7 செப்., 2009

குட்டி குட்டி தகவல் by Quick Gun sarvan

குட்டி குட்டி தகவல்
இன்றுடன் கூகுல் குரோம் ஆரம்பித்து 1 ஆகிறது, பிறந்நாள் வாழ்த்துக்கள் கூகுல் குரோம்
                       
.
                                                                 

பேஸ் புக் என்ற சோசியல் இணையதளத்தில் 65 மில்லியன் மொபைல் சந்தாதாரர்களாம், அடேங்கப்பா அப்படி பார்த்தால் அதன் பயணாளர்கள் எவ்வளவு பேர் - கூட்டி கழித்து பார்த்தால் தலைசுத்துகிறது. 
             


காலையில் எழுந்து கடன், காரியம்  எல்லாம் பார்த்து விட்டு அலுவலகம் கிளம்புவர்களா நீங்கள், அலுவலக பேருந்து உங்கள் வீட்டிற்கு அருகில் வந்து ஹாரன் அடித்தால் பரவாயில்லை, ஆனால் புறநகர் ரெயிலே சரணம் என்றால்
பாஸ் தீர்ந்துவிட்டது. வரிசையில் நின்று பாஸை புதுப்பிக்க வேண்டும். கூப்பன் இல்லை, நீண்ட வரிசையில் நிற்பவர்களின் சாபத்தை பெற்று கொண்டு கூப்பன் வாங்கவேண்டும்- கூப்பன் வாங்க வரிசையில் நிற்க தேவையில்லை-
ஸ்மார்ட் கார்டை வீட்டில் வைத்து விட்டு வந்துவிட்டீர்களா, அல்லது வங்கியில் லட்சம் இருக்கிறது, பர்ஸில் 13 கிரிடிட் கார்டு இருக்கு ஆனால் 7 ரூ டிக்கெட் வாங்க இல்லையா, டோண்ட் ஒரி மத்திய ரெயில்வே மொபைல் டிக்கேட் ஸ்கீம் ஆரம்பித்து இருக்குதுங்க, வீட்டில் இருந்து புறநகர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் இடைவெளியில் ஒரே ஒரு எஸ் எம் எஸ் அனுப்புங்கள், உங்களுக்கு ஒரு கம்பார்மேசன் எண் கிடைக்கும், நீங்கள் நேரக ஸ்டேசனில் இறங்கி  ரெகுலாராக செல்லும் ரெயிலில் ஏறி சென்று கொண்டே இருங்கள்.
நீங்கள் புறப்படும் இடம் மற்றும் நீங்கள் செல்லும் இடம் இரண்டையும் எழுதி BO <98708 88888> என்ற எண்ணிற்கு S M S செய்தால் போதும்
அடுத்த சில வினாடிகளில் உங்கள் மோபைலில் ஒரு கண்பார்ம் மெஸ்ஸேஸ் -அனுமதி தகவல்- வருங்கள் பிறகென்ன கவலைபடாமல் நீங்க தினமும் பயணம் செய்யும் ரெயிலில் போய்க்கொண்டே இருங்கள்.
தகவல் வர தாமதமாகிறதா கவலை வேண்டாம் நீங்கள் S M S அனுப்பி அதற்கான delivery message இருக்கும் இல்லையா அதைகூட பயண சீட்டு பரிசோதகரிடம் காண்பிக்கலாம்.
இனிமே கூட்டதில் நின்று, பயணிகளிடம் சாபம் வாங்கி, சில்லரை இல்லாமல் பயண சீட்டு வழங்குபவரிடம் திட்டு வாங்கி, நாம் எப்பொழுதும் போகும் ரெயிலை தவறவிட்டு அலுவலகம் தாமதமாக சென்று அதிகாரியிடம் திட்டு வாங்கி - போன்ற எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும்,

உங்கள் மொபலை மறந்து வைத்துவிட்டு போனால் அதுக்கு ரெயில்வே நிர்வாகம் ஒன்றும் செய்யாது   பேசாமல் 250R தண்டதொகை செலுத்த வேண்டியதுதான்.

-quick Gun sarvan-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக