10 செப்., 2009

கண்களை காப்பாற்றூங்கள்

  மும்பை பைகுல்லாவில் இருந்து அஞ்சலி மேடம் ஒரு நல்ல தகவல் சொல்லி இருக்கிறாங்க.

{கண்களை எப்படி பாதுகாப்பது என்ற நல்ல சேதி}
நமக்காக கண்கள் எவ்வளவு கஷ்டபடுது தெரியுமா, நாம் இமைகளை திறந்ததும், எதிரில் உள்ளதை அப்படியே காட்டுவது நமது கண்கள் மட்டும் தான் கண்களுக்கு நம் மீது அவ்வளவு காதல், ஆனால் நாம் கண்களை என்றாவது கவனித்து இருக்கிறோமா, நாளாக நாளாக ஒவ்வொரு செயலும் கண்களை கடுமையாக பாதிக்கிறது.
  • டி.வி பார்த்தல்,
  • டிஜிடல் பேனர்களை பார்த்தல்,
  • சிரியல் பல்புகளை பார்த்தல்,
  • அதிக ஒளியுடைய ஹோலோஜன் விளக்கு ஒளி
 அப்படின்னு  அன்றாடம் நாம் அதிகமாக கண்களை தொந்தரவு படுத்தி வருகிறோம், இதெல்லாம் அத்தியாவசியமாகியும் போய்விட்டது. அதை விட கணணி என்னதான் பில்டர் கிளாஸ், எல்,சி,டி என்று வந்து விட்டாலும் கணணியில் இருந்து வெளிவரும் ஒளிச்சிதரல் நமது கண்களுக்கு பாதிப்பு தாங்க, அதுக்காக கணணியின் முன்பு உட்காராம இருக்க முடியுமா, ஏதாவது பிரச்சனை வந்தால் மருத்துவரிடம் சென்று ஐ டிராப் போட்டு கொள்கிறோம், உள்ளுக்குள் மாத்திரை சாப்பிடுகிறோ,ஐ.டிராப், ஆரம்ப காலங்களில் நமக்கு நன்மை செய்வது போல் இருந்தாலும் நாட்பட நாட்பட நம்ம கண்களின் மேல் உள்ள இயற்கையாகவே அமைந்த மிகவும் மெல்லிய பாதுகாப்பு படலத்தை சிதைத்து விடுகிறது. அது மட்டும் இல்ல இந்த பிரச்சனை ஜீன்களின் மூலம் நம்ம தலைமுறைக்கும் போய்விடுகிறது. இது நிறுபிச்சிருக்காங்கா, 
அப்ப வேற வழியே இல்லையா என்றால் இருக்குங்க ரொம்ப அழகான வழி, மிகவும் எளிமையான வழி இதை தொடர்ந்து செய்து வந்தால் நம்ம கண் நம்மை காதலிக்கும் நிஜம் தாங்கஅதாவது பியூட்டி பார்லர்ல நம்மகிட்ட ஆயிரம் ரெண்டாயிரம் வாங்கிவிட்டு வெறும் ஒரு ரூபா வெள்ளிரிக்காவை அதிலையும் கஞ்சதனமா கொஞ்சூண்டு நம்ம கண்ணில் வைத்து விட்டு சில நிமிடங்களில் எடுத்து விடுகிறார்கள். இதனால் எந்த ஒரு நன்மையும் இல்லைங்க, இதே ஒரு ரூபாய் வெள்ளரிக்காதாங்க நமது கண்கள் நம்மை காதலிக்கும் காரணக்காரியமா இருக்கிறது.
அதாவது வேலை பார்த்து முடிந்த பிறகு தூங்க போகும் போது ரெண்டு துண்டு வெள்ளரிக்காயை கண்களை மூடி இமைகளின் மேல் வைத்து சுத்தமான துணியால் கண்களை மெல்ல கட்டி விட்டு தூங்கி விடுங்கள், -மெதுவாக கட்ட வேண்டும் ரொம்ப இருக்கமா கட்ட வேண்டாம்- இதை நீங்க முதல் நாள் செய்த உடனே உங்களுக்கு ரிசல்ட் தெரிந்துவிடும், இது நாள் வரை காலையில் எழுந்த உடன் இருந்த கண் எரிச்சல் போயே போச்சே, இதை தொடர்ந்து செய்து வந்தால் நம்ம கண்களின் உள்ள பாதுகாப்பு படலம் வலுபெற்று பார்வை திறன் கூடிப்போகும்,

கவனத்தில் கொள்ள வேண்டியது மெல்லிசாக வெள்ளிரிக்காயை வெட்டி இமைமேல் வைத்து அதிக அழுத்தமில்லாமல் கட்ட வேண்டும். ரொம்ப எளிதான மருத்துவங்க, ஆயிரக்கணக்கில் செலவு செய்வதை விட வெறும் ஒரு ரூபாயில் ஐந்து நாட்களை ஓட்டி விடலாம், ஒரு வெள்ளிரிக்காயை ஐந்து நாட்கள் கணக்கில் வெட்டி பயண்படுத்த வேண்டும், இது    தஞ்சையில் இருக்கும் அவர்களின் அத்தை கூறினார்களாம்,


இதை சொன்ன அஞ்சலி மேடம் மும்பை ஹெச்ஸாட் வே டெக் லிட் புரோகராம் லீடரா இருக்காங்க அஞ்சலி மேடம் இப்ப தெரியுது உங்க கண் ஏன் இவ்வளவு பெரிதா அழகா இருக்கு என்று
நன்றி மேடம் 
  மேடம் உங்களுக்காக உஸ்தாத் நுஸ்ரத் பதே அலிகான் பாடிய "இந்த அழகிய
கண்களில் நான் மயங்குவதில் இருந்து இறைவா என்னை காப்பாற்று"
karpalaa sarpe aayee thu leekkin uSnu vaaLoose alla pachalee
அதாவது -கர்பலா- சுடுகாடு  போகும் நிலை வந்தால் கூட இந்த அழகிய கண்களில் இருந்து என்னை காப்பாற்று  கண்களின் அழகை பயங்கரம் என்று சொல்லவில்லை,

  கொள்ளை அழகு என்று மிகவும் உயர்ந்த பதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

1 கருத்து: