5 செப்., 2009

ஒரே நேரத்தில் ஐந்து குழந்தை இந்தியாவில் முதல் சாதனை பெண்.


மும்பை,செப்.05
மும்பை புறநகர் மீரா ரோட்டை சேர்ந்தவர் சபீரா கான் இவர் இரண்டு மாத கர்ப்பவதியாக இருக்கும் போது மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது இவருக்கு சந்தோசம் தரும் அதிர்ச்சி செய்தி ஒன்று தெரிவிக்க பட்டது. அவரது வயிற்றில் இரட்டை , இல்லை மூன்று இல்லை ஐந்து குழந்தைகள் வளர்கிறது என்ற செய்திதான்.
சபீரா என்ன ஆனால் அத்தனை குழந்தைகளையும் பெற்று கொள்வதாக உறுதியுடன் இருந்தார். இந்த நிலையில் இன்று இரவு சபீராவிற்கு பிரசவ வேதனை எடுத்தது.  மும்பை அந்தேரியில் உள்ள தீருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சபீரா  நிமிட இடைவெளையில் 5குழந்தைகளையும் பெற்று சாதனை படைத்து விட்டார்.
இது குறித்து அவருக்கு பிரசவம் பார்த்த சுஜித்தரா பண்டிட் கூறியதாவது:-சபீரா எங்களிடம் பரிசோதனைக்காக வந்த போதே நாங்கள் அவரது வயிற்றில் 5 குழந்தைகள் வளர்வது பற்றி சொல்லிவிட்டோம்.மேலும் பிரசவகாலம் நெருங்க நெருங்க நாங்கள் முழுத்தயாராக மாறி இருந்தோம் ஏன் என்றால் இந்தியாவில் இது முதல் கேஸ் குழந்தைகளும் நல்ல படியாக பிறக்கவேண்டும் என்பது தான் எங்களுடைய முழு நோக்கம், குழந்தைகளின் அன்னைக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது. இதற்காக நாங்கள் மாததிற்கு  முறை மாதிரி பிரசவ அறுவை சிகிச்சை மற்றும் சுக பிரசவ முறைகளை பற்றி பயிற்சி எடுத்து கொண்டோம். அனைத்து விதமான சாதனங்களும் தயாராக வைக்கபட்டது. 
இந்த நிலையில் கடந்த வாரம் சபீரா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தவிர்க்கமுடியாத சில காரனங்களுக்காக அவருக்கு சிசேரியன் செய்ய வேண்டியதாகி விட்டது.  நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழு, 12 செவிலியர்கள், மயக்க நிபுனர்கள் என அனைவரும் தயாராக இருந்தோம். பிரசவ வேதனை துவங்கியதை அடுத்து குழந்தைகள் அனைத்து பிறக்க ஆரம்பித்தன. 3 நிமிட இடைவேளைக்கு பிறகு குழந்தைகள் அனைத்தும் பிறந்து விட்டது. அனைத்தும் ஆண் குழந்தைகள் 700முதல் 950 கிராம் வரை எடைகொண்ட
குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்தது அழத்துவங்கியது. அதே போல் மூன்றாவது குழந்தையும் அழத்துவங்கியது. சில நிமிட இடைவேளைக்கு பிறகு ஐந்து குழந்தைகளும் தொடர்ந்து அழ ஆரம்பித்துவிட்டது. 5 குழந்தைகளும் அன்னையும் நலமாக இருக்கிறார்கள்.
     ஒரே தொப்புள் கொடி மூலம் இந்த ஐந்து குழந்தைகளும்  மாதமாக கர்ப்பையில் வளர்ந்திருக்கிறது. இந்தியாவிலேயே முதல் முதலாக ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தை பிறந்திருக்கிறது என்றார்.
குழந்தையில் தந்தை உபைத் கான் கார்மெண்ட் தொழில் நடத்தி வருகிறார். தனக்கு 5 குழந்தைகள் பிறந்தது குறித்து அளவற்ற சந்தோசத்தில் இருக்கும் இவர் ஏற்கனவே 11 மாதத்தில் ஒரு ஆண்குழந்தை இருக்கிறது. இவர்கள் அனைவரும் ஆண் குழந்தைகளாக பிறந்திருக்கின்றனர் இதில் ஒன்றாவது பெண் குழந்தையாக பிறந்திருந்தால் எங்களுக்கு இரட்டை சந்தோசமாக இருந்திருக்கும். எங்கள் குடும்பத்தில் இதுவரை பெண்குழந்தைகள் பிறந்ததே இல்லை, அதே போல் இப்போது இரண்டு வருடங்களுக்குள் எங்களுக்கு 6 ஆண் குழந்தைகள் பிறந்து இருக்கின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக