8 செப்., 2009

கடவுள் பெயரில் போதை மருந்து கடத்தல் ஆப்பிரிக்கா நாட்டு இளைஞர் தலைமறைவு


மும்பை, செப். 08
 மும்பையில் கொரியரில் அனுப்ப விருந்த சர்வதேச மதிப்பில் 8 கோடி ருபாமதிப்புள்ள போதை மருந்து பறிமுதல் செய்யபட்டது. இதில் என்ன விசேம் என்றால் அந்த போதை மருந்துகள் அத்தனையும் இது கடவுள் படங்களுக்கு பின்னால் மறைத்து வைக்கபட்டு இருந்தது குறிப்பிடதக்கதாகும். நேற்று மாலை மும்பையில் உள்ள பிரபல அயல் நாட்டு கொரியர் நிறுவனத்திற்கு ஒரு நீக்ரோ இளைஞர் வந்தார். அவர் தன்னிடம் 12 இந்து கடவுள் போட்டோக்கள் இருப்பதாகவும் அவற்றை நெதர்லாந்திற்கு அனுப்பவேண்டும் என்று கேட்டு கொண்டார். கொரியர் நிறுவன ஊழியர்கள் அவரிடம் முகவரி போன் நம்பர் எல்லாம் வாங்கி கொண்டு பார்சலை பெற்று கொண்டனர். அந்த நீக்ரோ இளைஞரும் கொரியருக்கான செலவு தொகையை தந்துவிட்டு சென்று விட்டார்.

  அவர் சென்ற பிறகு அந்த படங்களில் பின்புறத்தில் சந்தேகத்திற்கு இடமாக மேடு பள்ளமாக இருப்பதை கண்ட கொரியர் ஊழியர்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். இதனை மும்பை போலீசாருக்கு தகவல் தர இந்த விவகாரம் போதை தடுப்பு போலீசாரின் கைகளின் மாறியது. போதை தடுப்பு பிரிவு போலீசார் இந்த படங்களை கவணமாக பரிசீலனை செய்த போது அந்த படங்களின் பின்புறம் ஹெராயின் எனப்படும் போதை மருந்து ஒளித்து வைத்திருப்பது கண்டறியபட்டது. இதன்சர்வதேச மதிப்பு 8 கோடி ஆகும்

இந்த பார்சலை தந்த நீக்ரோ இளைஞர் கொடுத்த சாந்தாகுரூஸ் முகவரி போலியானது என்று பிறகு தெரியவந்தது. போதை பொருள் மறைத்து வைக்கபட்டு இருந்த படங்கள் அனைத்தும், சிவன் பார்வதி கணபதி, பாலாஜி, மற்றும் துர்க்கை அம்மன் படங்களாக இருந்தது குறிப்பிடதக்கதாகும் .

இது குறித்து போதை தடுப்பு பிரிவுபோலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக