5 செப்., 2009

கணபதி பப்பா மோரியா

கணபதி பப்பா மோரியா

 மும்பை, செப்.05
 மும்பை முழுவது ஒன்றேகால் லட்சம் கணபதி சிலைகள் கரைக்கபட்டன.
மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்த கணபதி விழாவில் இதுவரை கரைக்கபட்ட கணபதி சிலைகளின் எண்ணிக்கை மொத்தம் ஒன்றேகால் லட்சமாகியது.முக்கியமாக மிகவும் பிரசித்தி பெற்ற கணபதி சிலை கரைக்கும் மையமான கிர்காவ் கடற்கரையில் மொத்தம் 1350 பெரிய கணபதி சிலைகள் கரைக்கபட்டன. கணபதி சிலை கரைப்பின் இறுதிநாள் அன்று மட்டும் சுமார் 70000 மக்கள் கிர்காவ் கடற்கரையில் கூடினர்.
தாதர் சிவாஜிபார்க் கடற்கரை, ஜூஹ¤ கடற்கரை வெர்செவா கடற்கரை மற்றும் நவிமும்பையில் உள்ள வாஷி கழிமுகபகுதிகளிலும் கணபதி சிலைகள் கரைக்கபட்டது. மும்பை முழுவதும் சுமார் 63 லட்சம் பேர் இந்த பகுதிகளில் கூடினர். கணபதி சிலை கரைப்பிற்காக மும்பை மாநகராட்சி முக்கிய பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள், மற்றும் பொது தொண்டு நிறுவனத்தினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என சுமார் 70 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
நகர் முழுவதும் சிறப்பு பேருந்திற்கு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. மும்பை மாநகராட்சி   9 உயிர் காக்கும் வாகனங்கள், 20 சிறிய ரக படகுகள், பயிற்சி எடுத்த 22 சிறப்பு நீச்சல் வீரர்கள்  என அனைத்து கடற்கரை பகுதிகளும் நிறுத்தபட்டு இருந்தது.
மும்பை காவல்த்துறையும் சுமார் கணபதி விழாவிற்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தன. நகரில் நெரிசலான பகுதிகளில் சீருடை அணியாத 1000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர். முக்கிய பகுதிகளில் தற்காலிக கண்காணிப்பு கமிராக்கள் அமைத்து வீழாக்களின் போக்கை கண்கானித்துகொண்டு இருந்தனர்.

கணபதி சிலைகள் வெள்ளிக்கிழமை  காலை 8 மணிவரை கரைப்பிற்காக வந்துகொண்டு இருந்தன.சிலைகள் கரைத்து முடிக்கபட்டதும் மாநகாராட்சி ஊழியர்களுடம் சேர்ந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் தன்னார்வதொண்டு நிறுவன ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து கடற்கரையை
தூய்மைபடுத்தும் பணியை மேற்கொண்டனர். இதன் காரணமாக மும்பையின் அனைத்து முக்கிய கடற்கரைபகுதிகள் அனைத்தும் மதியத்திற்கு தூய்மை படுத்தபட்டு விட்டது,

சுமார் இரண்டு டன் குப்பைகள் சேர்ந்து இருக்கிறது என்றும் இவைகள் தரம் பிரிக்கபட்டு ஏலத்தில் விடப்படும்      என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வருடம் கணபதி கழிவுகளில் இருந்து மாநகராட்சிக்கு சுமார் 13 லட்சம் வருமாணம் வந்தது குறிப்பிடதக்கது.

இளைஞர்கள் மரணம்
மும்பை அந்தேரியில் உள்ள வெர்சேவா கடற்கரையில் கணபதி கரைக்கசென்ற இளைஞர்களுள் 3 பேர்  அலைகளால் கடலுக்குள் இழுத்து செல்லபட்டு மரணமடைந்தனர். இதை தவிர மும்பையில் கணபதி விழாவின் போது வேறு எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

கணபதி சிலை கரைப்பு ஊர்வலத்தின் முழு காணொலி படங்கள் தமிழில் வர்ணனையுடன் கிடைக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக