23 செப்., 2009

தேர்தல் வந்ததால் ஒற்றுமை வரும்



மராட்டிய மாநில தேர்தல் நேற்றுவரை பழமை பேசிக்கொண்டு காவிக்கொடியின் கீழ் அடம்பிடித்து அமர்ந்திருந்த பல கட்சிகளை தேர்தல் என்னும் மந்திர வார்த்தை பச்சைகொடியையும் பிடிக்கவைத்துள்ளது.

மும்பை நகரமெங்கும் ஈத் முபாரக், என்ற வாழ்த்து பேனர்கள் பிரம்மாண்ட அளவில் மும்ரா, பாந்திரா, முகமது அலிசாலை, மாகிம், மிரா சாலை என நகர் மற்றும் புறநகரங்களில் அதிகமாக இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிகளில்
எங்கு நோக்கினும் நைலான் பேனர்கள் காணப்படுகிறது.

இஸ்லாமியர்கள் விடயத்தில் மேம்போக்காக வாழ்த்து சொன்ன காவி கட்சிகள் இந்த முறை முழுமையாக இறங்கி வாழ்த்துக்கள் கூறிவருகிறது. இந்த தேர்தல் திரிசங்கு நிலைக்கு கொண்டு சென்றுவிடுமே என்ற நிலை இருந்து வருகிறது. இது நாள் வரை காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை கொண்டு செல்லும் பாலமாக இருந்த சமாஸ்வாடி கட்சி இந்த வருடம் மூன்றாம் கூட்டனி என ஒன்றை அமைத்து தனியாய் போய்விட காங்கிரஸ் கலக்கத்தில் இருக்கிறது. காவிக்கூட்டனியில் ராஜ் தாக்கரே பெரும் தலைவலியாக இருக்கிறார். காவிக்கூட்டனிக்கு இப்போது காங்கிரஸ்+தே வா க போட்டியாக தெரியவில்லை, ஆனால் புதிதாக ஆரம்பிக்க பட்ட நவ நிர்மான் கட்சி பெரும் தடையாக தெரிகிறது, ராஜ் மி மராட்டி பேசினாலும் தனது கொடியில் தலித்துகள், இஸ்லாமியர்கள், போன்றவர்களை கவர்ந்து இழுக்கும் நீல மற்றும் பச்சை வர்ணங்களை சேர்த்துவிட்டார்.

 இதனால் நடுநிலையுடன் இருக்கும் கொஞ்ச நஞ்ச சிறுபாண்மை இனத்தவரும் நவ நிர்மான் கட்சியின் ரெயிலுக்கு ஓட்டு போடும் சூழல் வருமா என்ற கவலை ஏற்பட்டது. மேற்கூறிய காரனங்களை முன்னிட்டு சிறுபாண்மையினர், தலித்துகளில் ஓட்டுகளை பெற முழுமையாக களத்தில் இறங்கிய காவிகள் நகரம் எங்கும் ஈத் முபாரக் கூற ஆரம்பித்து விட்டார்கள்.

தேர்தல் வரை பார்க்கலாம் மக்கள் தீர்ப்பு யார் பக்கம் என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக