9 செப்., 2009

உலக எழுத்தறிவு தினம்

மும்பை, செப்.08
    உலக எழுத்தறிவு தினம், எழுத்தறிவு என்ற உடனே படிப்பவர்கள் மட்டும்
நினைவிற்கு வரக்கூடாது. கேட்பது, எழுதுவது, வாசிப்பது என மூன்றுமே எழுத்தறிவிற்குள் அடங்கும்.
இந்தியாவை பொருத்தவரை இந்தியாவிற்கு எழுத்தறிவு என்பது 1500-களுக்கு பிறகு தான் எழுத்தறிவு தொடர்வண்டி கிளம்பியது, குறிப்பாக சொல்ல போனால் இன்று கேரளா எழுத்தறிவில் முதலிடமும், தென் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு கிருஸ்தவ மிஸினரிகள் தான் முக்கிய காரணமாக இருந்தனர், கிருஸ்தவ மிஸினரிகள், இந்தியா வரக்காரணம், பைபிளில் சாலமன் அரசனுக்கு சென்ற மயில் இறகும், சேர சோழர்கள் பாண்டியர்கள் கொண்டு சென்ற யானை தந்தம், மயிற்பீலி, ஏலக்காய், மிளகு, மற்றும் முத்து போன்றவைகள்.
மிஸினரிகள் வருவதற்கு முன்பு இந்தியாவில் குரு குல வழி கல்வி மட்டும் தாம், முதலாம் நூற்றாண்டில் முக்கியமாக முவேந்தர்களின் ஆட்சியில் தலைமுறை கல்வியாளர்கள் ஊர் ஊராக சென்று கல்வி கற்று வந்தார்கள். ஆனால் மூவேந்தர்களின் ஆட்சி மறைந்த பிறகு குருகுல கல்வி முறை மீண்டும், தலையெடுக்க துவங்கியது. இதன் காரணமாக தமிழகம் எங்கும் கல்வியில் ஒரு மந்தமான சூழல் சுமார் 13 நூற்றாண்டுகளாக இருந்தது. கல்வி என்பது உயர்பிரிவினருக்காக என்று எழுதாத சட்டமாகி விட்டது. நாயக்கர்கள் ஆட்சி காலத்திலும் சரி , கேரள வர்மர்களின் ஆட்சிகாலத்திலும் சரி, மதுரை, நெல்லை என தென் தமிழக பகுதிகள் கல்வியில் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தன. இந்த நிலையில் தான் கேரளாவில் 1400-களில் போர்ச்சுகீஸியர்கள் வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து பல கிருஸ்துசபைகள் கிருஸ்துவமதத்தை பரப்ப இந்தியாவிற்கு போதகர்களை அனுப்ப ஆரம்பித்தார்கள். ஆரம்ப காலத்தில் அப்படி வந்தவர்களின் ஒருவரால் தான் இன்று தென் தமிழகம் மட்டுமல்ல கேரளா முதலாம் இடம் அடையவும் காரணமாக இருந்தார். 
அவர் தான் புனித பிரான்ஸிஸ் சவேரியார். கோவாவை விட்டு கிளம்பும் வரை மதத்தை பரப்பும் ஒரு போதகராகத்தான் இருந்தார். ஆனால் கோவாவில் இருந்து கொச்சி சென்று கொண்டு இருக்கும் போது அவருடன் பயணபட்ட தூத்துகுடியை சேர்ந்த மீனவர்கள் சிலரிடன் அந்தமக்களின் நிலையை கேள்விபட்டார். கோச்சி சென்ற சில நாட்களின் மீனவர்களின் வழிகாட்டலில் தூத்துக்குடி வந்து இறங்குகிறார். இங்கு இருந்துதான் தென் தமிழகத்தின் கல்வி வசந்த காலம் ஆரம்பிக்கிறது.
முதல் முதலாக ஆரம்பிக்க பட்ட அச்சகம் தாமிர பரணி தனது தாயிடம் இளைப்பாரும் சிறிய கிராமமான புன்னை காயல் என்னும் இடத்தில் ஆரம்பிக்க பட்டது. வருடம் 1545 ஆம் தமிழகத்தில் அச்சகம் தோன்றி வெற்றிகரமாக கிராமம் கிராமாக கல்வி சென்று கல்வி புரட்சி நடத்த துவங்கினார். அச்சகம் ஆரம்பித்தவர் ஹென்றி ஹென்ற்ஸ்கஸ்
ஆனால் கோவாவில் புனித பவுல் கல்லூரியில் தான் முதல் முதலாக பிரிண்டிங் பிரஸ் ஆரம்பித்தாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள் ஆனால் வருடம் 1556-ல் தான் பிரிண்டிங் பிரஸ் கோவாவிற்கு லிஸ்பனில் இருந்து அச்சு இயந்திரம் வரவழைக்க பட்டு நிறுவப்பட்டது. அப்படி என்றால் இதற்கு 10 வருடத்திற்கு முன்பு தமிழகத்தில் இருந்தது.  ஹென்றி ஹென்றிக்கஸ் தானாகவே உலோகத்தில் உருவாக்கிய அச்சு எந்திரம் தாம் இந்தியாவின் முதல் அச்சு எந்திரம், அந்த பெருமை புன்னை காயலை போய் சேரும். அந்த அச்சு எந்திரமும் அதில் பதிக்கபட்ட சில பதிப்புகளும் , கேரள உண்ணிவர்மனின் தலைமுறை தகவல்களாக பதிக்கபட்ட காகிதங்களும் இன்னும் திருவனந்த புரத்தில் இருக்கின்றன.

அதன் பிரதிகள் சேவியர் கல்லூரியில் FRSC நூலகத்திலும் கிடைக்கும். 

அதன் பிறகு 200 வருடங்கள் கழித்தும் மதுரையில் ஓலையில் எழுதியும் , ஆடைகளில் வரைந்தும் எழுதி கொண்டு இருந்தனர். இந்த வகையில் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள். அதன் பிறகு ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் ஆட்சி செய்யும் போது கல்வியையும் நமக்கு கற்று கொடுத்தனர். இந்தியாவிலேயே முதல் முதலாக அச்சகம் தோன்றிய தமிழகம் இருந்தும் நாம் இன்னும் கல்வியில் முதல் ஐந்து இடத்தை கூட பிடிக்கவில்லை என்றால் அதற்கு காரணம் என்ன வென்று தெரியவில்லை, ஆனால் கேரளா சேவியரின் சேவையை முழுமையாக ஏற்றுகொண்டது.  அதன் காரணமாக கேரளாவின் கிராமம் கிராமாக பள்ளிகள் ஆரம்பிக்க பட்டன. விளைவு கல்வி 1600- களின் ஆரம்பத்தில் ஏறத்துவங்கி இன்றுவரை இறங்கவே இல்லை, ஒரு வேளை போர்ச்சுகீஸியர்கள் நேராக வங்காளம் சென்று இறங்கி இருந்தால் இன்று தமிழகமும் பிகாராகவும் அதைவிட பரிதாப நிலையிலும் இருந்து இருக்கும்.

தமிழ் நாடு 06 இடம் , கேரளா தொடர்ந்து முதலாவது இடம், மிஸோராம் தொடர்ந்து இரண்டாவது, கோவா, மராட்டியம் , மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் மூன்று நான்கு ஐந்தாவது இடங்களை பிடிக்கிறது, வழக்கம் போல் பிகார் கடைசி இடம்.
இன்று நாடு முழுவதும் எழுத்தறிவை வளர்ப்பதற்காக சர்வ சிக்ஸா அபியாந் - அனைவருக்கு கல்வி இயக்கம்-, ராஷ்டிரிய சாக்சரதா  மிஸன் தேசிய எழுத்தறிவு இயக்கம்- இன்னும் பல உண்டு ஆனால் இதன் செயல்பாடுகள் எல்லாம் காமடியாக இருக்கிறது. தூர்தர்ஷனில் மதியம் 3 மணிமுதல்  4மணி வரை ஒளிபரப்பாகும் இதன் நிகழ்ச்சிகளை பார்க்க யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்திய அரசு வருடம் தோறும் எழுத்தறிவு தருவதற்காக சுமார் 600 கோடிகளை வாரி கொட்டுகிறது. ஆனால் இந்த கோடிகள் கடைக்கோடி வரை செல்வதற்குள்
கோவிந்தா ஆகிவிடுகிறது. இந்தியாவும் அனைத்து சிக்ஷா அபியான் -எழுத்தறிவு இயக்கம் அனைத்தும் தனியாரை சார்ந்துதான் இருக்கிறது. இப்போது புரிந்திருக்கும் கோடிகள் ஏன் அதன் நோக்கத்திற்காக செலவு செய்யபடவில்லை என்று.
  நாம் செய்யவேண்டியது எல்லாம் ஒன்று மட்டும் தான் அனைவரையும் மனித நேய பார்வை கொண்டு பார்த்து நேரம் கிடைக்கும் போது ஏழைகுழந்தைகளுக்கு, தாழ்த்தபட்ட குழந்தைகளுக்கு எழுத்தறிவு கற்று கொடுங்கள், நாளை நல்ல உலகம் மலர எழுத்தறிவு என்னும் விழி கொடுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக