6 செப்., 2009

ஸ்வன் புளு இரண்டாவது கட்ட தாக்குதலுக்கு தயார்

 
மும்பை, செப்.06
        ஸ்வன் புளு -பன்றி காய்ச்சல்- நோய் அநேகமாக தனது முதலாவது தாக்குதலை மும்பையில் நிறுத்த துவங்கிவிட்டது என்றே கூறலாம். மும்பை மாநகராட்சியின் தினசரி மருத்துவ அறிக்கையில் மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஸ்வன் புளுவினால் பாதிக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வீடு திரும்புவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

  இது குறித்து இன்று மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி ஜெயராஜ் தன்கரே கூறும்போது:-
நகரத்தில் முதலாவது கட்டமாக தாக்கிய ஸ்வன் புளுவை  அடக்குவதில் நகர சுதார நிர்வாகம் வெற்றி பெற்றுள்ளது. நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஸ்வைன்புளுவிற்கு தேவையான மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது. ஆனால் ஸ்வன் புளுவின் இரண்டாம் நிலை தாக்குதல் குறித்த பாதுகாப்பு பல மடங்கு திட்ட மிட்ட நிலையில் நகர சுகாதார நிர்வாக தயாராக உள்ளது. ஏனெனில் குளிர்காலத்தில் ஸ்வன் புளுவின் தாக்குதல் சிறிது கடுமையாக இருக்கும் என்று தெரியவருகிறது என ஜெயராஜ் தான்கர் கூறினார்.

          ஸ்வைன் புளு தாக்குதல் குறித்து மாநகராட்சி இணை      ஆனையர் மனீஷா மாஹிஸ்கர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நகர மருத்துவமனைகளில் மொத்தம் 629 H1N1 வைரஸ் தாக்குதல் கண்ட நோயாளிகள் கண்டறியபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மும்பையை சேர்ந்தவர்கள் மட்டும் மும்பையை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் மாநிலத்தின் பிறபகுதியில் இருப்பவர்கள். மாநில சுகாதாரத்துறை சிறப்புகுழு ஒன்று அமைத்துள்ளது. இந்த குழு நவிமும்பை, தானே, கோபோளி போன்ற மும்பையின் நுழைவு வாசல் நகரங்களில் சிறப்பு ஸ்ரீனிங் சென்டர்கள் அமைத்து கண்காணிக்கும் நகரத்தில் குளிர்காலத்தின் போது H1N1 தாக்குதல் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்வன்புளு வைரஸினால் பாதிக்கபட்ட629 நோயாளிகளி 453 பேர் 35 வயதிற்கும் மேற்பட்டோர்கள். 34 நோயாளிகள் 4 வயதிற்கு உட்பட்டவர்களாவார்கள்.  55 % நோய்தாக்குதல் உறுதிபடுத்தபவட்டவர்கள் அனைவரும்15 முதல் 35 உட்பட்டவர்கள், இந்த வயதுடையவர்களை ஸ்வன் புளு வைரஸ் அதிகமாக தாக்குகிறது. அதே போல் இவர்கள் விரைவில் குணமாகும் உடல் வாகும் கொண்டவர்களாக இருப்பதால் தற்போது நிலமை கட்டுக்குள் இருக்கிறது. மும்பை நாயர் மருத்துவமனையில் 10 சிறப்பு வார்டுகள் H1N1 வைரஸால் தாக்கபட்டவர்களுக்காக திறக்கபட்டுள்ளது. இதுவரை இந்த வார்டுகளில் மொத்தம் 11 நோயாளிகள் H1N1 வைரஸ் தாக்கு நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று நகர ஸ்வன் புளு தாக்குதல் குறித்தும் அதற்காக நகர சுகாதார நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் மனிஷா மாஹிஸ்கர் கூறினார்.

கல்யானை சேர்ந்த பெண் மரணம்:-
கல்யானை சேர்ந்த ஒரு பெண் ஸ்வன் புளுதாக்குதலில் பலியானார். பூனேவில் பணியாற்றி வந்த 22 வயதான பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் தொண்டைவலி காரணமாக கஸ்தூரிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் முற்றிலும் தாக்கிய நிலையில் அவரை நாயர் மருத்துவமனை சிறப்பு பிரிவிற்கு மாற்றினார்கள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இவரது மரணத்தை அடுத்து நகரில் ஸ்வன் புளு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12-ஐ தொட்டது.

3 கருத்துகள்: