7 செப்., 2009

காந்தி மை பாதர் 3 தேசிய அவார்டை வாங்கி குவித்தது.



சிறந்த நடிகர் பிரகாஷ் ராஜ், சிறந்த தமிழ் படம் காஞ்சிவரம்
மும்பை,செப்.07
  ஆந்திர முதல் மந்திரி ராஜசேகர ரெட்டியின் மறைவால் தாமதமாக தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.

         55-வது தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வான படங்களின் பெயர்கள் இன்று வெளியிடபட உள்ளது. இதில் அனில்கபூர் தயாரித்த‌  காந்தி மைபாதர், படம் சிறந்த படமாக தெரிவு செய்யபட்டு 3 விருதுகளை பெறவுள்ளது.
தமிழில் பிரகாஸ் ராஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யபட்டுள்ளார். சிறந்த படமாக காஞ்சிவரம் தேர்வாகி இருக்கிறது
        அநேகமாக இந்த அறிவிப்புகள் நாளை மாலைக்குள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. காந்தி மை பாதர் படத்திற்கு அனில் கபூர் தயாரி‌ப்பாளர், சிறந்த திரைக்கதை அமைப்பு பிரோஸ் அப்பாஸ் கான், சிறந்த துணை நடிகர் தர்ஷன் ஸரிவாலா என மூன்று பிரிவுகளிலும் விருதுகள் வழங்கபடும் என்று தெரிகிறது. அமிர்கானின் தாரே சமீன் பர்- நட்சத்திரம் மண்ணில்- கிங்கான் சாருக்கானின் சக்தே இந்தியா போன்ற படங்களுக்கு இடையே கடுமையான போட்டியை எதிர்கொண்ட காந்தி மை பாதர் இறுதியில் பந்தயத்தில் முன்னே வந்து விட்டது.

              இது குறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டபோது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார். அனில் கப்பூர் மும்பையில் இல்லை என்று பதில் வந்துவிட்டது.
தமிழில் காஞ்சீவரம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக பிரகாஸ் ராஜ் தேர்தெடுக்கபட்டுள்ளார் டைரக்டர் பிரியதர்ஷன்- வாழ்த்துக்கள் சார் டில்லியில் சந்திக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக