8 செப்., 2009

இன்றைய பெரிய செய்தி JET JAMED - by quick gun sarvan

Justify FullSpecial Report 


மும்பை,செப்.08
             மும்பை  பரேலை சேர்ந்த ஒரு குடும்பம்,    கல்கத்தா செல்லவேண்டி  மும்பை உள்நாட்டு விமானநிலையம் செல்ல இருக்கும் போது டிவியில் திடிரென Flash News  ஜெட் ஏர்வேஸ் விமான பைலட்டுகள் திடீர் வேலை நிறுத்தம், மூட்டை முடிச்செல்லாம் ரெடியாகி விட்டது. என்ன செய்ய செய்தி சொன்ன \டிவி வாலக்கு நன்றி. இந்த டிவி ரிப்போர்ட்டர்களுக்கு உண்மையிலேயே கழுகு மூக்கு தான் ஒரு சம்பவம் நடக்கும் போது மறுவினாடியில் ஆஜராகி விடுவார்கள்.

விமான நிலையம் ஒரே பரபரப்பில் ஸீ டிவியில் இர்பான் பாய் போன் செய்தார்கள் quick gun sarvan பாய்  உங்க ஊர்க்காரர் ஒருத்தர் இருக்கார் பேசுகிறாயா என்றார். போன் கைமாறியது

                            TPI:-  வணக்கம் சார் தமிழ் பிரஸ் இன்போ-Mumbai இருந்து போசுகிறோம், முதலில் உங்கள் பெயர் :-
                 எதிர்:- எனது பெயர் வேண்டாம் நான் அதிகாரபூர்வமாக பேச அனுமதி இல்லை எங்களின் நிலைமையை நான் சொல்கிறேன்.

                                            TPI:- நன்றி  சொல்லுங்க ஏன் இந்த திடீர் போராட்டம்
                               எதிர்:- வணக்கம் சில நாட்களுக்கு முன்பு எங்களுடைய சக பைலட்டுகளுக்கு சில பிரச்சனைகள் வந்த போது நிர்வாகம் கவனிக்காமல் விட்டு விட்டது. நாங்களும் பல முறை கவுன்சிலிடம் பேசி பார்த்து விட்டோம். பயனில்லை, இது திடீர் போராட்டமல்ல நிர்வாகத்திற்கு ஏற்கனவே தெரிவித்துவிட்டோம், நிர்வாகம் மெத்தனமாக நடந்து கொண்டது, அதனால் தான் நாங்கள் அனைவரும் ஒரு நாள் சிக் விடுப்பு எடுத்து போராடுகிறோம்.

                     TPI:- நீங்கள் எத்தனை பேர் போராட்டத்தில் ஈடுபடுகிறீர்கள்? இப்படி திடீர் போராட்டத்தில் ஈடுபடுவது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துமே??

                எதிர்:-இந்தியா முழுவதும் 640-பேருக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், சிரமத்தில் ஆழ்ந்திருக்கும் பயணிகள் எங்களை மன்னிக்க வேண்டும் எங்களின் தேவைகளையும் மனதில் கொள்ள வேண்டும், நிர்வாகம் எங்களது பேச்சை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்க்கவில்லை, எங்களிடம் வேறு வழியும் இல்லை.

                          TPI:-தற்போதைய நிலையில் இந்த போராட்டம் ஜெட் ஏர்வேஸ¤க்கு பாதிப்பை ஏற்படுத்தும் அல்லவா?
                எதிர்:-நிர்வாகம் என்பது எங்களது பணி என்பதும் வேறு அல்ல நிர்வாகத்தின் எந்த ஒரு பாதிப்பும் எங்களையும் பாதிக்கும் அது எங்களுக்கு தெரியும் எங்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டிருந்தால் நாங்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்,
          TPI:-இன்று மும்பை நீதிமன்றம் உங்கள் போராட்டம் சட்ட விரோதமானது என்று அறிவித்திருக்கிறதே?
 எதிர்:-ஆமாம் நாங்களும் அறிவோம் எங்கள் யூனியன் தரப்பில் வக்கில் ஆஜராகவில்லை , எங்கள் வக்கீல் ஆஜராகும் போது எங்கள் தரப்பு வாதங்களை கோர்ட்டில் எடுத்து சொல்வோம்.

                         TPI:- நிர்வாகம் இது குறித்து இன்றையை போராட்டம் குறித்து எதுவும் உங்களிடம் பேசியதா, ??
   எதிர்:-யூனியன் தரப்பில் இதுவரை பேச யாரையும் அழைக்கவில்லை நிர்வாகத்திற்கென்று சில சட்ட திட்டங்கள் உள்ளன.
--------------------
 ஜெட் ஏர்வேஸின் இந்த திடீர் போராட்டத்தால் 113 உள்நாட்டு விமானங்கள் 16 வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யபட்டன.

பிரபல டிசைனர் மும்பையில் இருந்து அம்தாபாத் செல்ல இருந்தவர் விமான பைலட்டுகளின் வேலை நிறுத்தால் மாட்டி கொண்டார். ஒரு முக்கியான ஒப்பந்ததிற்காக செல்கிறேன். விமானம் கிடைக்கவில்லை, இன்று தவறவிட்டால் நல்ல நாள் இனி இரண்டு வாரம் கழித்து தான் என்றான் . ஆம் இன்று சந்துஸ்டி என்னும் சங்கட ஹர சதூர்த்தி பல வியாபார நோக்கமான ஒப்பந்தங்கள் இன்று போடப்படும், ஆனால் விமான ஓட்டிகளின் வேலை நிறுத்தால் வேறு விமானத்திற்கு காத்து இருந்து செல்லவேண்டி இருந்தது.

இதுதான் சமயம் என்று கிங் பிஸ்ஸர் மற்றும் வேறு விமானங்கள் தங்களின் பயண சீட்டுக்களை இரண்டு மடங்கு விற்றது.

   இது குறித்து மும்பையில் இருந்து டில்லி செல்ல இருந்த ஒரு பயணியை விசாரித்த போது ஒரு புராஜெக்ட் ஒன்றிற்காக அவசரமான டில்லி செல்கிறேன், இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது விமான ஓட்டிகள் வேலை நிறுத்தம் என்று என்ன செய்ய எனக்கு இன்று கண்டிப்பாக சென்றாக வேண்டும், அதனால் கிங்பிஸ்ஸரில் டிக்கெட் எடுத்தேன் எக்ஸ்டிரா 6000ரூ கொடுத்து பயணம் செய்யபோகிறேன் - அதெல்லாம்  எக்ஸ்பென்ஸில் போட்டு வாங்கிவிடலாம் சார்-

ஏர் இந்திய நிர்வாகம் விமான பயணிகளின் பிரச்சனையை சமாளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் செய்தி தொடர்பாளர் கூறினார்.

  விமான ஓட்டிகளின் பிரச்சனை குறித்து ஜெட் ஏர்வேஸ் சேர்மேன் நரேஸ் கோயல் , சிவில் ஏவியேசன் செகரட்டடி மாதவன் நம்பியார், டைரக்டர் ஜெனரல் எஸ்.என்.ஏ ஷாத்தி இந்த பிரச்சனை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கின்றார்கள். இந்த செய்தி தட்டி விடும் வரை ஏன்ன பேசினார்கள் என்று தெரியவில்லை,

ஜெட் விமானம் பயணசீட்டு வாங்கி இருக்கிறீர்களா
தயவு செய்து இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விரிவான தகவலை பெற்று கொள்ளுங்கள் மும்பை 022 39893333

{ Quick Gun sarvanWith TPI-Team }

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக