடுத்தன என்று இப்போது புரிந்து விட்டது. அன்று மாலை தாவோ கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றிவைத்துவிட்டு கோவிலை மூடிவிட்டு மீண்டும் வீடு செல்கிறார்.
                             மறுநாள் விடுமுறை தனது குடும்பத்தை அழைத்துகொண்டு தாவோ கோவிலுக்கு வருகிறார். எப்போதும் போல் விளக்கேற்றி விட்டு மூதாட்டியிடம் கோவிலின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அனைவரையும் அழைத்து கொண்டு தனது பழைய வீட்டிற்கு செல்கிறார். செங்கல் சூலையில் பல மரச்சாமான்கள் அப்படியே இருந்தன. தான் கொண்டு சென்ற கருவிகள் மூலம் தனது குழந்தை மனைவி உதவியுடன் சிறிய சிறிய அறைகள் சதுரங்கள் செய்து வீட்டின் அனைத்து பகுதிகளிலும் வைக்கிறார்
                அதன் பிறகு வைக்கோல் மற்றும் குச்சிகளை வீட்டின் வெளியே போட்டுவிட்டு சென்று மாலையில் மீண்டும் கோவிலுக்கு திரும்புகிறார்கள், இப்படியாக சில நாட்களின் 50 மேற்பட்ட கட்டங்கள் செய்து விட்டின் சுவற்றை ஒட்டிய பகுதிகளில் வைத்துவிட்டார். கட்டங்களில் வைக்கோல்கூடுகள் கட்டப்படுவதை கண்டார். கூடுகளில் மூன்று முதல் நான்கு காடைமுட்டைகள் இருந்தன. சில நாட்களில் காடைகுஞ்சுகள், வளர்ந்தது சுமார் 25 ஜோடி சிறகு முளைத்த காடைகுஞ்சுகளை பிடித்து கொண்டு வீட்டிற்கு சென்றார். அங்கு அவற்றிக்கு தானிய உணவிட்டு வளர்த்தார். தனக்கு ஏற்கனவே அறிமுகமான உணவகங்களுக்கு சென்று காடை வேண்டுமா என்று கேட்க முதலில் பணத்தை பிடி தினமும் கொண்டுவா டூரிஸ்டுகள் அதைத்தான் கேட்கிறார்கள் என்றார்கள். 

                                   இப்போது ஊனமுற்றோருக்கான மோட்டார் சைக்கிள், தனது பழைய வீட்டைசுற்றி பெரிய வேலி அந்த வேலியின் முகப்பில் பானாஜி காடைபண்ணை என்று பெயர் வைத்தார். இப்போது மீண்டும் கோழிவிற்பனை துவங்கிவிட்டார், முன்பு போல் அல்ல பண்ணைகளில் இருந்து போன் வருகிறது. கடைகளின் இருந்து போன் வருகிறது. இவர் மாலை பணம் வாங்க மட்டும் தான் வெளியே செல்கிறார். இரண்டு வாகணங்கள் 5 வேலைக்காரர்கள் இருக்கின்றனர்.  சில நாட்களுக்கு பிறகு துறவி மீண்டும் வந்தார். துறவியை தனது வீட்டிற்கு வற்புறுத்தி அழைத்து வந்தார்.
                              துறவிக்கு எல்லாம் தெரியும்  ஏனெனில் தாவோ ஏற்று கொண்டவர்கள் தங்களை பக்குவபடுத்தி கொள்வார்கள், தங்களை பக்குவபடுத்தி கொண்டவர்கள், வீணான கரியங்களில் ஈடுபடமாட்டார்கள். தீர்வை மட்டும் தேடுவார்கள், குறைகளை தேடிகொண்டு வாழ்க்கையை வீனடிக்க மாட்டார்கள்.

தாவோ சொன்னது போல் தீர்வை தேடினான், விடை கிடைத்தது. இதைத்தானே தாவோ சொன்னார். இதில் மந்திரம் ஏது மாயம் ஏது, குறைகளை மட்டும் எண்ணிக்கொண்டு இருந்தால் இன்று மெஸ்கரந்தஸ் அரசு அலுவலகத்திற்கும் தனது வீட்டிற்கு மூன்று சக்கர வாகணத்தில் சுற்றிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக