7 செப்., 2009

புறநகர் ரெயிலில் மொபைல் நம்பர் எழுதி வைத்து விளம்பரம் தெடும் பார்ட்டிகள் உஷார்

 புறநகர் ரெயிலில் மொபைல் நம்பர் எழுதி வைத்து விளம்பரம் தெடும் பார்ட்டிகள் உஷார்
மும்பை,செப்.07
   மும்பை புறநகர் ரெயிலில் எங்கு பார்த்தாலும் சிறியது முதல் பெரியது வரையினாலான விளம்பரங்கள், லோன் வேண்டுமா , வீட்டில் இருந்தே ஆயிரக்கணக்கணக்கில் சம்பாதியுங்கள், வெயிட்டை குறைக்கவேண்டுமா எங்களிடம் வாருங்க, சினிமா மாடலிங் முதல் குடும்ப பெண்கள் வரை-ராஸ்கல்ஸ்- நட்பு கொள்ள வேண்டுமா, என விதவிதமாக சிறியது முதல் பெரியது வரையினாலான ஸிடிக்கர்கள், பிரிண்ட் ஒவுட் பேப்பர் ஒட்டவைப்புகள் என இத்தனை நாட்களாக நடந்து வந்தது.
ஒரு சிலர் ஸ்கெட்ச் பேனாவில் எண்களை எழுதி தொடர்புகொள்ளுங்கள் லகரங்களை சம்பாதியுங்கள் என்று எழுதி வைத்திருப்பார்கள்,
குர்லாவை சேர்ந்த இந்த இலவசவிளம்பர பார்ட்டி ஒட்டிவைத்திருந்த எண்ணிற்கு ஒரு போன் கால் வந்தது. இலவச விளம்பர பார்ட்டியும் எதிர்தரப்பில் யார் என்று தெரியாமல், லோன் வேண்டுமா, பிரெண்ட்ஷிப் வேண்டுமா, வேலை வேண்டுமா, ஏன்ன வேண்டும் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்று பதில் அளிக்க எதிரில் உள்ள குரல் அப்படியா எங்கு வரவேண்டும் என்று கேட்க குர்லாவில் உள்ள ஒரு தின வாடகை கடை அலுவலகத்து முகவரியை சொல்ல  சில நிமிடங்களில் அங்கு ரெயில்வே காவலர்கள் போய் நின்றார்கள். முதலில் புரியாமல் விழித்த இலவச விளம்பர பார்ட்டிக்கு ரெயில்வே காவலர்கள் விளங்க வைத்தார்கள். நாங்க தான் போன் செய்தோம், ரெயில் வண்டி என்ன உங்க அப்பன் சொத்தா இஸ்டதுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டுகிறாய்
புறநகர் ரெயிலில் விளம்பர படுத்த வேண்டும் என்றால் எவ்வளவு தரவேண்டும் என்று தெரியுமா, என்று ரெயில்வே போலீசார் சொல்ல,    இலவச விளம்பர பார்ட்டி கையில் காலில் விழுக நோ எக்ஸ்க்யூஸ் 600R தண்டனையுடன் 3 நாட்கள் உள்ளே தள்ளிவிட்டார்கள்
இது குறித்து மத்திய ரெயில்வே உயர் பாதுகாப்பு அதிகாரி எஸ்.சி பூரியிடம்  கேட்ட போது:-
ஆமா சமீபத்தில் தான் இந்த ஆபரேசனை ஆரம்பித்து உள்ளோம். இவர்கள் பணம் தந்து விளம்பரம் செய்யும் விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் மறைக்கும் அளவிற்கு தேவையில்லாததை ஒட்டி விடுகிறார்கள். சிலர் தங்களிடம் போன் செய்யும் பலரை ஏமாற்றி பணம் பிடுங்கும் செயலையும் செய்து வருகிறார்கள். இவர்களை வழிக்கு கொண்டு வர இந்த ஆபரேசன், இவர்களை பிடிப்பது மிகவும் எளிது அவர்களே போன் நம்பர் வேறு எழுதி வைத்து இருக்கிறார்கள். இரண்டு வாரங்களில் 269 இலவச விளம்பர நபர்கள் கைது செய்யபட்டு தண்டிக்கபட்டு விடுவிக்கபட்டுள்ளனர். முதல் முறை பிடிபடுபவர்கள் 3 நாள் சிறைதண்டனையுடன், 600 தண்டத்தொகையுடன் விட்டு விடுகிறோம். மீண்டும் பிடிபட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்போம், இதுவரை தண்டனைத் தொகையாக 40,700ரூ வரை வசூலித்து இருக்கிறோம் என்று எஸ்.சி பூரி கூறினார்.
     மத்திய ரெயில்வே கமர்சியல் பிரிவு உயரதிகாரியான- மீடியாவிடம் பேச உரிமை பெற்றவர்- ஸ்ரீனிவாஸ் முட்கிர்க்கர் அவர்கள் கூறியதாவது:-
வருடத்திற்கு ரெயில்வேயில் 3 கோடி ரூபாய் இது போன்று ஸ்டிக்கர் ஒட்டுபவர்களால் இழக்கிறோம். ஏன் என்றால் விளம்பரதாரர்கள் ரெயில் பெட்டி எங்கும் ஒட்டபட்டு இருக்கும் இது போன்ற ஸிடிக்கர்களை பார்த்த உடன்நாம் ஏன் பணம் கொடுத்து விளம்பரம் செய்ய வேண்டு என்ற நினைப்பில் சும்மா இருந்து விடுகிறார்கள். எங்களுக்கு கடந்த 3 வருடமாக ரெகுலாராக விளம்பரம் தரும் விளம்பர தாரர்கள் கூட விளம்பரம் தரமறுக்கின்றனர்,  அதனால் தான் ரெயில்வே போலீசாரும் நாங்களும் சேர்ந்து இந்த நடவடிக்கை எடுத்தோம் என்றார்.
   நீங்கள் லோன் ஏஜென்ஸி என்றால் உங்கள் நம்பரை ரெயிலில் தயவு செய்து ஒட்டாதீர்கள் ஒட்டினால் ரெயில்வே போலீசார் ஓட்டி கொண்டு சென்று விடுவார்கள்

 
Quick Gun sarvan Warn you

1 கருத்து: