5 செப்., 2009

இறை நம்பிக்கை பலரின் உயிரை காப்பாற்றியது.

 
சனி,செப்.05
மும்பையில் நேற்று நடைபெற்ற நிலச்சரிவின் போது 12 பேர் பலியானதும், 15 மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் முதலுதவிக்கு பிறகு வீடு திரும்பினர். 
இந்த சம்பவம் குறித்து நமது செய்தியாளர் அந்த பகுதியில் உள்ள ஆரோக்கிய சாமி என்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழர் ஒருவரிடம் கேட்டபோது " நான் தவனை முறையில் பொருட்களை கொடுத்து வருகிறேன். நேற்று கணபதி விசர்ஜன்-கரைப்பு நாள் ஊர்வலம்- அதனால் வீட்டில் ஓய்வெடுத்து கொண்டு இருந்தேன். எனக்கு திருமணமாகி  குழந்தைகள் இருக்கின்றன. குழந்தைகள் அனைவரும் கணபதி ஊர்வலம் பார்க்கவேண்டும் என்று அடம் பிடித்தன. மழைவேறு பெய்து கொண்டு இருப்பதால் நான் முதலில் மறுத்து விட்டேன். பிறகு எனது மனைவி குழந்தைகளை அழைத்து கொண்டு கணபதி பார்க்க சென்று விட்டார். நானும் சாக்கி நாக்க ரோட்டில் நின்று கொண்டு கணபதி ஊர்வலத்தை பார்வையிட்டு கொண்டு இருந்தோம். அப்போது எங்களது வீட்டு பகுதியில் பாறைகள் உருண்டு விழுவதை பார்த்தேன்.
 கணபதி தான் எங்களை காப்பாற்றினார் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
  அதே போல் அந்த பகுதியில் வாழும் அரீஸ் என்பவர் கூறும் போது ரம்ஜான் நோன்பு முடிந்து நமாஸ¤க்கு சென்று விட்டோம் இந்த நேரத்தில் எங்களின் வீடுகளிம் பாறைகள் விழுந்து நாசம் செய்துவிட்டது என்றார்.
இந்த சம்பவம் குறித்து " அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா தத்-காங்கிரஸ்- கூறியதாவது:- மலைஅடிவாரங்களில் இது போன்ற ஆபத்தான இடங்களில் தடுப்பு சுவர்கள் கட்டப்படும் என்றும்,விட்டு இழந்ததவர்களுக்கு மஹாடா விடன் இருந்து மாற்று வீடுகளுக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.
இந்த பகுதியில் மக்கள் சுமார் 30 வருடங்களாக குடிசைகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக