10 செப்., 2009

இரண்டு லட்சம் போலி வாக்காளர்கள் , தேர்தல் ஆணையத்திடம்

      இரண்டு லட்சம் போலி வாக்காளர்கள் , தேர்தல் ஆணையத்திடம்
பாரதிய ஜனதா புகார்.
மும்பை,செப்.09
   மும்பை, தானே,நாசிக், மற்றும் பூனாவில் சுமார் 2 லட்சத்திற்கும்  மேறப்பட்ட போலி வாக்காளர்கள் உள்ளதாக மும்பை பாரதிய ஜனதாவினர் மராட்டிய மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளனர்.இன்று மும்பையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையகமான கமலாலயத்தில்  பாரதிய ஜனதாவின் முன்னாள் எம்.பி கிரிட் சோமையா,ராம் நாயக் ,ஆகியோர் பத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர், இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியினர் தேர்தலில் பல முறைகேடுகள் செய்திருப்பதாக கூறினார். முக்கியமாக வாக்காளர் பட்டியலில் மிகவும் அதிக அளவு முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் மும்பை, தானே, நாசிக் மற்றும் பூனா போன்ற நகரங்களில் இந்த முறை கேடுகள் அதிகம் நடந்து இருப்பதாகவும், இதன் காரணமாக சுமார் 2லட்சம் பேருக்கு அதிகமானோர் சட்டவிரோதமாக‌ போலி வாக்காளர்களாக சேர்க்கபட்டு இருக்கின்றனர்.இது குறித்து ராம் நாயக் நிருபர்களிடம் கூறியது போது,
சந்திகாந்த் தால்வி என்ற பூனா மாவட்டத்தில் உள்ள மால்வல் தாலுகாவை சேர்ந்தவர் பள்ளிசான்றிதழில் அவரது பிறந்த தேதி செப்,18, 1991 என இருக்கிறது. ஆனால் அவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது போன்று பல மோசடிகள் நடைபெற்று இருக்கிறது. இந்த மோசடிக்கு உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் காரணமாக இருக்கின்றனர். இது குறித்த தகுந்த சாட்சியங்களுடன் நாங்கள் தேர்தல் கமிசனில் புகார் செய்துள்ளோம் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக