4 ஜூன், 2011

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்

மும்பை/புதுதில்லி

TPI-Mumbai

மும்பையில் இருந்து ஒரு அறிக்கை

ராம் தேவ் என்ற யோகா கற்றுத்தரும் ஆசிரியர்(குரு) கடந்த மாதம் மும்பையில் மராட்டி பத்திரிக்கையாளர் சங்க பத்திரிக்கை கூட்ட அரங்கில் வைத்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தியாவில் தற்போது பெருகி வரும் ஊழல் மற்றும் கோடிக்கணக்கில் நமது பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கபட்டு இருக்கிறது அதை மீட்டு கொண்டு வர வலியுறுத்தி தனது ஜூன் 4-ம் தேதி முதல் உண்ணாநிலைப்போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

அன்னாஹசாரேவிற்கு வந்த சோதனைகள்

மிகவும் சந்தோசமான செய்தி சமீபத்தில் தான் அன்னா ஹசாரேவின் உண்ணாநிலைப்போராட்டம் முடிவுக்கு வந்து அரசு அதை வெற்றிகரமாக சந்தித்து பயப்படுவது போல் பயந்து தற்போது அவரது காலையே வாரிவிட்டுகொண்டு இருக்கிறது.

கொஞ்சமா முதலில் அவர் நியமித்த குழுக்களில் ஒவ்வொருவர் மீது சிடி மூலமாக, ஊடகங்கள் வாயிலாக காங்கிரஸின் ஸ்டேட் வீரர்கள்(திக்விஜய் சிங், மனீஸ் தீவாரீ) மூலமாக பல கனைகள் தொடுத்து பார்த்தது. ஆனால் சிடி புனையப்பட்டு இருந்ததும், நில விவாகாரங்களில் சரியான தொகை கட்டி அதற்கான ரசீதுகளை காட்டி குற்றாச்சாட்டுகள் பொய்யானவை என உடனேயே தெரிய வந்தது.

கடிவாளம்

இதற்கும் அசராத அரசு மாநிலங்களுக்கு சர்வே விடுகிறேன் என்ற போர்வையில் லோக்பாலுக்கு கடிவாளம் போட்டு வைக்கிறது. எதிர்கட்சி ஆட்சி ஆளும் கட்சி ஆட்சி ஆதரவு ஆட்சி எதிர்ப்பு ஆட்சி என்ற இந்திய மாநிலங்களில் எல்லா மாநில அரசும் ஒரே தீர்வை தரும் என்பது குதிரை கொம்பாகும். அதனால் லோக்ப்பால் மீண்டும் ஒரு நீண்ட தூக்கத்திற்கு சென்றுவிடும். காங்கிரஸின் நோக்கமே இதுதான்.





பட்டினியாய் இருப்பதற்கு 12 கோடி செலவு

தற்போது ராம் தேவ் மீண்டும் உண்ணாவிரதம் இரண்டு மாததிற்கு முன்பே ராம் லீலா மைதானம் யோகா பயிற்சிக்கென இரண்டு மாதம் புக் செய்யபட்டது. அதற்கான தொகை சுமார் ஒரு நாளைக்கு 2 லட்சம் வரை வாடகை, கூரைகள் வாடகை சுமார் இரண்டு கோடியை தொடும், 1700 மின் விசிரிகள் வாடகை 18லட்சங்கள், குடிக்க குடிநீர் தொட்டிகள் அமைக்க செலவு 7 லட்சம், டில்லி ஹரியானா உபி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து மக்களை அழைத்து வர தனியார் பேருந்துகள் ஏற்பாடு செலவு சுமார் 3 கோடியை தாண்டும்,டில்லி மாநில எல்லைகளில் இருந்து ராம் லீலா மைதானத்திற்கு மக்களை அழைத்து வர மினி பஸ்கள், 24 மணி நேரமும் இயங்கிகொண்டு இருக்கும் இதற்கு என்று தனி செலவும் சுமார் 1 கோடி வரை, ராம் தேவ் மற்றும் பெரியவர்கள் அமரும் மேடை அமைக்க மட்டும் 23 லட்சம் செலவு,



இதர ஐசியூ, பணியாட்கள், மின்சாரம், எக்ஸ்ட்ரா வென சுமார் 12 கோடியை கொட்டி உண்ணாவிரதம் இருக்க சென்று இருக்கிறார்.

இதை கேட்ட நிருபர்களிடம் ராம் தேவ் கூறியது லட்சம் கோடிகளை கொண்டுவரும் சத்தியாகிரக போராட்டம் இதற்கு 12 கோடிகள் எல்லாம் யானைக்கு சொளப்பொரி என்று சொல்லி இருக்கிறார்.

பி ஜெ பி, ஆர் எஸ் எஸ், வி எஹ் பி போன்றவைகள் இவரின் பின்னால் தாராளமாக நிற்கின்றனர்.

இதுவும் காங்கிரஸின் வில்லிற்கு அம்பாக போய்விட்டது. காங்கிரஸ் நேற்றே அறிக்கை விட்டு விட்டது.காவிக்கூடாரங்களின் சதிச்செயலில் நாயகன் தான் பாபா ராம் தேவ் என்று திக்கி திக்கி அறிக்கை விட்டது திக் விஜய் சிங்கை விட்டு.





சாதாரண வகுப்பு பெட்டியில் பயணம் அன்று

அன்னா ஹசாரே ஃபிரோஸ்பூர் ஜனதா எக்ஸ்பிரஸில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் உண்ணாவிரதம் இருக்க டில்லி சென்றார். டில்லி ரெயில் நிலையத்தில் அழைக்க எந்த ஒரு கூட்டமும் வரவில்லை, அவரது ஆதரவாளர்கள் சிலர் அவ்வளவு தான்.

இன்று

ஆனால் ராம் தேவ் விமானத்தில் வருகிறார். அவரை சந்தித்துபேச அத்தனை அமைச்சர்களும் ஓடுகின்றனர்.

கருப்பு பணத்தை தேசிய சொத்தாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. ஆனால் ஆயிரம்,500 ரூ நோட்டுகள் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை ரிசர்வங்கி மற்றும் பொருளாதாரத்துறைகள் சம்பந்தபட்டது, அதில் அமைச்சரவையின் பங்கு அறிவுரை மட்டுமே அன்றி உத்தரவு போடமுடியாது. இருப்பினும் உண்ணாவிரத்தை துவங்கிவிட்டார்.



துவங்குவதற்கு முன் பாபா ராம் தேவ் சொன்னது “ எனது போராட்டம் அரசை எதிர்த்து அல்ல மக்கள் நலனுக்கு பங்கம் விளைக்கும் சக்திகளை எதிர்த்து” என்றார்.

என்ன நடக்கிறது என்று தெளிவாக புரியாமல் மக்கள் விழிக்கிறார்கள்.

பாபா ராம்தேவின் சொத்து 11000 கோடி என்கிறது. வடமாநில தேசிய ஆங்கில நாளிதழ்

பார்போம் என்னதான் நடக்கபோகிறது என்று,



ஆனல் ஒன்று மனைவி கோவித்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டார்களா கவலை வேண்டாம் சலோ டில்லி ரஹோ அன்ஸாசன்,(டில்லி புறப்படுங்கள், உண்ணாவிரதம் இருங்கள்)




21 மே, 2011

ஹுயுமன் எரர் சிதம்பரம்(Internal security issue )





       இந்தியா ஆளும் அரசு எப்போதும் இல்லாத அளவில் தற்போது தன்னுடைய ஆளுமை திறனால், மிகப்பெரிய பாதுகாப்பு குறைப்பாடுகளை உருவாக்கி விட்டது. இதற்கு தற்போதைய உள்துறை அமைச்சர் என்ன சாக்கு போக்கு கூறினாலும் நாட்டின் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் வல்லுனர்கள், தங்களது கவலைகளை குறித்துள்ளனர்.

      2008-12-22 மும்பை தாக்குதல் முடிந்து காயங்கள் ஆறாத சமயம் புதிதாக பொருப்பேற்ற உள்த்துறை அமைச்சர் மாராட்டிய காவல்த்துறை தலைமை அலுவலகம் கொலாபா(மும்பை) பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சிதம்பரம் கூறியதாவது 
    ”யாரும் கவலைப்படவேண்டாம் உள்துறையின் கீழ் உள்ள உளவுத்துறையில் சில தவறுகள்(எரர்) ஏற்பட்டதை ஒப்புக்கொள்கிறேன். இனிமேல் இந்த தவறுகள் நடக்காது.நாட்டின் பாதுகாப்பில் இனி எந்த ஒரு (லூப் ஹோல்) ஓட்டையும் இல்லாமல் இருப்பதற்கு உள்த்துறை முழுமையாக நவீனபடுத்தப்பட்டு பணிகள் ஒரு டெட்லைன் கொடுக்கபட்டு முடிக்கப்படும்”

      சில இரண்டு வருடங்கள் கடந்து விட்டது.நீட்ட சர்மா என் டி டி வீயின் உள்த்துறை அமைச்சக செய்தியாளர். ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் கூறியதாவது. எல்லாபணிகளுக்கும் ஒரு டெட் லைன் கொடுக்கபட்டு அது அமைச்சரின் நேரடிபார்வைக்கு வைக்கபட்டு தாமதமானல் அது குறித்து முழு விசாரனை நடத்தி எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா....

   மும்பை தாக்குதல் குறித்தும், இந்தியாவில் ஏற்பட்ட தீவிரவாத செயல்களுக்கு பொருப்பானவர்கள் குறித்தும் அவர்கள் பாகிஸ்தானில் இருப்பதாக (கருதப்பட்டு) அவர்களுக்கு 50 நபர்களின் பெயர்கள் கொண்ட ஒரு பட்டியல் அளிக்கபட்டது. பாகிஸ்தான் 1993 மும்பை தாக்குதலுக்கு பிறகு அங்கு தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படும் மும்பை நிழல் உலக சக்கரவர்த்தி தாவூத் இப்ராஹீம் கஸ்கரை இன்றுவரை பாகிஸ்தான் மறுத்து வந்து இருக்கிறது. 

     இந்த மறுப்பிற்கு உறுதிசெய்யும் விதமாக பாகிஸ்தான் அரசு எதுவும் செய்யவில்லை. நமது இந்திய அரசே அருமையான வேலை பார்த்து இருக்கிறது.  மோஸ்ட் வாண்டேட் பட்டியலில் இருக்கும் 50 பேர்களில் வாஸுல் கமர் கான், ரசீத் கான் மற்றும் சுரேந்திர குமார். இதில் வாஸூல் கமர் கான் மும்பை தொடர்வண்டி குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தபட்டு விசாரனைக்கு பிறகு தற்போது ஜாமீனில் மும்பை தானே வாக்லே எஸ்டேட் பகுதியில் உள்ள சால் எனப்படும் தொடர் வீட்டு குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டு ஜன்னல்களுக்கு கிரில் தயாரித்து தரும் நிறுவனத்தை இவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து ஆரம்பத்தில் இருந்தே நடத்திவருக்கிறார். அதாவது சமூகத்தில் மிகவும் பரிச்சயமான முகமாக இருந்து வருகிறார். 

     இவர் பெயர் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இருப்பதை கண்டு சில மீடியாக்கள் உண்மையை வெளிக்கொண்டு வர இந்திய உள்நாட்டு பாதுகாப்பை நவீன வசதிகளுடன் கையாண்டு வரும் ப சிதம்பரம் சென்ற வாரம் இவ்வாறு கூறினார். இதே பெயர் கொண்ட நபர்கள் யாராவது இருக்கலாம், (ஸ்பெல்லிங் எரர்) என்றார். அது இல்லை இதே வாஸுல் கான் பெயர் தான் லிஸ்டில் உள்ளது என்றதும், 
      மும்பை போலிஸின் மீது அலேக்காக பழியை தூக்கிபோட்டார். அதாவது மிஸ் கம்யூனிகேசன்(கம்யூனிகேசன் எரர்???) இந்த பிரச்சனை முடிந்து இரண்டு நாள் கூட ஆகவில்லை, மோஸ்ட் வாண்டேட் லிஸ்டில் உள்ள ரஸீத் கான் என்ற குற்றவாளி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருக்கிறார். சுரேந்தர குமார் ஜார்கண்ட் மாநில போலீசாரிடம் பிடிபட்டு தற்போது சிறையில் இருக்கிறார். இப்போழுது எந்த போலீஸின் மீது சிதம்பரத்திற்கு பழியை போட முடியவில்லை, சி பி ஐ யில் உள்ள ஒரு காவலதிகாரி சஸ்பெண்டு செய்யபட்டார். இன்று(21-05-2011) ஐ பி என் செய்தி தொலைகாட்சிக்கு பேட்டியளித்த சிதம்பரம் மீண்டும் எரர் என்று தான் பதில் அளிக்கிறார். 

     அவருக்கே உரிய பாணியில் சென்ஸெக்ஸ் சமாச்சாரம் போன்று அந்த கன்பேனியில் இருந்து இந்த கம்பேனி இந்த கம்பேனியில் அந்த கன்பேனி இடையில் இடைவெளி இடைவெளியில் பிடிபட்ட விடுதலைசெய்யபட்ட என்று எதேதே அழகான ஆங்கிலத்தில் கூறுகிறார். ஆனால்! இது பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லை, ஒரு நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விடயம். மும்பையில் உயிர்கள் துடித்து கொண்டு இருக்கும் போது நேர்நிகழ்வாக(லைவ்) டீவிக்களில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது. எத்தனை கோடிக்காணக்கான இதயங்களில் அந்த பயங்கர நினைவு இன்றும் அழியவில்லை. அந்த செயல்களை செய்தவர்கள் தண்டனைக்கு உட்படும் வரை அந்த இதயங்களுக்கு அமைதி திரும்பாது ஆனால் அதை செயல் படுத்த வேண்டிய அமைச்சரோ எரர் கூ(ஃப்) அப் என்று சர்வசாதாரனமாக கூறிக்கொண்டு இருக்கிறார்.
     எதிர்கட்சிகள் இது குறித்து அறிக்கை விட்டார். என்றோ நடந்த கந்தகார் நிகழ்வை சொல்லி இரண்டுக்கும் சமன்பாடு தேடுகிறார். 

  (ஒசாமா கொலை செய்யபட்ட(அது உறுதி செய்யபட்டபிறகு) 28 நிமிடங்களில் ஒசாமா பற்றிய அனைத்து அறிக்கைகளையும் அமேரிக்கா தனது இனையதளத்தில் இருந்து எடுத்துவிட்டது. அங்கு இவர் அழிக்கபட்டு விட்டான் என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு இருந்தது) ஹி வாஸ் டெட்மினேட்டேட்
 இது குறித்து மும்பையில் ஒரு அதிகாரியிடம் கேட்ட போது அது அமேரிக்கா இது இந்தியா என்றார்.
     நாம் ஒரு ஆபத்தான கட்டத்தில் இருந்துகொண்டு இருக்கிறோம் என்று மட்டும் உறுதியாகிறது. 
  ஒஸாமாவின் மரத்திற்கு பழிவாங்க துடித்துகொண்டு இருக்கிறது.  அல் கொய்தா, அமெரிக்காவை அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது, அவர்களின் பார்வை இந்தியாவை நோக்கி திரும்பவும் வாய்ப்பு உள்ளது.
 நன்றி, என் டி டிவி ரவீஸ், நீட்டா சர்மா, 
     

20 மே, 2011

தமிழனுக்கு பெருமை?



தமிழனுக்கு பெருமை?


ஊழல் செய்வதில் உலகில் இரண்டாம் இடத்தை வெற்றிகரமாக பிடித்துள்ளார். நமது முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர்\மந்திரி ராசா ஆண்டிமுத்து, இது டைம்ஸ்(USA) தெரிவித்து இருக்கிறது.

ராசா ஆண்டி முத்துவை பற்றி விக்கிபீடியா

Andimuthu Raja

Born 10 May 1963 (1963-05-10) (age 48)

Perambalur, Tamil Nadu, India

Penalty Case for 2G spectrum scam ongoing

Status Incarcerated at Tihar Jail

Spouse M.A. Parameswari

Children Mayuri Raja

இப்படி போட்டு இருக்கிறது.

புனித ஜார்ஜ் உயர் நிலைப்பள்ளி,பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரி, மற்றும் மதுரை சட்டகல்லூரி இவைகள் எல்லாம் இவருக்கு பாடம் சொல்லி கொடுத்த கல்வி கூடங்கள்.

ஆனால் இவர் அரசியல் பாடம் படித்தது கலைஞரின் தி மு க பாசறை 2008-ல் இவர் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை காண சகிக்காமல் த மு க தலைவரிடம் தனது பதவி விலகல் கடித்தை கொடுத்தார்.(கொடுக்கவேண்டிய இடம் வேறு) அன்று சரியான இடத்தில் கொடுத்திருந்தால், விக்கி லீக் இப்படி

இருப்பிடம் தீகார் ஜெயில் என்று எழுதி இருக்காது.



• அக்டோபர் 2010 நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்

(இடையே கலைஞர் அவர் தலித் என்பதால் ஆரிய தாக்குதல் என்று சொன்னார்.)



• நவம்பர்- நான் நிறுபிப்பேன் என்மீது எதிர் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. ராஜினாமா செய்தார்



• டிசம்பர் -சி பி ஐ இடம் எல்லாம் விளக்கமாக சொல்லி விட்டேன். நான் குற்றவாளி அல்ல



• ஜனவரி- சி பி ஐ மீண்டும் விசாரனைக்கு அழைத்தது, ராஜாவின் செயலாலர்கள், இதர அதிகாரிகள் உள்ளே செல்ல ராஜா கைது உறுதியாகி விட்டது.



கலைஞர் உள்ளூர ஏதோ செய்து பார்த்தார். எதிர்கட்சிகளின் தொந்தரவு அதிகம் அதனால் பேருக்கு உள்ளே அனுப்பி ஜாமீனில் வெளியெ வந்துவிடலாம் என்று மேலிட புறா தகவல் அனுப்ப பிப்ரவரியில் கைது,



வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேற்பார்வையில் சென்றது. கதை கந்தலாகி போனது.

(பொதுவாக டில்லி போன்ற வடமாநிலங்களில் வெயில்காலம் என்பது உச்சி வெயிலில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நிற்பதற்கு சமம். தென் மாநிலங்களாவது கடற்காற்றால் கொஞ்சம் குளிர்ச்சியுடன் இருக்கும், டில்லியோ இரக்கமில்லாமல் சகட்டு மேனிக்கு வெயிலை அள்ளித்தரும்) பாவம் ஏசியிலேயே இருந்து பழக்கபட்டவர்.

வெளியில் வந்த பிறகு தனது சிறை அனுபவ புத்தகத்தில் கண்டிப்பாக ஒரு உள்தலைப்பு திகார் சிறையில் வேட்கையினால் கிடைத்த அனுபவம் பற்றி எழுதுவார்.

பணம் பணம் பணம்

மத்திய ரெயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியது” மது போதை விட பயங்கரமானது மாது போதை, சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் அந்த போதை கண்ணை மறைத்து விடும், மாது போதையை விட பயங்கரமானது பணப்போதை, ஊழல் புரிபவர்களுக்கு நன்கு தெரியும் இதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று இருந்தாலும் அந்த போதை சிந்தையை செயல்படவிடாமல் செய்துவிடும்,







நாளை ஹுயுமன் எரர் சி த ம் ப்ரம்