11 செப்., 2009

மொழி மாற்றத்தில் பிரச்சனை, மும்பை தீவிரவாத தாக்குதல் முடிவுக்கு வராத மெகா தொடர்.

  
மும்பை, செப்.11
மும்பை தாக்குதல் நடந்து ஒருவருடம் சோக தின கொண்டாட போகும் நாளும் வந்து விட்டது-இன்று 11/09- அமேரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.

           வழக்கு விசாரனை இன்னும் இழுத்து கொண்டு தான் போய்க்கொண்டு இருக்கிறதும் முக்கியமாக ஒவ்வொரு விசாரனையின் போது நடப்பது எல்லாம், வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார்களா என்று புரியாத புதிராக இருக்கிறது.

           நேற்று மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரிக்கும் நீதிமன்றத்தில் ,மும்பை சி.எஸ்.டி, மற்றும் தாஜ் ஓட்டலில்  மீட்க்கபட்ட ஆர்.டி.எக்ஸில் உருதுவில் எழுதபட்ட சில காகிதங்கள் ஒட்ட பட்டு இருந்தது. இது என்னவென்று கண்டறிய மும்பைக்கு அருகில் உள்ள சிறிய நகரமான பீவண்டியில் இருந்து ஒரு மொழிபெயர்ப்பாளரை அழைத்து வந்தனர். அவரும் கடந்த  மாதமாக 5 வார்த்தைகளை ஆராய்ந்து -ஆம் அந்த சீட்டில் ஐந்து வார்த்தைகள் எழுதி இருந்தது- அந்த ஐந்தில் இரண்டு அரபி வார்த்தை என்ற மிகப்பெரிய ரகசியத்தை நெற்று கோர்ட்டில் சொல்லி இருக்கிறார்,
                    நாட்டின் மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இன்று தொழில் நுட்பங்கள் எவ்வளவோ பெருகி விட்டது. அந்த ஐந்து வார்த்தைகள் அடங்கிய சீட்டை எங்கோ உள்ள பீவண்டியில் இருந்து ஒருவரை அழைத்து வந்து மொழிமாற்ற சொல்லி இருப்பதும் அதுவும் 7 மாதங்களுக்கு பிறகு அவர் அதில் இரண்டு வார்த்தை அரபி அது எனக்கு தெரியாது என்று சொல்வது நகைப்பிற்கு இடமாக இருக்கிறது. மும்பை பல்கலைகழகத்தில் பல முனைவர்கள், பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள். இல்லை என்றால் அதிகாரபூர்வ முறையில் அரபி நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இந்த காகித்ததை அனுப்பி இருந்தால் எப்போதோ என்ன எழுதி இருக்கிறது என்று தெரிந்திருக்கும்.

                கனம் நீதிபதி அவர்கள் இந்த விசாரனையின் போது தனது கோபத்தை நேற்று வெளிப்படுத்தினார். அதாவது ஏன் பீவண்டியில் இருந்து ஒரு மொழிபெயர்ப்பாளரை கொண்டு வரவேண்டும், மும்பையில் அரபி, உருது தெரிந்தவர்கள் யாருமே தெரியாதா, என்று கேட்டுள்ளார்.

                அப்படி என்னதான் அந்த சீட்டில் எழுதி இருக்கிறது என்று பார்த்த போது அதன் அரபி உச்சரிப்பு அமாரோ அஸ்காரி அதாவது தவறுக்கு தண்டனை வழங்கும் இறைத்தூதர்.

                 வழக்கை விசாரித்து வருவோருக்கு இந்த உண்மை தெரிந்து இருக்கவேண்டும் போல அதுதான் மிகவும் மிதமான போக்கில் இந்த விசயத்தை கையாளுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக