6 செப்., 2009

பெண் குழந்தை இல்லாதது வருத்தம், 5 குழந்தையின் தந்தை வருத்தம்:- நேர்கானல்

  
மும்பை,செப்.06
  இந்தியாவிலேயே முதல் முதலாக ஒரே நேரத்தில் 5 குழந்தைகளுக்கு தந்தையான சுபைர் கான் தனக்கு பெண் குழந்தை இல்லாதது வருத்தமளிக்கிறது என்றார்.

  •            ஒரே நேரத்தில் இரண்டல்ல, நான்கல்ல ஐந்து குழந்தைகள் எப்படி உணர்கிறீர்கள்?

 இன்று இந்த குழந்தைகளால் நானும் பிரபலமான கான் வரிசையில் சேர்ந்துள்ளேன். காலையில் இருந்தே எனது விட்டின் முன்பு டிவி சேனல் வேண்கள், வெற்று மாநிலங்களில் இருந்து மொபைலில் அழைப்பு வந்து கொண்டு இருக்கிறது.

  •           குழந்தைகளை சென்று பார்த்தீர்களா?

ஆமாம் பிரசவ நேரங்களில் நான் எனது மனைவியின் குடும்பத்தார்கள் அனைவரும் மருத்துவமனையில் தான் இருந்தோம், பிரசவத்திற்கு அழைத்து சென்ற பிறகு மருத்துவர் என்னிடம் வந்து ஐந்து குழந்தைகளும் எவ்வித குறையும் இன்றி அழகாக பிறந்து இருக்கின்றன என்றார். அந்த நேரத்தில் நான் அடைந்த சந்தோசத்தை சொல்ல அளவில்லை, அதே நேரத்தில் குழந்தைகள் அனைத்தும் ஆண்குழந்தைகள் என்று சொன்ன உடன் சின்ன வருத்தம், சபீரா-கானின் மனைவி- விற்கு துணைக்கு ஒரு பெண்குழந்தையாவது பிறக்ககூடாது என்று நினைத்து கொண்டேன். நேற்று மாலை மீண்டும் மருத்துவமனை சென்ற போது அந்த குழந்தைகள் அனைத்தும் தனது அன்னையை சுற்றி படுத்து கிடந்ததன. வெண்டிலேட்டரில் இருந்து எடுத்து விட்டார்கள்.
குழந்தைகள் இன்னும் சில நாட்கள் மருத்துவமனை சூழலில் இருக்கவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

  •       ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகள் எப்படி சமாளிப்பீர்கள்?

உழைப்பேன் எனது ஐந்து குழந்தைகளும் நல்ல படியாக வளர நான் என்னுடைய முழுமையான உழைப்பை பங்களிப்பேன். அரசாங்கத்திடம், அல்லது வேறு யாரிடமும் சென்று உதவி கேட்க்கும் நிலைமையில் இப்போது இல்லை, எதிர்காலத்திலும் இருக்காது அல்லா எனக்கு அருள் கூறுவார்.

  •            உங்கள் குடும்பத்தாரின் உணர்வுகள் எப்படி?

எங்களின் இரண்டு குடும்பத்தாருமே மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள்.  என்ன எனது குடும்பத்தில் இதுவரை பெண் குழந்தைகள் பிறந்ததே இல்லை, எனது தாத்தா விற்கு 4  ஆண் குழந்தைகள் அதில் எனது தந்தை  மூன்றாமவர், ரவருக்கு பிறந்த 3 ஆண்குழந்தைகளில் நான் இரண்டாமவன் அனைவருக்கும் ஆண் குழந்தைகள் தான்.

  •          குழந்தைகளுக்கு பெயர் என்ன வைக்கபோகிறீர்கள்?

குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிரபலமான தலைவர்கள் பெயர் வைக்கலாம் என்று இருக்கிறேன். வீட்டில் பிரபலங்களில் பெயர் அடிக்கடி அழைக்கபடும் போதுசந்தோசமாக இருக்குமே, இருப்பினும் எனது மனைவியிடமும் இது குறித்து ஆலோசனை செய்வேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக