4 ஜூன், 2011

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்

மும்பை/புதுதில்லி

TPI-Mumbai

மும்பையில் இருந்து ஒரு அறிக்கை

ராம் தேவ் என்ற யோகா கற்றுத்தரும் ஆசிரியர்(குரு) கடந்த மாதம் மும்பையில் மராட்டி பத்திரிக்கையாளர் சங்க பத்திரிக்கை கூட்ட அரங்கில் வைத்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தியாவில் தற்போது பெருகி வரும் ஊழல் மற்றும் கோடிக்கணக்கில் நமது பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கபட்டு இருக்கிறது அதை மீட்டு கொண்டு வர வலியுறுத்தி தனது ஜூன் 4-ம் தேதி முதல் உண்ணாநிலைப்போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

அன்னாஹசாரேவிற்கு வந்த சோதனைகள்

மிகவும் சந்தோசமான செய்தி சமீபத்தில் தான் அன்னா ஹசாரேவின் உண்ணாநிலைப்போராட்டம் முடிவுக்கு வந்து அரசு அதை வெற்றிகரமாக சந்தித்து பயப்படுவது போல் பயந்து தற்போது அவரது காலையே வாரிவிட்டுகொண்டு இருக்கிறது.

கொஞ்சமா முதலில் அவர் நியமித்த குழுக்களில் ஒவ்வொருவர் மீது சிடி மூலமாக, ஊடகங்கள் வாயிலாக காங்கிரஸின் ஸ்டேட் வீரர்கள்(திக்விஜய் சிங், மனீஸ் தீவாரீ) மூலமாக பல கனைகள் தொடுத்து பார்த்தது. ஆனால் சிடி புனையப்பட்டு இருந்ததும், நில விவாகாரங்களில் சரியான தொகை கட்டி அதற்கான ரசீதுகளை காட்டி குற்றாச்சாட்டுகள் பொய்யானவை என உடனேயே தெரிய வந்தது.

கடிவாளம்

இதற்கும் அசராத அரசு மாநிலங்களுக்கு சர்வே விடுகிறேன் என்ற போர்வையில் லோக்பாலுக்கு கடிவாளம் போட்டு வைக்கிறது. எதிர்கட்சி ஆட்சி ஆளும் கட்சி ஆட்சி ஆதரவு ஆட்சி எதிர்ப்பு ஆட்சி என்ற இந்திய மாநிலங்களில் எல்லா மாநில அரசும் ஒரே தீர்வை தரும் என்பது குதிரை கொம்பாகும். அதனால் லோக்ப்பால் மீண்டும் ஒரு நீண்ட தூக்கத்திற்கு சென்றுவிடும். காங்கிரஸின் நோக்கமே இதுதான்.





பட்டினியாய் இருப்பதற்கு 12 கோடி செலவு

தற்போது ராம் தேவ் மீண்டும் உண்ணாவிரதம் இரண்டு மாததிற்கு முன்பே ராம் லீலா மைதானம் யோகா பயிற்சிக்கென இரண்டு மாதம் புக் செய்யபட்டது. அதற்கான தொகை சுமார் ஒரு நாளைக்கு 2 லட்சம் வரை வாடகை, கூரைகள் வாடகை சுமார் இரண்டு கோடியை தொடும், 1700 மின் விசிரிகள் வாடகை 18லட்சங்கள், குடிக்க குடிநீர் தொட்டிகள் அமைக்க செலவு 7 லட்சம், டில்லி ஹரியானா உபி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து மக்களை அழைத்து வர தனியார் பேருந்துகள் ஏற்பாடு செலவு சுமார் 3 கோடியை தாண்டும்,டில்லி மாநில எல்லைகளில் இருந்து ராம் லீலா மைதானத்திற்கு மக்களை அழைத்து வர மினி பஸ்கள், 24 மணி நேரமும் இயங்கிகொண்டு இருக்கும் இதற்கு என்று தனி செலவும் சுமார் 1 கோடி வரை, ராம் தேவ் மற்றும் பெரியவர்கள் அமரும் மேடை அமைக்க மட்டும் 23 லட்சம் செலவு,



இதர ஐசியூ, பணியாட்கள், மின்சாரம், எக்ஸ்ட்ரா வென சுமார் 12 கோடியை கொட்டி உண்ணாவிரதம் இருக்க சென்று இருக்கிறார்.

இதை கேட்ட நிருபர்களிடம் ராம் தேவ் கூறியது லட்சம் கோடிகளை கொண்டுவரும் சத்தியாகிரக போராட்டம் இதற்கு 12 கோடிகள் எல்லாம் யானைக்கு சொளப்பொரி என்று சொல்லி இருக்கிறார்.

பி ஜெ பி, ஆர் எஸ் எஸ், வி எஹ் பி போன்றவைகள் இவரின் பின்னால் தாராளமாக நிற்கின்றனர்.

இதுவும் காங்கிரஸின் வில்லிற்கு அம்பாக போய்விட்டது. காங்கிரஸ் நேற்றே அறிக்கை விட்டு விட்டது.காவிக்கூடாரங்களின் சதிச்செயலில் நாயகன் தான் பாபா ராம் தேவ் என்று திக்கி திக்கி அறிக்கை விட்டது திக் விஜய் சிங்கை விட்டு.





சாதாரண வகுப்பு பெட்டியில் பயணம் அன்று

அன்னா ஹசாரே ஃபிரோஸ்பூர் ஜனதா எக்ஸ்பிரஸில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் உண்ணாவிரதம் இருக்க டில்லி சென்றார். டில்லி ரெயில் நிலையத்தில் அழைக்க எந்த ஒரு கூட்டமும் வரவில்லை, அவரது ஆதரவாளர்கள் சிலர் அவ்வளவு தான்.

இன்று

ஆனால் ராம் தேவ் விமானத்தில் வருகிறார். அவரை சந்தித்துபேச அத்தனை அமைச்சர்களும் ஓடுகின்றனர்.

கருப்பு பணத்தை தேசிய சொத்தாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. ஆனால் ஆயிரம்,500 ரூ நோட்டுகள் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை ரிசர்வங்கி மற்றும் பொருளாதாரத்துறைகள் சம்பந்தபட்டது, அதில் அமைச்சரவையின் பங்கு அறிவுரை மட்டுமே அன்றி உத்தரவு போடமுடியாது. இருப்பினும் உண்ணாவிரத்தை துவங்கிவிட்டார்.



துவங்குவதற்கு முன் பாபா ராம் தேவ் சொன்னது “ எனது போராட்டம் அரசை எதிர்த்து அல்ல மக்கள் நலனுக்கு பங்கம் விளைக்கும் சக்திகளை எதிர்த்து” என்றார்.

என்ன நடக்கிறது என்று தெளிவாக புரியாமல் மக்கள் விழிக்கிறார்கள்.

பாபா ராம்தேவின் சொத்து 11000 கோடி என்கிறது. வடமாநில தேசிய ஆங்கில நாளிதழ்

பார்போம் என்னதான் நடக்கபோகிறது என்று,



ஆனல் ஒன்று மனைவி கோவித்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டார்களா கவலை வேண்டாம் சலோ டில்லி ரஹோ அன்ஸாசன்,(டில்லி புறப்படுங்கள், உண்ணாவிரதம் இருங்கள்)